

செந்தமிழ் மாலை
ரா. பி. சேதுப்பிள்ளை
முன்னுரை
அமிழ்தினும் இனிய தமிழ் மணம் கமழும் இத் திரு நாட்டில், தாய் மொழி அன்புதழைக்க வேண்டுமாயின் இளம்பருவத்தில் கல்வி கற்கும் மாணவர்க்கு இன் தமிழ்ச் சுவையை ஊட்டுதல் இன்றியமையாததாகும். இந்நோக்கத்தோடு செந்தமிழ்த்தேன் சொரியும் சிலப்பதிகாரம், மீனாட்சியம்மை குறம், குற்றாலக் குறவஞ்சி, முக்கூடற் பள், கலிங்கத்துப்பரணி, இராமலிங்க அடிகள் அருட்பா, முதலிய நூல்களினின்றும் சிந்தைக்கும் செவிக்கும் இனிய சில செஞ்சொற் கவிகளைத் தொடுத்து ‘செந்தமிழ்மாலை’ என் னும் பெயரால் இச்சிறு நூலை வெளியிட்டுள்ளேன். தமிழ் மணம் வீசும் தனிப்பூஞ்சோலையில் அன்புடன் கொய்த அருமலர்களாலாய இப்பாமாலையை இளைஞர் புனைந்து இன் புறவேண்டுகிறேன்.
R. P. சேதுப்பிள்ளை


