இந்தியனும் – ஹிட்லரும்
பம்மல் சம்பந்த முதலியார்

நான்காவது அங்கம்

இடம். – கடல் மூழ்கிக் கப்பலில் ஓர் அறை. ஹெர்மன் ஒரு மேஜையின் முன்பு உட்கார்ந்திருக்கிறான். ஒரு ஜெர்மன் கடல்படை உத்தியோகஸ்தன் எதிரில் நிற்கிறான்.

ஹெ.⁠ என்னுடைய ஆகாய விமானத்தைப்பற்றி கடைசியில் என்ன சமாசாரம் வந்தது?

க–உ.⁠ எங்களுக்கு அதிலிருந்து கடைசியில் கிடைத்த சமாசாரம்- “நாங்கள் எதிரிகளால் எதிர்க்கப்படுகிறோம்” – என்று ஆரம்பித்து திடீரென்று நின்றுவிட்டது ஆகவே அது பகைவர்களால் அழிக்கப்பட்டிருக்க வேண்டுமென்று அனுமானிக்கவேண்டியிருக்கிறது.

ஹெ.⁠ உம்! – இனி கால தாமதம் செய்ய முடியாது – நம்முடைய முக்கிய கைதியைப் பற்றி என்ன சமாசாரம் ?

க–உ.⁠ நல்ல செய்தியில்லே-அவனுடைய தேகம் என்ன இரும்பாலாயதோ என்னவோ தெரியவில்லை! எங்களால் ஆனமட்டும் வதைத்துப் பார்த்தோம்- கடைசியில் புதிதாய்க் கண்டுபிடிக்கப்பட்ட மார்க்கங்களால் கூட – மிகுந்த பாதைப்படுவதாக முகத்தில் தோன்றுகிறதே யொழிய வாயைத் திறந்து ஒரு வார்த்தையும் பேசமாட்டேன் என்கிறான். – இந்த இந்தியர்களே ஒருமாதிரி யானவர்களாகத் தோற்றப்படுகின்றனர்!

ஹெ.⁠ சரிதான்-கொண்டுவா உள்ளே அவனை.- ஜாக்கிரதையாகக் காவலுடன் -அம்மட்டும் நமது கையை விட்டு அவன் தப்புவதற்கு இனி வழியில்லை –

(கடற்படை உத்தியோகஸ்தன் வணங்கிவிட்டு வெளியே போகிறான்)

ஹெ.⁠ என் ஆகாய விமானம் அழிந்து போனால் – நான் எப்படி திரும்பிப்போவது ஜெர்மனிக்கு-தலைவரிடம் சமாசாரம் சொல்ல.-அதுதான் கேள்வி !

கடற்படை உத்தியோகஸ்தன், கைகளிலும் கன்னங்களிலும் மிகவும் காயப்படுத்தப்பட்டிருக்கும் விஸ்வநாதனுடன் வருகிறான்.

ஹெ.⁠ வா ஐயா – விஸ்வம் – எப்படி யிருக்கிறாய் இப்பொழுது ?

(கடற்படை உத்தியோகஸ்தன் போகிறான்)

வி.⁠ பரமேஸ்வரன் விட்ட-சந்தோஷ ஸ்திதியில் இருக்கிறேன்.

ஹெ.⁠ இதோ பார் விஸ்வம்-உன்னுடைய கடவுளே ஏன் எல்லாவற்றிற்கும் நடுவில் இழுத்துக்கொண்டு வருகிறாய்? – அவர் உன்னே எந்த ஸ்திதிக்குக் கொண்டு வந்திருக்கிறார் என்பதை நீதான் பார்க்கிறாயே .

வி.⁠ பார்க்கிறேன்.

ஹெ.⁠ இன்னும் அவரையே நம்புகிறாயா?

வி.⁠ ஆம்.

ஹெ.⁠ என்ன விந்தையான புத்தியுடையவன்! – இன்னும் அவர் உனக்கு உதவப்போகிறாரென்று நம்புகிறாயா?

