Tag கி. வா. ஜகந்நாதன்

பழனித் திருநாமம் – கி. வா. ஜகந்நாதன்

பழனித் திருநாமம் கி. வா. ஜகந்நாதன் முன்னுரை “ஒன்றரை மணி நேரமா பேசுகிறீர்கள்?” ”ஆமாம்,” “எத்தனை பாடல்கள் சொல்வீர்கள்?” “அநேகமாக ஒரு பாடலுக்கு விளக்கம் சொல்வேன். சில சமயங்களில் பாதிப் பாடலோடு நின்றாலும் நின்றுவிடும்.” “அந்தப் பாடல்கள் அவ்வளவு கடினமானவையா? பொருளை விளக்க அவ்வளவு நேரம் எதற்கு?” “நான் பாடலை விளக்குவதில்லை; அதாவது அதில் உள்ள…

சித்தி வேழம் – கி. வா. ஜகந்நாதன்

சித்தி வேழம் கி. வா. ஜகந்நாதன் முன்னுரை கவிஞர்கள் மனம் கனிந்து பாடும் பாடல்கள் நல்ல வடிவுடன் ஆழ்ந்த பொருளுடன் விளங்குகின்றன. அவற்றில் மனத்தால் ஒன்றிப் போனால் எங்கெங்கோ செல்லலாம். பாடலாகிய வாசலின் வழியே நுழைந்து பல அழகிய காட்சிகளைக் காணலாம். செறிவும் உணர்ச்சியும் உடைய அத்தகைய பாடல்களைப் பல மணி நேரங்கள் பாடிப் பாடி…

ஒன்றே ஒன்று – கி. வா. ஜகந்நாதன்

ஒன்றே ஒன்று கி. வா. ஜகந்நாதன் பதினோராந் திருமுறை என்ற பெயரே சைவத் திருமுறைகளைக் கோவை செய்து வரிசைப்படுத்தி அமைத்த செயலைக் குறிப்பிக்கிறது. இதற்கு முன் பத்துத் திருமுறைகள் உள்ளன என்பதை இப்பெயர் அறிவிக்கிறதல்லவா? நம்பியாண்டார் நம்பிகள், பதினொரு திருமுறைகளைத் தொகுத்தார். பதினோராந் திருமுறையில் ஆலவாயுடையார் அருளிச் செய்த திருமுகப் பாசுரத்தை முதலில் வைத்துப் பட்டினத்துப்…

இமயமும் குமரியும் – கி. வா. ஜகந்நாதன்

இமயமும் குமரியும் கி. வா. ஜகந்நாதன் முகவுரை தமிழ் இலக்கியங்களிலே புகுந்து இன்பம் நுகரும் போது எத்தனையோ கருத்துக்கள் தோன்றுகின்றன. ஒரே புலவர் பல இடங்களில் சொல்லியிருக்கும் செய்திகளை ஒப்பு நோக்குவதில் ஒருவகைச் சுவை உண்டாகிறது. ஒரே கருத்தைப் பல புலவர்கள் வெவ்வேறு நூல்களிற் சொல்லியிருப்பதைக் கவனிக்கும் போது ஒருவகை இன்பம் எழுகிறது. சிலசில சமயங்களில்…

தமிழின் வெற்றி – கி. வா. ஜகந்நாதன்

தமிழின் வெற்றிகி. வா. ஜகந்நாதன் முன்னுரை இந்தப் புத்தகத்தில் வரும் பத்து வரலாறுகளும் தமிழ் புலவர்களைப் பற்றியவை. அவர்கள் தம்முடைய கவித் திறத்தால் பிறரை வியப்புள் ஆழ்த்துவதும், குற்றம் தோன்றாமல் மாற்றிச் சமாதானம் சொல்வதும், உயிரை மீட்பதும், தக்காரை வாழ்த்தித் தகாதவரைக் குறிப்பாகப் பழிப்பதும், பாடல்களை வசையாகத் தொடங்கி இசையாக மாற்றுவதும், மாறுபட்ட கருத்துடையவர்களையும் மாற்றிப்…

