freetamilbooks.com

freetamilbooks.com

மதமும் மனித வாழ்வும் – ப. ஜீவானந்தம்

மதமும் மனித வாழ்வும் ப. ஜீவானந்தம் முன்னுரை நமது வணக்கத்திற்குரிய தோழர் ப. ஜீவானந்தம் எழுதியுள்ள “மதமும்-மனித வாழ்வும்” என்கிற இந்த நூலுக்கு முன்னுரை எழுதும் பேறு எனக்குக் கிடைத்துள்ளதற்கு மகிழ்ச்சியடைகிறேன். தோழர் ஜீவானந்தம், தமிழகத்தில் தலைசிறந்த கம்யூனிஸ்ட் சிந்தனையாளர் இருவர்களில் ஒருவர். மற்றவர் தோழர் ம. சிங்காரவேலர். கம்யூனிஸத் தத்துவப் பிரச்சாரத்தையும், தமிழ் இலக்கியத்தையும்…

செந்தமிழ் மாலை – ரா. பி. சேதுப்பிள்ளை

செந்தமிழ் மாலை ரா. பி. சேதுப்பிள்ளை முன்னுரை அமிழ்தினும் இனிய தமிழ் மணம் கமழும் இத் திரு நாட்டில், தாய் மொழி அன்புதழைக்க வேண்டுமாயின் இளம்பருவத்தில் கல்வி கற்கும் மாணவர்க்கு இன் தமிழ்ச் சுவையை ஊட்டுதல் இன்றியமையாததாகும். இந்நோக்கத்தோடு செந்தமிழ்த்தேன் சொரியும் சிலப்பதிகாரம், மீனாட்சியம்மை குறம், குற்றாலக் குறவஞ்சி, முக்கூடற் பள், கலிங்கத்துப்பரணி, இராமலிங்க அடிகள்…

தமிழர் கண்ட காந்தி – ம. பொ. சிவஞானம்

தமிழர் கண்ட காந்தி ம. பொ. சிவஞானம் முன்னுரை காந்தியடிகளைப் பற்றிய இச்சிறு நூல் அப்பெரியாரின் மறைவுக்குப் பிறகு யான் “தமிழ் முரசில்” எழுதிவந்த கட்டுரைகளின் தொகுப்பே யாகும். காந்தியடிகளின் வாழ்நாளில் அவரைப் பின்பற்றிய தொண்டர்களில் யானும் ஒருவன் என்பதைத் தமிழகம் நன்கறியும். அடிகளின் அடிச் சுவட்டைத் தொடர்ந்து செல்லத் துவங்கிய பிறகு எனது வாழ்க்கையே…

தமிழ் வையை – கி. வா. ஜகந்நாதன்

தமிழ் வையை கி. வா. ஜகந்நாதன் தமிழில் உள்ள பாக்கள் நான்கு வகைப்படும். வெண்பா, ஆசிரியப்பா, கலிப்பா, வஞ்சிப்பா என்ற பெயருடையன அவை. இவற்றிற் பல வகையும், இவற்றிற்கு இனமான செய்யுட்களும் உண்டு. இவற்றையன்றி வெண்பாவும் ஆசிரியப்பாவும் இணைந்து வந்த மருட்பா என்று ஒருவகைப் பா உண்டு. அது குறிப்பிட்ட சில பொருள்களைப் பாடுவதற்காக மட்டும்…

திருவருட்பாச் சிந்தனை – க. வெள்ளைவாரணனார்

திருவருட்பாச் சிந்தனை க. வெள்ளைவாரணனார் முன்னுரை திருவிளங்கச் சிவயோக சித்தியெலாம் விளங்கச்சிவஞான நிலைவிளங்கச் சிவானுபவம் விளங்கத்தெருவிளங்கு திருத்தில்லைத் திருச்சிற்றம் பலத்தேதிருக்கூத்து விளங்க ஒளிசிறந்த திருவிளக்கேஉருவிளங்க உயிர்விளங்க உணர்ச்சியது விளங்கஉலகமெலாம் விளங்க அருள் உதவு பெருந்தாயாம்மருவிளங்கு குழல்வல்லி மகிழ்ந்தொருபால் விளங்கவயங்குமணிப் பொதுவிளங்க வளர்ந்தசிவக் கொழுந்தே! அண்ணாமலைப் பல்கலைக் கழகத்துத் தமிழ்த் துறைத் தலைவராய் விளங்கிய பன்மொழிப் புலவர்…