வி.⁠ ஆம்

ஹெ.⁠ஆமாம்-எப்படி உனக்கு உதவப்போகிறார்?

வி.⁠ இந்த ஹீனமான – உடலை விட்டு – ஆவியைப் பிரித்தோ-வேறு எந்த விதத்தாலோ !

ஹெ.⁠ என் கையில் ஒரு முறை பட்டபின்-வேறு விதம் ஒன்றுமில்லை –

கடற்படை உத்தியோகஸ்தன் வேகமாய் வருகிறான்.

க–உ.⁠ நம்முடைய நீர்மூழ்கிக் கப்பலின் யந்திரம் ஏதோ கெடுதியை அடைந்திருக்கிறது!

ஹெ. ⁠என்னைத் தொந்திரவு செய்யாதே இப்பொழுது – நான் முக்கியமான வேலையிலிருக்கிறேன் தெரிய-வில்லையா உனக்கு -அதைப் பார்த்துக்கொள் நீயே உடனே-இல்லாவிட்டால் நான் உன்னை தண்டிப்பேன்.

(கடற்படை உத்தியோகஸ்தன் போகிறான்)

ஹெ.⁠ இதோ பார் விஸ்வம் – என் கையில் கெட்டியாய் அகப் பட்டுக்கொண்டிருக்கிறாய் – உன் இரகசியத்தை எனக்கு நீ உடனே சொல்லவாவது வேண்டும் – இல்லாவிடின், சில நிமிஷங்களுக்குள் சமுத்திரத்தில் அதோகதியாய் மூழ்கவேண்டும்.

வி.⁠ அப்படிச் செய்தால் கொதிக்கின்ற என் உடலை அது குளிரச்செய்யும்.

ஹெ.⁠ விஸ்வா, உங்களை யாளுகின்ற வேறொரு தேசத்தார்களுக்காக நீ இவ்வளவு கஷ்டமெல்லாம் ஏன் அனுபவிக்க வேண்டும்? அதை நான் அறிய விரும்புகிறேன்.

வி.⁠ ஏனென்றால் -எங்கள் மதத்தின்படி எங்களை ஆள்பவர்களே நாங்கள் தெய்வமாகக் கருதும்படி போதிக்கிறது.

ஹெ.⁠ அந்த துரைத்தனம்தான் உனக்கு இத்தனை கஷ்டத்தையும் கொண்டு வந்து விட்டதே ?

வி.⁠ இல்லை! அவர்கள் என்னை ஒரு கஷ்டத்திற்கும் ஆளாக்கவில்லை,

ஹெ.⁠ பிறகு-யார் செய்தது?

வி. ⁠என் கர்மம் !

ஹெ.⁠ உன் கர்மம் ? என்ன ஆகாத்தியக்காரர்கள் இந்த இந்தியர்கள் ! – உங்களுக்கு நேரிடுவதற்கெல்லாம் சமாதானம் சொல்ல இந்த இரண்டு பதங்களைக் கற்றுக்கொண்டிருக்கிறீர்கள் !-ஸ்வாமி!-கர்மா !

வி.⁠ ஆமாம்.

ஹெ.⁠ சரி ! உன் விஷயத்தை நீ விடப்போகிறதில்லை! -ஆனால் உன்னால் எவ்வளவு கோரமான சாவைப்பற்றி எண்ண முடியுமோ அப்படிப்பட்ட மரணத்திற்கு உள்ளாக ஆயத்தப்படு! நீ நேற்றிரவுபட்டது எல்லாம் அதன் முன்பாக ஒன்றுமில்லாததாம் !

வி.⁠ (கண்களை மூடி ஏதோ ஜபித்துவிட்டு) ஆயத்தமாயிருக்கிறேன்-சித்தமா யிருக்கிறேன் – தயவு செய்து உன் வேலையை சீக்கிரம் முடி.

ஹெ.⁠ சற்று முன்பாக என்ன முணுமுணுத்தாய் ?