தமிழ் வையை – கி. வா. ஜகந்நாதன்

தமிழ் வையை கி. வா. ஜகந்நாதன் தமிழில் உள்ள பாக்கள் நான்கு வகைப்படும். வெண்பா, ஆசிரியப்பா, கலிப்பா, வஞ்சிப்பா என்ற பெயருடையன அவை. இவற்றிற் பல வகையும், இவற்றிற்கு இனமான செய்யுட்களும் உண்டு. இவற்றையன்றி வெண்பாவும் ஆசிரியப்பாவும் இணைந்து வந்த மருட்பா என்று ஒருவகைப் பா உண்டு. அது குறிப்பிட்ட சில பொருள்களைப் பாடுவதற்காக மட்டும்…

அப்பர் தேவார அமுது – கி. வா. ஜகந்நாதன்

அப்பர் தேவார அமுதுகி. வா. ஜகந்நாதன் தமிழ்நாட்டில் கோயில்கள் மிகுதி. சிவபெருமானுடைய திருக்கோயில்களும், திருமால் திருக்கோயில்களும் பல. “கோயில் இல்லா ஊரில் குடியிருக்க வேண்டாம்” என்றும், “ஆலயம் தொழுவது சாலவும் நன்று” என்றும் ஆன்றோர்கள் அறிவுரை கூறிய நாடு இந்த நாடு. சிற்பச் சிறப்பாலும் புராண வரலாற்றாலும் சிறப்பை உடையவை திருக்கோயில்கள். அவற்றில் தேவார திருவாசகங்களாலும்,…

எல்லாம் தமிழ் – கி. வா. ஜகந்நாதன்

எல்லாம் தமிழ் கி. வா. ஜகந்நாதன் இதற்குமுன் நான் எழுதியுள்ள புது மெருகு என்ற புத்தகத்தைப் போன்றது இது. சங்க நூல்களில் உள்ள குறிப்புக்களைக் கொண்டு பின்னிய வாலாறுகளும், பிற காலத்துச் சதகங்களிலும் தனிப்பாடல்களிலும் உள்ள செய்திகளைக் கொண்டு உருவாக்கிய கதைகளும், கேள்வியினால் தெரிந்தவற்றை ஆதாரமாகக் கொண்ட கதைகளும் இந்தப் புத்தகத்தில் இடம் பெற்றிருக்கின்றன. தமிழ்ப்…

ஆனந்தத் தேன் – கி. வா. ஜகந்நாதன்

ஆனந்தத் தேன் கி. வா. ஜகந்நாதன் முகவுரை தமிழ்நாட்டில் கடவுளை நினைப்பதற்கு வாய்ப்பாகப் பல அமைப்புக்களும், பொருள்களும் வழக்கங்களும் இருக்கின்றன. கோயில்கள், புராணங்கள், நூல்கள் ஆகியவை கடவுளின் நினைவை எப்போதும் பசுமையாக இருக்கும்படி செய்கின்றன. மக்களுக்கு இடும் பெயர்களும், பண்டிகைகளும் நினைவுக்கு உரமூட்டுகின்றன. கடவுள் ஒருவனே என்ற அடிப்படையான உண்மையை நாம் மறப்பதில்லை. ஆனாலும் அன்பர்களின்…

கவிஞர் கதை – கி. வா. ஜகந்நாதன்

கவிஞர் கதை கி. வா. ஜகந்நாதன் ஒளவைப் பாட்டி ஒளவைப்பாட்டி என்று சொன்னாலே ஒரு கிழ உருவம் உங்கள் மனக்கண்முன் தோன்றும். தமிழிலே அந்தப் பாட்டி பாடிய பாட்டுக்கள் பல உண்டு. நீங்கள் பள்ளிக் கூடத்தில் வாசிக்கிற ஆத்திசூடி, கொன்றைவேந்தன், நல்வழி இவையெல்லாம் அந்தப் பாட்டி பாடியவைகளே. ஆனால் அந்தப் பாட்டிக்கு முன்பே மற்றோர் ஒளவை…

🛒

உங்களுக்குப் பிடித்த புத்தகங்களை ஆன்லைனில் பெற !