சித்தி வேழம் 
கி. வா. ஜகந்நாதன்

சித்தி வேழம்
கி. வா. ஜகந்நாதன்

முன்னுரை


கவிஞர்கள் மனம் கனிந்து பாடும் பாடல்கள் நல்ல வடிவுடன் ஆழ்ந்த பொருளுடன் விளங்குகின்றன. அவற்றில் மனத்தால் ஒன்றிப் போனால் எங்கெங்கோ செல்லலாம். பாடலாகிய வாசலின் வழியே நுழைந்து பல அழகிய காட்சிகளைக் காணலாம். செறிவும் உணர்ச்சியும் உடைய அத்தகைய பாடல்களைப் பல மணி நேரங்கள் பாடிப் பாடி இன்புறலாம். பொருள் வளத்தைச் சிந்தித்துச் சிந்தித்து மகிழலாம்.

இந்தப் புத்தகத்தில் உள்ள கட்டுரைகளில் பெரும்பாலன அவ்வாறு சிந்தித்ததனால் உண்டான விளைவுகளே. முதல் இரண்டு கட்டுரைகளும் விநாயகப் பெருமானைப் பற்றியவை. ஏனையவை முருகப் பெருமானைப் பற்றியவை, முதல் கட்டுரையும் முடிவுக் கட்டுரையும் திருவிளையாடற் புராணத்தில் வரும் இனிய செய்யுட் களினூடே புகுந்து சிந்தித்த சிந்தனைச் சித்திரம்.

8 முதல் 18 வரையில் உள்ள கட்டுரைகள் சேந்தனார் பாடிய திருவிடைக்கழித் திருவிசைப்பாவிலுள்ள பதினொரு பாடல்களின் விளக்கம். முருகனைக் காதல் நாயகனாக வைத்துப் பாடிய பாடல்கள் அவை அவற்றை உரையாடலாக விரித்து விளக்கியிருக்கிறேன். பதினொரு பாடல்களுக்கும் ஒருவகையில் தொடர்பும் கூற முயன்றிருக்கிறேன்.

திருமுறைகளில் பல இடங்களில் முருகனைப் பற்றிய குறிப்புக்கள் இருக்கின்றன. அவற்றை யன்றி ஒன்பதாம் திருமுறையில் ஒரு பதிகமும், பதினோராந் திருமுறையில் ஒரு நூலும் முருகனைப் பற்றியனவாக உள்ளன. பதினோராந் திருமுறையில் உள்ளது. நக்கீரர் பாடிய திருமுருகாற்றுப்படை, ஒன்பதாந் திருமுறையாகிய திருவிசைப்பாவில் உள்ளது, இதிலுள்ள திருவிடைக்கழிப் பதிகம். இங்ககாலத்துக்குப் பின் தோன்றிய முருகனுடைய துதிகளில் சந்தப் பதிகமே பழையதென்று சொல்லலாம்.

யான் கண்ட நிகழ்ச்சியைக் கூறும் கட்டுரை ஒன்றும், அருணகிரியார் திருவுள்ளத்தைப் பற்றி ஆராயும் கட்டுரை ஒன்றும், முருகன் அழகைப் பற்றியது ஒன்றும் இதில் இடம் பெறுகின்றன.

இதில் காணும் பாடல்கள் இலக்கியச் சிறப்பும் பக்திச் சுவையும் இணைந்தவை. அன்பர்களின். ன் மனப்பெட்டகத்தில் வைத்துப் போற்றுவதற்குரியவை.

சித்தி வேழம் என்ற கட்டுரை தினமணி – கதிரிலும், கிழவியும் காதம் என்பது கல்கியிலும், யானைக்கும் கலங்கார் என்பது திருச் செந்தூர்க் கும்பாபிஷேக மலரிலும், முருகன் அழகு என்பது கந்தன் மலர் என்ற வெளியீட்டிலும், இடும்பைக் குன்று என்பது முருகன் மலரிலும், தொட்டிலில் வளரும் முருகன் என்பது குமர குருபரனிலும், மற்றவற்றில் இறுதிக் கட்டுரையை யன்றிப் பிற யாவும் திருப்புகழ் அமிர்தத்திலும் வந்தவை.

இவற்றை வெளியிட்ட பத்திரிகையாளருக்கும் வெளியிட்டாளருக்கும் என் நன்றி உரியது.

கி.வா.ஜகந்நாதன்

இந்த புத்தகம் பிடித்திருந்தால்....

மதிப்பிட நட்சத்திரத்தைச் சொடுக்கவும்!!!

சராசரி மதிப்பீடு 0 / 5. வாக்கு எண்ணிக்கை: 0

இந்தப் பதிவிற்கு மதிப்பீடு அளிக்கும் முதல் நபராக இருங்கள்!!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

🛒

உங்களுக்குப் பிடித்த புத்தகங்களை ஆன்லைனில் பெற !