பாரதி விளக்கம்
ஸ்ரீ சுத்தானந்த பாரதியார்

கவிக்குயில் நினைப்பு

உன்னை நினைக் கையிலே – எங்கள்
உள்ளத்திலே வீர வெள்ளம் பெருகுது!
வன்னக் கவிக் குயிலே – முகம்
வாடித் தவிக்குந் தமிழுக்கு வான்மழை
என்ன இரங்கி வந்தாய்-இருள்
இன்னல் பிளந்தினி அச்ச மில்லையென்றெம்
அன்னை விடுதலைக்கே – பொங்கும்
ஆவேச மின்னெனத் தாவிவந் தாய்-வாழ்க ! (உன்னை)

கண்க ளிரண்டெனவே-வீரக்
காளைக ளோடிளங் காதல் மயிலெனப்
பெண்கள் தலைநிமிர- ஜய
பேரிகை கொட்டியிவ் வூரை யெழுப்பினை
புண்களை மாற்றிவிட்டாய் – பசும்
பொன்னு மணியுங் கனலும் பொலிதமிழ்ப்
பண்கள் பொழிந்ததெல்லாந் – தாய்ப்
பாலென நாடியிற் பாய்ந்து கலந்தன (உன்னை)

வெற்றி முரசடிப்போம்-ஜய
வீர சுதந்தரத் தாயின் மணிக்கொடி
சுற்றி நடமிடுவோம் – நம்மைத்
துண்டு செய் மாயத் துயர்களை இன்றுடன்
எற்றி யெறிந்திடுவோம் – மாந்தர்
எல்லாரும் ஓர்குல மென்று சமதர்மம்
பற்றிமுன் னேறிடுவோம்- சக்தி
பாரதிக் குன்கவி யார மணிகுவோம் (உன்னை)

சுத்தானந்த பாரதி.

இந்த புத்தகம் பிடித்திருந்தால்....

மதிப்பிட நட்சத்திரத்தைச் சொடுக்கவும்!!!

சராசரி மதிப்பீடு 0 / 5. வாக்கு எண்ணிக்கை: 0

இந்தப் பதிவிற்கு மதிப்பீடு அளிக்கும் முதல் நபராக இருங்கள்!!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

🛒

உங்களுக்குப் பிடித்த புத்தகங்களை ஆன்லைனில் பெற !