வி.⁠ என் தாய் தந்தையர்களிடமிருந்தும் என் மனைவி மகனிடமிருந்தும், மனதில் விடைபெற்றுககொண்டேன்.

ஹெ.⁠ ஒ! – தெரிகிறது! – அவர்களை இங்கு நேராக வர வழைத்து, நீ அவர்களிட மிருந்து விடைபெற்றுக் கொள்ளச் செய்வேனாயின் – எனக்கென்ன கொடுப்பாய்?

வி.⁠ நீ ஒரு மனிதன் என்கிற நன்கு மதிப்பை உனக்குக் கொடுப்பேன்.

ஹெ.⁠ உம் – பார்க்கலாம்! – (தன் எதிரிலிருக்கும் சிறு மணியை அடிக்கிறான்)

மாலுமி ஒருவன் வந்து நிற்கிறான்.

ஹெ.⁠ அந்த இந்தியர்களை யெல்லாம் – ஜாக்கிரதையாக அழைத்து வா-தக்க காவலுடன்.

வி.⁠ நீ – அவர்களை — இங்கு – கொண்டுவந்திருக்கிறாயா?

ஹெ.⁠ ஆம்-உன்பொருட்டு.

வி.⁠ என்-பொருட்டாகவா ?

ஹெ.⁠ ஆம்-காரணத்தை நீயே காண்பாய்.

நான்கு கப்பல் படை வீரர்கள் அகஸ்தீஸ்வர முதலியார், அவரது மனைவி, பத்மா, கண்ணன், இவர்களைக் காவலுடன் அழைத்துக்கொண்டு வருகிறார்கள். விஸ்வநாதன் காயங்களைக் கண்டு அவர்கள் நால்வரும் திடுக்கிட்டு வருந்துகின்றனர்.

க.⁠ அப்பா! அப்பா !

ப.⁠ நாதா!

அ.⁠ பையா !

அ. கண்ணே! கண்ணே!

ஹெ.⁠ நிறுத்துங்கள் இந்த அழுகை யெல்லாம் ! – இதோ பார் விஸ்வம் – உங்களுடைய அழுகை யெல்லாம் கேட்க எனக்குக் காலமில்லை – இதுதான் நான் உனக்குக் கூறப்போகிற கடைசி வார்த்தை. – உன் இரகசியத்தை உடனே எனக்கு நீ சொல்லவாவது வேண்டும்-

வி.⁠ மாட்டேன் !

ஹெ.⁠ பொறு அடா அப்பா பொறு ! நான் சொல்வதை முற்றிலும் கேள்-பிறகு நீயே வேறு பாட்டைப் பாடுவாய் – நீ எனக்குச் சொல்வாயானால் உங்கள் எல்லோரையும் நான் விடுவித்து விடுகிறேன். உங்கள் ஊருக்கு அழைத்துக்கொண்டு போய்விடுகிறேன். உன்னை மிகுந்த செல்வவானாக்குகிறேன் – பிறகு உங்கள் தேசத்தை நாங்கள் ஜெயித்தபின்-

வி.⁠ அது உங்களால் ஒருகாலும் முடியாது !

ஹெ.⁠ அடேய் ! நீ இனி குறுக்காக ஏதாவது ஒரு வார்த்தை பேசினாலும் – உன்னை உடனே சுட்டு விடுவேன்.

வி.⁠ அப்படியே செய், தயவு செய்து.

ஹெ.⁠ பிள்ளையாண்டான் ! அதை விட மேலான தொன்றை என்னிடம் வைத்திருக்கிறேன்-உன்னை தண்டிக்க ! உன் இரகசியத்தை உடனே வெளியிடாவிட்டால் நான் என்ன செய்வேன் என்பதைக்கேள் – உன் பையனை சமுத்திரத்தில் உன் கண் முன்பாகத் தூக்கிப் போட்டுவிடுவேன் –

வி.⁠ ஈசனே !

ஹெ.⁠ உன் மனைவி உன் எதிராகத் தன் கற்பினை இழப்பாள்-

வி.⁠ அப்பனே அப்பா !

