
வேலும் வில்லும்
ரா. பி. சேதுப் பிள்ளை
முருகன் தோற்றம்
மூவிரு முகங்கள் போற்றி முகம்பொழி கருணை போற்றி ஏவரும் துதிக்க நின்ற இராறுதோள் போற்றி, ‘காஞ்சி மாவடி வைகும் செவ்வேள் மலரடி போற்றி, அன்னான் சேவலும் மயிலும் போற்றி, திருக்கைவேல் போற்றி போற்றி.
அருவமும் உருவும் ஆகி அநாதியாய்ப் பலவாய் ஒன்றாய்ப் பிரமமாய் நின்ற சோதிப் பிழம்பதோர் மேனி யாகிக் கருணைகூர் முகங்கள் ஆறும், கரங்கள்பன் னிரண்டும் கொண்டே ஒருதிரு முருகள் வந்தாங்(கு) உதித்தனன், உலகம் உய்ய.
மறைகளின் முடிவால், வாக்கால், மனத்தினால் அளக்கொ ணாமல் நிறைவுடன் யாண்டு மாகி நின்றிடும் நிமல மூர்த்தி
ஆறுமுக வுருவாய்த் தோன்றி அருளொடு சரவ ணத்தின்
வெறிகமழ் கமலப் போதில் வீற்றிருந் தருளி னானே.
– கந்த புராணம்
முருகன் பேரும் சீரும்
ஈங்கனம் நமது கண்ணின் எய்திய குமரன், கங்கை
தாங்கினள் கொண்டு சென்று சரவணத் திடுத லாலே
காங்கேயன் எனப்பேர் பெற்றான், காமர்பூஞ் சரவ ணத்தின்
பாங்கரில் வருத லாலே சரவண பவன்என் றானான்.
தாயென ஆரல் போந்து தனங்கொள்பால் அருத்த லாலே
ஏயதோர் கார்த்தி கேயன் என்றொரு தொல்பேர் பெற்றான்
சேயவன் வடிவம் ஆறும் திரட்டிநீக ஒன்றாய்ச் செய்தாய்
ஆயத னாலே கந்தன் ஆமெனும் நாமம் பெற்றான்.
ஆதலின் நமது சக்தி அறுமுகன், அவனும் யாமும்
பேதகம் அன்றால், நம்போற் பிரிவிலன் யாண்டும் நின்றான்
ஏதமில் குழவி போல்வான், யாவையும் உணர்ந்தான் சீரும்
போதமும் அழிவில் வீடும் போற்றினர்க்(கு)அருள வல்லான்.
-கந்தபுராணம்
திருமால் புகழுரை
காலமாய்க் கால மின்றி, கருமமாய்க் கருமம் இன்றி
கோலமாய்க் கோல மின்றி, குணங்களாய்க் குணங்கள் இன்றி
ஞாலமாய் ஞால மின்றி, அநாதியாய் நங்கட் கெல்லாம்
மூலமாய் இருந்த வள்ளல் மூவிரு முகங்கொண் டுற்றான்.
பொன்னுரு அமைந்த கஞ்சப் புங்கவ னாகி நல்கும்
என்னுரு வாகிக் காக்கும், ஈசன்போல் இறுதி செய்யும்
மின்னுரு வென்ன யார்க்கும் வெளிப்படை போலும்,
அன்னான் தன்னுரு மறைக ளாலும் சாற்றுதற் கரிய தன்றே.
சூரனே முதலோர் தம்மை இமைப்பினில் தொலைக்க உன்னின்
மூரலால் அடுவன், கொண்ட முனிவினால் அடுவன், வாய்மைச்
சீரினால் அடுவன், நாட்டச் செய்கையால் அடுவன், என்றால்
நேரிலா முதல்வன் வன்மை யாவரே நிகழ்த்தற் பாலார்.
-கந்தபுராணம்
ஆறுமுகக் கோலம்
மாயிருள் ஞாலம் மறுவின்றி விளங்கப்
பல்கதிர் விரிந்தன்று ஒருமுகம் :
ஒருமுகம் ஆர்வலர் ஏத்த அமர்ந்தினி தொழுகிக்
காதலின் உவந்து வரங்கொடுத் தன்றே: ஒருமுகம்
இத் தன்மை வாய்ந்த முருகன் குன்றக் குறவர் மனையிலே வாழ்ந்த வள்ளி என்னும் வஞ்சியைக் காதலித்து, அவள் தேனூறு சொல்லுக்கு வாயூறி நின்ற நிலையும், தினைப்புலம் காத்து நின்ற வள்ளியின் முன்னே, கிழக்கோலம் புனைந்து தோன்றி அம் மங்கை தன் செங்கையால் அளித்த தேனும் தினைமாவும் அருந்தி மகிழ்ந்த செய்கையும், பின்பு, என்றும் உள தாய முருக நலங்காட்டி மணந்துகொண்ட மாண்பும், இன்பச் சுவை நிரம்பிய நாடகமாகத் தொன்று தொட் டுத் தமிழ் நாட்டில் நடைபெற்றுவருகின்றன.
