Tag சிறுகதைகள்

பதினெட்டாம் பெருக்கு – ந. பிச்சமூர்த்தி

பதினெட்டாம் பெருக்கு ந. பிச்சமூர்த்தி பதினெட்டாம் பெருக்கு ந. பிச்சமூர்த்தியின் முதல் சிறுகதை தொகுதி. இருபது ஆண்டுகளுக்கு முன் வெளியானது. முதல்பதிப்பு குறைந்த பிரதிகளே அச்சிடப்பட்ட புத்தகம், எவ்வளவோ இலக்கிய வாசகர்கள் கண்ணில் பட்டதே இல்லை. இருபது ஆண்டுகள் கழித்து இரண்டாவது பதிப்பு வெளிவருகிறது. தமிழ் சிறுகதைத் துறையில் விரல்விட்டு எண்ணக் கூடிய சிறந்த கதைக்காரர்களில்…

அதிசயப் பெண் – கி. வா. ஜகந்நாதன்

அதிசயப் பெண் கி. வா. ஜகந்நாதன் கலைமகள் ஆசிரியர் உயர்திரு கி. வா. ஜகந்நாதன் அவர்களைத் தமிழ் உலகம் நன்றாக அறியும். இணையற்ற ஆசிரியராக விளங்கும் அவர்கள் அவ்வப்போது குழந்தைகளுக்காக எழுதிய கதைகள் இவை. தமிழ்த் தாத்தா டாக்டர் உ. வே. சாமிநாதையர் அவர்களுடைய அன்புக்குகந்த மாணவராகப் பயின்ற ஆசிரியர் அவர்கள் அந்த மரபிலேயே தமிழ்…

உயிரின் அழைப்பு – கு. ப. சேது அம்மாள்

உயிரின் அழைப்புகு. ப. சேது அம்மாள் மறுமலர்ச்சி இலக்கியத்தில் மணிக்கொடி யுகம் ஒரு முக்யமான காலமாகும். அக்காலத்தில்தான் பல மணியான இலக்கிய கர்த்தாக்கள் தோன்றினார்கள். அவர்களைப் பின்பற்றிப் பலர் இலக்கியப் பணியில் ஈடுபடத் தொடங்கியதும் அந்தக் காலத்தில் தான். சிறு கதை மன்னர் என்று அழைக்கப்படும், கு.ப.ரா. (கு. ப. ராஜகோபாலன்) புதுமைப்பித்தன், (சோ.விருத்தாசலம்) நா.…

தப்பிவிட்டார்கள் – கலைஞர் மு. கருணாநிதி

தப்பிவிட்டார்கள் கலைஞர் மு. கருணாநிதி ‘தப்பிவிட்டார்கள்’ – சமூகத்தின் உண்மைப் பிரதிபலிப்புகள் நிறைந்த கதைத் தொகுதி. சமுதாயக் கொடுமையினின்று தப்பிவிட்டவர்கள், அண்ணனென எண்ணி ஆசைப்பார்வை பார்த்தவளை தன்காமத்துக்குப் பலியாக்க எண்ணும் சபலக்காரர்கள், சமூகத்தின் கோரப்பிடியால் குற்றம்சாட்டப்படும் நிரபராதி, உதவி செய்ய வந்தவரிடமே ஏமாற்று வித்தையைக் காட்டி பின் தானே மற்றொருவனால் ஏமாற்றப்படும் மோசக்காரன் ஆகிய சமூக…

கண்ணடக்கம் – கலைஞர் மு. கருணாநிதி

கண்ணடக்கம் கலைஞர் மு. கருணாநிதி கண்ணடக்கம் பக்தன் ஒருவன் பதைக்கப் பதைக்க ஓடினான். அவன் கால்கள் தடுமாறின. வியர்வையால் மேனி குளமாயிற்று தலைமுடி அலங்கோலமாய் விரிந்து காற்றில் பறந்தது. நெற்றியிலே பூசியிருந்த திருநீறும், அதன் மேல் வைத்திருந்த அகலமான குங்குமப் பொட்டுங் கூட வியர்வையிலே கரைந்து ரத்தமும் சீழும் போல அவன் கன்னங்களில் வழிந்து கொண்டிருந்தன.…

கோவூர் கிழார் – கி. வா. ஜகந்நாதன்

கோவூர் கிழார்கி. வா. ஜகந்நாதன் 1. சோழன் நலங்கிள்ளி “இப்போது பட்டத்துக்கு வந்திருக்கும் மன்னன் இளமையுடையவன் என்று சொல்கிறார்களே!” “சொல்கிறது என்ன? இளமையை உடையவன்தான். அதனால் என்ன? சிங்கத்தின் குட்டியென்றால் யானையை வெல்லாதா?” “எத்தனையோ வீரச் செயல்களைச் செய்து தம் வெற்றியைப் பிற நாடுகளிலும் நாட்டிய மன்னர்கள் பிறந்த குலம் ஆயிற்றே, சோழகுலம்! இந்தக் குலத்தின்…

கிழவியின் தந்திரம் – கி. வா. ஜகந்நாதன்

கிழவியின் தந்திரம் கி. வா. ஜகந்நாதன் இந்தப் புத்தகத்தில் குழந்தைகள் படித்து மகிழ்வதற்கு உரிய பதினைந்து கதைகள் அடங்கியிருக்கின்றன. இந்தக் கதைகள் புலவர்களுடைய ஆற்றலும், அறிவுடைய பெண்களின் சாமார்த்தியமும், மெய் பேசுதல், தாயினிடம் அன்பு வைத்தல், விடா முயற்சி செய்தல், தர்மம் தலைகாத்தல் முதலிய நீதிகளைப் புலப்படுத்துகின்றன. தமிழ்ப் புலவர்களின் அறிவாற்றலை அறிந்து விளங்கும் வகையில்…

ஹாஸ்ய வியாசங்கள் தமிழில் – பம்மல் சம்பந்த முதலியார்

ஹாஸ்ய வியாசங்கள் தமிழில் பம்மல் சம்பந்த முதலியார் 1. சென்னை விநோதங்கள் சென்ன பட்டணம் இந்தியாவில் மிகவும் குறைந்த நாகரீகமுடைய நகரமென்று, கல்கத்தா பம்பாயிலுள்ள ஜனங்கள் ஏளனம் செய்கிறதாகக் கேள்விப்பட்டேன். இவ்விழிசொல் ஏற்றதா, இல்லையா, என்று பார்க்கும் பொருட்டுச் சென்னையிலுள்ள அநேக இடங்களைச் சுற்றிப் பார்த்து வந்தேன். முடிவில், “அவ்விழி சொல் சென்னைக்கு ஏற்றதல்ல; சென்னையிலுள்ள…

அமுத இலக்கியக் கதைகள் – கி. வா. ஜகந்நாதன்

அமுத இலக்கியக் கதைகள் கி. வா. ஜகந்நாதன் தமிழ் நாட்டில் பழங்கால முதற்கொண்டு வீரம் மிக்க மன்னர்கள் வாழ்ந்தார்கள்; வள்ளல்கள் விளங்கினர்கள். அவர்களுடைய புகழைப் புலவர்கள் பாடினர்கள். அந்தப் பாடல்கள் புலவர்களின் பெருமையையும், பாடப்பெற்ற பெருமக்களின் பெருமையையும் ஒருங்கே தெரிவிக்கின்றன. அந்தப் பாடல்களால் பல வீரர்களுடைய வரலாறுகள் தெரிகின்றன; பெரு மன்னர்களும் குறுகிலமன்னர்களும் செல்வர்களும் செய்த…