ஹெ.⁠ நீ உன் தாய் தந்தையர்களை தெய்வமாகப் பூசிக்கிறயாமே-அந்த தாய் தந்தையர்களே-உன் கண் முன் துண்டம் துண்டமாக வெட்டி எறிவேன்! – தெரிகிறதா ?

வி.⁠ (தன் கண்களை மூடிக்கொள்கிறான், அவள் உடல் நடுங்குகிறது) கருணைக் கடவுளே !

ஹெ.⁠ இவற்றை யெல்லாம் நீ கண்ணாரப் பார்க்கவேண்டும் ! – நீ உன் கண்களை மூடிக்கொள்ளாவண்ணம் செய்கிறேன் – அடே, வில்லியம் – இவன் கைகளைக் கெட்டியாகப் பிடித்துக்கொள் – இதோ உன் இரப்பைகளை கத்தரித்து விடுகிறேன் !- விஸ்வம் – உன் கண்களைத் திறந்து – எனக்கு பதில் சொல்! நான் கூறிய இரண்டில் – நீ விரும்புவதென்ன ?

வி.⁠ (மெல்ல கஷ்டத்துடன் கண்களைத் திறந்து) அப்பா ! -அம்மா! – நான் எதையும் பொறுப்பேன்! உங்களிருவரையும் – துண்டமாக்குவதைக் கண்டு சகியேன் – அப்பா – எனக்கு உத்திரவு கொடுங்கள்

அ.⁠ பொறு! பையா! நீ என் மகன் என்பதை மறந்து பேசுகிறாய் போலும் ! நீ எனக்கு வாக்களித்ததை மற வாதே !

வி.⁠ (தன் துயரத்தை அடக்கிக்கொண்டு) இல்லை – மறவேன்.

ஹெ.⁠ ஆ! அதுதான் சரி! – நீ வழிக்கு வருவாயென்று எனக்கு தெரியும்! -சரி-சீக்கிரம் சொல்-காலஹரணம் செய்வதற்கில்லை-

வி.⁠ (மெல்லிய குரலுடன்) நான் மாட்டேன்.

ஹெ.⁠ என்ன சொன்னாய்?

வி.⁠ (உரக்க) நான் சொல்ல மாட்டேன் – உன்னிச்சையை நடத்து – மனித உருவம் கொண்ட பிசாசே !

ஹெ.⁠ இதற்கெல்லாம் பழிவாங்கி விடுகிறேன் ! – அடே கிழவா! பிடிவாதக்காரனை உன் பிள்ளை ஏதோ உன் வார்த்தையைக் கேட்பான் போலிருக்கிறது – நான் குறிப்பிட்ட இரண்டு மார்க்கங்களையும் நீ கேட்டாயல்லவா ? – மடையனை உன் பையனுக்கு புத்தி சொல் -நான் கொடுக்கும் இந்த கடைசி சமயத்தை கைவிட வேண்டாமென்று சொல்-

கடற்படை உத்தியோகஸ்தன் விரைந்து வருகிறான்

க.உ.⁠ ஹெர்! ஹெர்! (சார்! சார்! ) ரேடியோ உத்தியோகஸ்தர், நமது கப்பலக்கருகில் எதிரிகளுடைய கடல் மூழ்கிக் கப்பல் நெருங்குகிற சப்தம் கேட்கிறதாகச் சொல்கிறார்!

ஹெ.⁠ சீச்சீ! எதிரிகளுடைய கடல் மூழ்கிக் கப்பல் ஒன்றும் இங்கில்லை- நான் முக்கியமான வேலையிலிருக்கிறேன் – இப்பொழுது யாராவது எனக்குக் குறுக்காக வந்தால் அவர்களை உடனே சுட்டுவிடுவேன்!

(கடற்படை உத்தியோகஸ்தன் போகிறான்)

அ.⁠ ஆம் ஐயா – என் பிள்ளைக்கு நான் புத்தி சொல்கிறேன்.