ஆகவே, கற்றார்க்கும் கல்லார்க்கும் களிப்பருளும் களிப்பாய் இலங்கும் பெருமான் முருகனே. கலியுக வரதராய்க் காட்சிதரும் கடவுள் முருகனே. ஈசனார் மனங்குளிர மறைப் பொருளைக் கொஞ்சித் தமிழாற் பகர்ந்த குரவன் முருகனே. செந்தமிழ்க் கழகத்தில் தந்தையோடு இனிதமர்ந்து தமிழ் வளர்த்த புலவன் முருகனே. இத் தகைய கந்தக் கடவுளின் பெருமை யைச் சங்கத் தமிழிலே பாடினார் நக்கீரர்; சந்தத் தமி ழிலமைத்துப் பாடினார் அருணகிரிநாதர். அவர் திருவாய்மலர்ந்தருளிய திருப்புகழ், தமிழ் நாடெங்கும் பரவிவருகின்றது. சந்தக்கவியால் விளையும் செந்தமி ழின்பம் எங்கும் பொங்கித் ததும்பிப் பூரணமாய் நிற்கின்றது. கடற்கரை யாண்டியாகிய மூலபண்டாரம், செந்திலம்பதிலே திருவருட் செல்வத்தை வாரி வழங்கு கின்றார். அப் பெருமானது அணிதிகழ் கோயிலில் இன்று நிகழும் அஷ்டபந்தன கும்பாபிஷேகத்தை நாம் அனைவரும் கண்குளிரக் கண்டு இஷ்டசித்தி எய்துவோ மாக!
வேலும் வில்லும்
ரா. பி. சேதுப் பிள்ளை
வேலும் வில்லும்
மந்திர விதியின் மரபுளி வழாஅ அந்தணர் வேள்வி ஒர்க்கும்மே : ஒருமுகம் எஞ்சிய பொருள்களை ஏமுற நாடித் திங்கள் போலத் திசைவிளக் கும்மே : ஒருமுகம் செறுநர்த் தேய்த்துச் செல்சமம் முருக்கிக் கறுவுகொள் நெஞ்சமொடு களம்வேட் டன்றே: ஒருமுகம் குறவர் மடமகள் கொடிபோல் நுகப்பின் மடவரல் வள்ளியொடு நகையமர்ந் தன்றே.
–திருமுருகாற்றுப்படை
வெவ்வசுரர் போற்றிசைக்கும் வெஞ்சூர னைத்தடிந்து
தெவ்வருயிர் சிந்தும் திருமுகமும் – எவ்வுயிர்க்கும்
ஊழ்வினையை மாற்றி உலவாத பேரின்ப
வாழ்வுதரும் செய்ய மலர்முகமும் – சூழ்வோர்
வடிக்கும் பழமறைகள் ஆகமங்கள் யாவும்
முடிக்கும் கமல முகமும் – விடுத்தகலாப் பாச
இருள்துரந்து பல்கதிரிற் சோதிவிடும் வாச
மலர்வதன மண்டலமும் நேசமுடன்
போகமுறும் வள்ளிக்கும் புத்தேளிர் பூங்கொடிக்கும்
மோக மளிக்கும் முகமதியும் – தாகமுடன்
வந்தடியிற் சேர்ந்தோர் மகிழ வரம்பலவும்
தந்தருளும் தெய்வமுகத் தாமரையும்.
– கந்தர் கலிவெண்பா
வேலின் பெருமை
சீர்கெழு செந்திலும் செங்கோடும் வெண்குன்றும்
ஏரகமும் நீங்கா இறைவன்கை வேல் அன்றே
பாரிரும் பௌவத்தின்‘ உள்புக்குப் பண்டொருநாள்
சூர்மா தடிந்த சுடர்இலைய வெள்வேலே.
அணிமுகங்கள் ஓராறும் ஈராறு கையும்
இணையின்றித் தானுடையான் ஏந்தியவேல் அன்றே
பிணிமுகமேற் கொண்டவுணர் பீடழியும் வண்ணம்
மணிவிசும்பிற் கோன்ஏத்த மாறிட்ட வெள்வேலே.
சரவணப்பூம் பள்ளியறைத் தாய்மார் அறுவர்
திருமுலைப்பால் உண்டான் திருக்கைவேல் அன்றே
வருதிகிரி கோல்அவுணன் மார்பம் பிளந்து
குருகு பெயர்க்குன்றம்8 கொன்ற நெடுவேலே.
– சிலப்பதிகாரம்
வீரவேல், தாரைவேல், விண்ணோர் சிறைமீட்ட
தீரவேல், செவ்வேள் திருக்கைவேல் – வாரி
குளித்தவேல், கொற்றவேல், சூர்மார்பும்
குன்றும் துளைத்தவேல் உண்டே துணை.
–திருமுருகாற்றுப்படை
முருகன் அருள்
நாள்என் செயும்,வினை தான்என்செ யும்,எனை நாடிவந்த
கோள்என் செயும்,கொடுங் கூற்றென்செ யும்,கும ரேசர்இரு
தாளும் சிலம்பும் சதங்கையும் தண்டையும் சண்முகமும்
தோளும் கடம்பும் எனக்குமுன் னேவந்து தோன்றிடினே.
