
சைவத்தின் சமரசம்
திரு. வி. கலியாணசுந்தரனார்
கடவுள் திருத்தொண்டு
தேவாரம்
நன்க டம்பனைப் பெற்றவள் பங்கினன்
தென்க டம்பத் திருக்கரக் கோயிலான்
தன்க டன்னடி யேனையுந் தாங்குதல்
என்க டன்பணி செய்துகி டப்பதே.
– அப்பர்
திருவாசகம்
அன்றே யென்றன் ஆவியும் உடலும்
உடைமை யெல்லாமுங்
குன்றே யனையாய்! என்னையாட் கொண்ட
போதே கொண்டிலையோ
இன்றோ ரிடையூறு எனக்குண்டோ
எண்டோள் முக்கண் எம்மானே!
நன்றே செய்வாய் பிழைசெய்வாய்
நானோ இதற்கு நாயகமே.
– மாணிக்கவாசகர்
பெரிய புராணம்
வேதநெறி தழைத்தோங்க மிகுசைவத் துறைவிளங்கப்
பூதபரம் பரைபொலியப் புனிதவாய் மலர்ந்தழுத
சீதவள வயற்புகலித் திருஞான சம்பந்தர்
பாதமலர் தலைக்கொண்டு திருத்தொண்டு பரவுவாம்.
– சேக்கிழார்