ஜாதி ஒழிப்பும் மொழிப் பிரச்சினையும் – ப. ஜீவானந்தம்

ஜாதி ஒழிப்பும் மொழிப் பிரச்சினையும் ப. ஜீவானந்தம் நூன்முகம் திருச்சியில், 1957 டிசம்பர் கடைசி வாரத்தில் நடைபெற்ற கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழகப் பிரதிநிதிகளின் விசேஷ மகாநாட்டில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களை விளக்கி தோழர் ஜீவா பொதுக்கூட்டத்தில் ஆற்றிய சொற்பொழிவே இப்பிரசுரம். கம்யூனிஸ்ட் சகாப்தம், ஜாதி ஒழிப்பும் திராவிடக் கழகமும், இந்தி – ஆங்கிலம் – தமிழ் ஆகியவற்றின்…

சிலம்பில் ஈடுபட்டதெப்படி – ம. பொ. சிவஞானம்

சிலம்பில் ஈடுபட்டதெப்படி ம. பொ. சிவஞானம் “சிலம்பில் ஈடுபட்ட தெப்படி?” என்ற வினாவை எழுப்பும் தலைப்புக்கு, ஒரே விடை என் மனைவி எம். எஸ். ராஜேஸ்வரியின் பொன்மொழிதான் என்பது என் பதிலாகும். நான் ஆகஸ்ட் கிளர்ச்சியின்போது மத்திய மாகாணத்திலுள்ள அமராவதி சிறையில் சரியாக ஓராண்டு காலம் அடைபட்டிருந்த போது, என் உடம்பு கரைந்து கரைந்து- எலும்பு…

அப்பர் தேவார அமுது – கி. வா. ஜகந்நாதன்

அப்பர் தேவார அமுதுகி. வா. ஜகந்நாதன் தமிழ்நாட்டில் கோயில்கள் மிகுதி. சிவபெருமானுடைய திருக்கோயில்களும், திருமால் திருக்கோயில்களும் பல. “கோயில் இல்லா ஊரில் குடியிருக்க வேண்டாம்” என்றும், “ஆலயம் தொழுவது சாலவும் நன்று” என்றும் ஆன்றோர்கள் அறிவுரை கூறிய நாடு இந்த நாடு. சிற்பச் சிறப்பாலும் புராண வரலாற்றாலும் சிறப்பை உடையவை திருக்கோயில்கள். அவற்றில் தேவார திருவாசகங்களாலும்,…

ஞானரதம் – சி. சுப்பிரமணிய பாரதியார்

ஞானரதம் – சி. சுப்பிரமணிய பாரதியார் பீடிகை பின்மாலைப் பொழுது. திருவல்லிக்கேணி, வீரராகவ முதலித் தெருவில்கடற்பாரிசத்தை நோக்கியிருக்கும் ஓர் விட்டு மேடையின் மீது சிரமபரிகாரத்தின்பொருட்டு ஓர் மஞ்சத்தின்மீது படுத்துக் கொண்டிருந்தேன். ஆனந்தகரமானகடற்காற்று, நான் படுத்திருந்த முன்னறையிலே நான்கு பக்கங்களிலிருந்தும்,கண்ணாடிச் சாளரங்களின் மூலமாகவும், புறக்கதவு நிலைகளின் மூலமாகவும்,வந்து நிரம்பிய வண்ணமாக இருந்தது. அந்தக் காற்றும் பின்மாலை யொளியும்கலந்ததினால் உண்டாகிய…

வள்ளலார் வகுத்த வழிகள் – பாலூர் கண்ணப்ப முதலியார்

வள்ளலார் வகுத்த வழிகள் பாலூர் கண்ணப்ப முதலியார் வள்ளலார் என்று இங்குக் குறிப்பிடப்பட்டவர் வடலூர் இராமலிங்க சுவாமிகளே ஆவார். இவர் மக்கள் நல்வழியில் சென்று உய்யும் பொருட்டுத் திருவருட்பா என்னும் சீரிய நூலைப் பாடி அருளியதோடு நில்லாமல், பற்பல உரைநடை நூல்களையும் எழுதியுள்ளார். அவ்வுரைநடை நூல்களில் அமைந்துள்ள கருத்துக்கள் அருமையும் பெருமையும் வாய்ந்தவை. ஆனால், மக்கள்…

🛒

உங்களுக்குப் பிடித்த புத்தகங்களை ஆன்லைனில் பெற !