சேந்தனை, கந்தனை, செங்கோட்டு வெற்பனை, செஞ்சுடர்வேல் வேந்தனை, செந்தமிழ் நூல்விரித் தோனை, விளங்குவள்ளி
காந்தனை, கந்தக் கடம்பனை, கார்மயில் வாகன்னைச்
சாந்துணைப் போதும் மறவா தவர்க்கொரு தாழ்வில்லையே.
மைவருங் கண்டத்தர் மைந்த,கந் தாஎன்று வாழ்த்தும்இந்தக்
கைவரும் தொண்டன்றி மற்றறி யேன்,கற்ற கல்வியும்போய்ப்
பைவருங் கேளும் பதியும் கதறப் பழகிநிற்கும்
ஐவரும் கைவிட்டு மெய்விடும் போதுஉன் அடைக்கலமே.
–கந்தர் அலங்காரம்
சென்னைக் கந்தகோட்டத்து முருகன்
நீருண்டு, பொழிகின்ற காருண்டு, விளைகின்ற
நிலனுண்டு, பலனும் உண்டு,
நிதியுண்டு, மதியுண்டு, கதிகொண்ட நெறியுண்டு
நிற்கின்ற நிலையும் உண்டு,
ஊருண்டு,பேருண்டு, மணியுண்டு, பணியுண்டு,
உடையுண்டு, கொடையும் உண்டு,
உண்டுண்டு மகிழவே உணவுண்டு, சாந்தமுறும்
உளமுண்டு, வளமும் உண்டு,
தேருண்டு, கரியுண்டு, பரியுண்டு, மற்றுள்ள
செல்வங்கள் யாவும் உண்டு,
தேனுண்டு வண்டுறுக டம்பணியும் நின்பதத்
தியானமுண் டாயில் அரசே !
தாருண்ட சென்னையில் கந்தகோட் டத்துள்வளர்
தலமோங்கு கந்த வேளே!
தண்முகத் துய்யமணி! உண்முகச் சைவமணி!
சண்முகத் தெய்வ மணியே!
– திருவருட்பா
முருகன் பெருமை
திருத்தணிகை முருகன்
அடுத்தே வருத்தும் துயர்க்கடலு
அறியா தந்தோ விழுந்திட்டேன் எடுத்தே
விடுவார் தமைக்காணேன்
எந்தாய் எளியேன் என்செய்கேன் கடுத்தேர்
கண்டத் தெம்மான்தன் கண்ணே தருமக் கடலேஎன்
செடித்தீர் தணிகை மலைப்பொருளே
தேனே ஞானச் செழுஞ்சுடரே.
–திருவருட்பா
முருகா வருக
பேரா தரிக்கும் அடியவர்தம்
பிறப்பை ஒழித்துப் பெருவாழ்வும்
பேறும் கொடுக்க வரும்பிள்ளைப்
பெருமான் என்னும் பேராளா
சேரா நிருதர் குலகல்கா
சேவற் கொடியாய், திருச்செந்தூர்த்
தேவா, தேவர் சிறைமீட்ட
செல்வா என்றுன் திருமுகத்தைப்
பாரா மகிழ்ந்து முலைத்தாயர்
பரவிப் புகழ்ந்து விருப்புடன்அப்
பாவா வாஎன் னைப்போற்றிப்
பரிந்து மகிழ்ந்து வரவழைத்தால்
வாரா திருக்க வழக்குண்டோ
வடி வேல் முருகா வருகவே
வளரும் களபக் குரும்பைமுலை
வள்ளி கணவா வருகவே.
– திருச்செந்தூர்ப் பிள்ளைத்தமிழ்
களத்தே புகுந்து கதி காட்டும்
கண்ணே வருக, மெய்ஞ்ஞானக்
கரும்பே வருக,கருணைபொழி
காரே வருக, ஆனந்தப்
பெருக்கே வருக, யாங்கள்பெறும்
பேறே வருக, மறைசொல்கிளிப்
பிள்ளாய் வருக, பிறக்குதெய்வப்
பெம்மான் வருக, குறமடந்தை
தருக்கே வருக, மிடியகற்றும்
தருவே வருக, மன்பதைக்கோர்
தஞ்சே வருக, மையளிக்கும்
தாயே வருக, பவப்பிணிக்கு
மருந்தே வருக, சமரபுரி
வாழ்வே வருக வருகவே
மறையின் சிரமெய்ப் பொருளான
வள்ளல் வருக வருகவே.
–திருப்போரூர்ப் பிள்ளைத்தமிழ்
வாழ்த்து
அறிரு தடந்தோள் வாழ்க, அறுமுகம் வாழ்க,
வெற்பைக் கூறுசெய் தனிவேல் வாழ்க,
குக்குடம் வாழ்க, செவ்வேள் ஏறிய மஞ்ஞை வாழ்க,
யானைதன் அணங்கு வாழ்க, மாறிலா வள்ளி வாழ்க,
வாழ்கசீர் அடியா ரெல்லாம்.
-கந்தபுராணம்