ஹெ.⁠ அதுதான் சரி! கிழவனாகிய உனக்கு கொஞ்சம் புத்தியிருக்கிறது.

அ.⁠ (ஒரு மாலுமி விஸ்வத்தையருகில் அழைத்துக்கொண்டு போய்விட) அப்பா! விஸ்வம் ! உனக்கு நான் கூறும் என் கடைசி வார்த்தைகளைக் கேள்-கேவலம் இந்த உடல்களுக்காக ஒன்றையும் கருதாதே! இவைகளெல்லாம் என்றைக்காவது ஒரு நாள் அழியப் போகின்றவை! – என்றும் அழியாததான – உன் ஆன்மாவைக் காப்பாற்று ! உன்னுடைய தாயார், உன் மனைவி, உன் மகன் இவர்களுடைய மனதை நான் திடப்படுத்தி விட்டேன். -இந்த பெரிய மனிதரிடம் – ஒன்றையும் சொல்லாதே!

ஹெ.⁠ ஓ! – இதுதான நீ கூறும் புத்தி !- இந்த இந்தியர்கள் ஒருமாதிரியானவர்கள் ! (வெளியில் பெரிய சப்தம் கேட்கிறது)-ஹா வெளியில் ஏதோ அபாயம் நேரிட்டிருக்கிறது! என் தலைவருக்கு நான் செய்யவேண்டிய கடமையைச் சீக்கிரம் செய்துமுடிக்கிறேன் – விஸ்வம்! 10 வினாடி உனக்கு கொடுக்கிறேன். அதற்குள்ளாக நீ இனங்காவிட்டால், நான் சொன்னபடி பழிவாங்குவேன். (மாலுமிகளை நோக்கி) பசங்களா தயாராக இருங்கள்! (தன் கடியாரத்தை எடுத்து கணக்கிடுகிறான்) ஒன்று – இரண்டு – மூன்று – நான்கு – (வெளியில் துப்பாக்கி சுடுகிற சப்தம்) அந்த அறை-

யின் வெளிக் கதவு உடைக்கப்படுகிறது) ஓ! அவர்கள் வந்து விட்டார்கள் ! – பாழாய்ப் போக! – உன்னை முதலில் சுட்டுவிட்டு நான் சாகிறேன் (தன் கைத் துப்பாக்கியை உயர்த்துகிறான்)

(வென்ட்வொர்த் ஐந்தாறு அமெரிக்க கப்பல் வீரர்களுடன் விரைந்து வருகிறான், ஹெர்மன் கையிலிருந்த துப்பாக்கியை தட்டி வீழ்த்துகிறான்)

வெ.⁠ எல்லோரும் கைகளைக் தூக்குங்கள்! (ஜர்மானியரெல்லாம் அப்படியே செய்கின்றனர்) ஈசன் கருணை! அம்பட்டும் சமயத்தில் வந்தேன்! (விஸ்வம், அவனது தாய்த் தந்தையர், மனைவி, பிள்ளை,ஜெகதீசன் கருணை! என்று சொல்லி வணங்குகின்றனர்).

வெ.⁠ பசங்களா, இந்தப் பாழாய்ப்போன ஜர்மானியர்களை யெல்லாம் பிடித்துக்கொண்டு போய் காவலிலிருத்துங்கள். –ஜாக்கிரகையாக!- ஓ! ஹெர்மன் – நீயா இங்கு வந்திருக்கிறாய் -இவனை மாத்திரம் இங்கு சற்று வைத்திருங்கள் – ஒரு நிமிஷம்! (ஹெர்மன் தவிர மற்றவர்களை யெல்லாம் படைவீரர்கள் அழைத்துச்செல்கின்றனர்). நான் நினைத்தேன் அப்பொழுதே!-கொஞ்சம் பொறு! – (விஸ்வநாதனை அவன் பந்தங்களினின்றும் விடுவித்து, அவனது கோர காயப் படுத்தப்பட்டிருக்கும் உடலைப் பார்த்து) ஜகதீசனே! – என்ன கோரம்! ராட்க்ஷஸப் பிசாசே! ஹெர்மன்! இதற்கெல்லாம் பத்து மடங்கு நான் பழி வாங்குகிறேன்!

