freetamilbooks.com

freetamilbooks.com

கண்ணன் பாட்டு – மகாகவி சி. சுப்ரமணிய பாரதியார்

கண்ணன் பாட்டு மகாகவி சி. சுப்ரமணிய பாரதியார் 1. கண்ணன்- என் தோழன் புண்ணாகவராளி – திஸ்ரஜாதி ஏகதாளம் – வத்ஸலரஸம் பொன்னவிர் மேனிச் சுபத்திரை மாதைப்புறங்கொண்டு போவதற்கே – இனிஎன்ன வழியென்று கேட்கில், உபாயம்இருகணத் தேயுரைப் பான்; – அந்தக்“கன்னன் வில்லாளர் தலைவனைக் கொன்றிடக்காணும் வழியொன் றில்லேன் – வந்திங்குஉன்னை யடைந்தனன்” என்னில் உபாயம்ஒருகணத்…

குயில் பாட்டு – மகாகவி சி. சுப்ரமணிய பாரதியார்

குயில் பாட்டு மகாகவி சி. சுப்ரமணிய பாரதியார் 1. குயில் காலை யிளம்பரிதி வீசுங் கதிர்களிலேநீலக் கடலோர் நெருப்பெதிரே சேர்மணிபோல்மோகனமாஞ் சோதி பொருந்தி முறைதவறாவேகத் திரைகளினால் வேதப் பொருள்பாடிவந்து தழுவும் வளஞ்சார் கரையுடைய 5 செந்தமிழ்த் தென்புதுவை யென்னுந் திருநகரின்மேற்கே, சிறுதொலைவில் மேவுமொரு மாஞ்சோலை,நாற்கோணத் துள்ளபல நத்தத்து வேடர்களும்வந்து பறவைசுட வாய்ந்த பெருஞ்சோலை;-அந்தமாஞ் சோலை யதனிலோர்…

என் கடன் பணிசெய்துகிடப்பதே ! – திரு. வி. கலியாணசுந்தரனார்

என் கடன் பணிசெய்துகிடப்பதே ! திரு. வி. கலியாணசுந்தரனார் அறிவு விளக்கமும் அன்பு நிகழ்ச்சியும் மக்கள் வாழ்விற்கு இன்றியமையாதன. வினை இல்வழி அறிவும் விளக்கமுறாது; அன்பும் நிகழாது. அறிவு விளக்கத்துக்கும் அன்பு நிகழ்சசிக் கும் ஊற்றாயிருப்பது வினை. வினை, அறிவுக்கும் அன்புக்குங் கொழுகொம்பு போன்றது. ஆதலால், மக்கள் வினைவழி அறிவு பண்பட்டு அன்பு நிகழும். அறிவு…

சன்மார்க்க போதமும் திறவும் – திரு. வி. கலியாணசுந்தரனார்

சன்மார்க்க போதமும் திறவும் திரு. வி. கலியாணசுந்தரனார் ஒன்றே குலமும் ஒருவனே தேவனும் உலகம் பலவிதம் என்பது பழமொழி. இப்பழமொழி உலகத்தின் புறத்தோற்றத்தை ஒட்டிப் பிறந்தது. தோன்றும் புறத்தின் பலவிதம், அகத்தின் ஒரு விதத்தினது பரிணாமம். பன்மை காரணமா? காரியமா? ஒருமை இன்றிப் பன்மை இன்மையான், பன்மை காரியம் என்பதை நிறுவிக் காட்டுதற்கு விரிவுரை வேண்டுவதில்லை.…

சமரச சன்மார்க்கத் திறவு – திரு. வி. கலியாணசுந்தரனார்

சமரச சன்மார்க்கத் திறவு திரு. வி. கலியாணசுந்தரனார் முன்னுரை ‘ஒன்றே குலமும் ஒருவனே தேவனும்’ ‘சன்மார்க்க போதம்’ என்றொரு நூல் என்னால் இயற்றப்பட்டது. அந்நூலுடன் தொடர்பு கொண்டது இந்நூல். அது பொது நூல். இது சிறப்பு நூல். பொதுமையே சிலர் உள்ளத்தை நிறைவு செய்யும். சிலர் உள்ளத்தைப் பொதுமை நிறைவு செய்வதில்லை. இவருக்குச் சிறப்புந் தேவை.…

சைவத்தின் சமரசம் – திரு. வி. கலியாணசுந்தரனார்

சைவத்தின் சமரசம் திரு. வி. கலியாணசுந்தரனார் அணிந்துரை உலகுக்கு ஒருவனாய் நின்றாய் நீயே – அப்பர் உலகம் பலவிதம் என்பது பழமொழி. இப்பொது மொழி அவரவர் உலகுக்கேற்ற பொருளை விளக்குவது. ஒவ்வொருவர்க்கு ஒவ்வோருலகுண்டு. எனக்கும் ஓருலகுண்டு. அவ்வுலகில் நின்று பலவிதத்தை இருவிதத்தில் அடக்க எண்ணுகிறேன். ஒருவிதம் வேறுபடுஞ் சமயமெலாம் புகுந்து பார்க்கின், விளங்குபரம் பொருளே நின்…

சங்கிலிக் குறவன் – வெ. இராமலிங்கம் பிள்ளை

சங்கிலிக் குறவன் வெ. இராமலிங்கம் பிள்ளை கவிஞரின் ஆசி ★ சிரஞ்சீவி இராமனுக்கு ஆசீர்வாதம். உன் கடிதம் வந்தது. நான் டில்லிக்குப் போயிருந்து இரண்டு நாள் முன்தான் வந்தேன். உன்னைப் பார்க்க 4-9-1954 மாலை தமிழ்ப் பண்ணை பக்கம் வந்தேன். நீ அங்கே கிடைக்க வில்லை. ‘சங்கிலிக் குறவன்’ என்று நான் முன் எழுதிய கட்டுரைகளை…

சைவசித்தாந்த உண்மை வரலாறு – கா. சுப்பிரமணிய பிள்ளை

சைவசித்தாந்த உண்மை வரலாறு கா. சுப்பிரமணிய பிள்ளை சைவ சித்தாந்த உண்மை வரலாறு என்பது செந்தமிழ்ச் செல்வி என்னும் திங்கட்டாளின்கண் திருவாளர் சுப்பிரமணிய பிள்ளை யவர்கள் எழுதிய சைவசித்தாந்த வரலாறேயாம். தன்கண் கடவுள், உயிர், உலகம் என்ற முப்பொருள்களின் இயல்பும் தொடர்பும் எனைத்தென்றும், சைவநெறி பண்டைத் தமிழ் மக்கள் நெறி யேயாமென்றும், சிவம் என்ற சொல்…

தமிழின் வெற்றி – கி. வா. ஜகந்நாதன்

தமிழின் வெற்றிகி. வா. ஜகந்நாதன் முன்னுரை இந்தப் புத்தகத்தில் வரும் பத்து வரலாறுகளும் தமிழ் புலவர்களைப் பற்றியவை. அவர்கள் தம்முடைய கவித் திறத்தால் பிறரை வியப்புள் ஆழ்த்துவதும், குற்றம் தோன்றாமல் மாற்றிச் சமாதானம் சொல்வதும், உயிரை மீட்பதும், தக்காரை வாழ்த்தித் தகாதவரைக் குறிப்பாகப் பழிப்பதும், பாடல்களை வசையாகத் தொடங்கி இசையாக மாற்றுவதும், மாறுபட்ட கருத்துடையவர்களையும் மாற்றிப்…

மாணிக்கவாசகர் மாட்சி – மறைமலை அடிகள்

மாணிக்கவாசகர் மாட்சி மறைமலை அடிகள் இது, பல்லாவரம் பொதுநிலைக் கழக ஆசிரியர் மறைமலையடிகள் இயற்றிய “மாணிக்கவாசகர் வரலாறுங் காலமும்” என்னும் ஆராய்ச்சிப் பெருநூலின் முகவுரையினின்றும் எடுக்கப்பட்டது வான்கலந்த மாணிக்க வாசகநின் வாசகத்தைநான்கலந்து பாடுங்கால் நற்கருப்பஞ் சாற்றினிலேதேன்கலந்து பால்கலந்து செழுங்கனித்தீஞ் சுவைகலந்தென்ஊன்கலந்து வுயிர்கலந்து வுவட்டாமல் இனிப்பதுவே. வருமொழிசெய் மாணிக்க வாசகநின் வாசகத்தில்ஒருமொழியே என்னையுமென் உடையனையும்ஒன்றுவித்துத் தருமொழியா மென்னில்இனிச்…

🛒

உங்களுக்குப் பிடித்த புத்தகங்களை ஆன்லைனில் பெற !