வி.⁠ வென்ட்வொர்த்! -நான் உனக்கு என்ன கைம்மாறு செய்யப் போகிறேன்!

அ.⁠ ஐயா, நாங்கள் எல்லாம் உம்மை மனசாற வாழ்த்துகிறோம்! – என் பிள்ளையைக் காப்பாற்றியதற்காக!

வி.⁠ இவர்தான் என் தகப்பனார் – இவர்கள் தாயார்- இது என் மனைவி -இவன் என் பையன்.

வெ.⁠ உன் வீட்டிற்குப் போய், நான் அங்கு ஒருவருமில்லா திருப்பதைக் கண்டபோது இங்கப் பிசாசு உங்கள்எல்லோரையும் கைதிகளாகப் பிடித்துக்கொண்டு போயிருக்க வேண்டுமென்று எண்ணினேன். இது இந்தப் பிசாசின் பழய வழக்கம்! – இவனை இப்பொழுதே சுட்டுக்கொன்று விடலாமா என்று பார்க்கிறேன் !

வி.⁠ வென்ட்வொர்த் ! உன்னிடம் ஒரு வரம் கேட்கிறேன் நான்.

வெ.⁠ என்ன அது?

வி.⁠ இந்த – மனிதனை – சுடாதே – யுத்ததில் கைப்பற்றிய கைதியாகப் பாவிப்பாய்.

அ.⁠ அதுதான் எனது வேண்டுகோளும் ஐயா.

ஹெ.⁠ இந்த இந்தியர்களெல்லாம் – ஒரு மாதிரியானவர்களே!

வெ.⁠ ஹெர்மன் – அந்த அபிப்பிராயத்தில் நானும் உன்னுடன் கலந்து கொள்கிறேன். அப்பா-விஸ்வநாத ! இந்த ஜெர்மன் சைத்தானுக்கு உன் ரகசியத்தை நீ வெளியிடவில்லையே ?

வி.⁠ இல்லை! நான் வெளியிடுவேனென்று நீ நினைத்தாயா?

வெ.⁠ இல்லை! யமவேதனை செய்யும் இவனிடமிருக்கும் கருவிகளைக்கொண்டு அவன் உன்னைப் பிரான ஹிம்சை செய்து எங்கு அதை அறிந்தானே என்று பயந்தேன். அந்த குடூரமான இம்சைகளைப்பற்றி நான் கேள்விப் பட்டிருக்கிறேன். ஸ்வாமியின் கருணையினால் இப்பாழும் ராக்ஷஸனிடமிருந்து நீ தப்பினாய் – உன் இரகசியத்தை வெளியிடாமல்! ஆயினும், விஸ்வம் – உன் ரகசியத்தை உலகத்தவர்க்கு நாம் வெளியிடவேண்டிய நிமித்தியமே இராதென்று நினைக்கிறேன் – ரூஸ்வெல்ட், ஜெர்மனிமீது யுத்தம் தொடங்கிவிட்டார் !

(ஹெர்மன் தவிர மற்றவர்கள்) ஈசன் கருணை ! இனி இந்த யுத்தம் சீக்கிரம் முடிந்து போகும்.

வி.⁠ நமது பட்சம் சீக்கிரம்-ஜெயமுண்டாகுமாக! ஸ்வாமி கருணையினால்!

காட்சி முடிகிறது.

நாடகம் முற்றிற்று.

★ ★ ★

இந்த புத்தகம் பிடித்திருந்தால்....

மதிப்பிட நட்சத்திரத்தைச் சொடுக்கவும்!!!

சராசரி மதிப்பீடு 5 / 5. வாக்கு எண்ணிக்கை: 1

இந்தப் பதிவிற்கு மதிப்பீடு அளிக்கும் முதல் நபராக இருங்கள்!!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *