
செந்தமிழ் மாலை
ரா. பி. சேதுப்பிள்ளை
தமிழ்த் தெய்வம்
நீராரும் கடலுடுத்த நிலமடந்தைக் கெழில் ஒழுகும்
சீராரும் வதனமெனத் திகழ்பரத கண்டமிதில்
தக்கசிறு பிறைநுதலும் தரித்தநறும் திலகமுமே
தெக்கணமும் அதிற் சிறந்த திரவிடநற் றிருநாடும்
அத்திலக வாசனைபோல் அனைத்துலகும் இன்பமுற எத்திசையும் புகழ்மணக்க இருந்தபெருந் [தமிழ் அணங்கே.
பொதியமலைப் பாட்டு
திங்கள்முடி சூடு மலை : தென்றல்விளை யாடுமலை
தங்கு முயல் சூழுமலை : தமிழ் முனிவன் வாழுமலை அங்கயற்கண் அம்மைதிரு அருள் சுரந்து பொழிவதென பொங்கருவி தூங்குமலை பொதியமலை என்மலையே
மந்தமா ருதம்வளரும் மலை எங்கள் மலையே
வடகலை தென்கலை பயிலும் மலை எங்கள் மலையே
கந்தவேள் விளையாடும் மலை எங்கள் மலையே
கனக நவ மணி விளையும் மலை எங்கள் மலையே
இந்த மாநிலம் புரக்கும் அங்கயற் கண் அம்மை
இன்ப முறும் தென் பொதிய மலை எங்கள் மலையே.
சிங்கமும் வெங்களிறும் உடன் விளையாடும் ஒருபால்
சினப்புலியும் மடப்பிணையும் திளைத்திடும் அங்கொருபால்
வெங்கரடி மரையினொடும் விளையாடும் ஒருபால்
விட அரவும் மடமயிலும் விருந்தயரும் ஒருபால்
அங்கண் அமர் நிலம் கவிக்கும் வெண்கவிகை நிழற்கீழ்
அம்பொன்முடி சூடும் எங்கள் அபிடேக வல்லி
செங்கமலப் பதம் பரவும் கும்பமுனி பயிலும்
தென் பொதியமலை காண் மற்றெங்கள்மலை அம்மே.
கொழுங்கொடியின் விழுந்த வள்ளிக் கிழங்கு கல்லி [எடுப்போம்
குறிஞ்சி மலர் எடுத்து முல்லைக் கொடியில் வைத்துத்
[தொடுப்போம்
பழம்பிழிந்த கொழுஞ்சாறும் தேறலும்வாய்
மடுப்போம் பசுந்தழையும் மரவுரியும் இசைந்திடவே உடுப்போம்
செழும் தினையும் நறும் தேனும் விருந்தருந்தக் கொடுப்போம் சினவேங்கைப்புலித்தோலின் பாயலிற் கண் படுப்போம்
எழுந்து கயற்கணி காலில் விழுந்துவினை கெடுப்போம்
எங்கள் குறக் குடிக் கடுத்த இயல்பிது காண் அம்மே.
புல்வாயின் பார்வையைவெம் புலிப்பார்வை இணங்கும்
புதுத்தினைகல் உரல்பாறை முன்றில்தொறும் உணங்கும்
கல்விடரில் வரிவேங்கை கடமானோடு உறங்கும் கருமலையில் வெள் அருவி கறங்கிவழிந் திறங்கும் சில்வலையும் பல்வாரும் முன் இறப்பில் தூங்கும்
சிறுதுடியும் பெருமுரசும் திசைதொறும் நின்றேங்கும்
கொல்லையில் மான் பிணையும் இளம் பிடியும்விளை யாடும்
குறிச்சி எங்கள் குறச்சாதி குடியிருப்ப தம்மே
பொற்றொடி வள்ளிக்கிளைய பூங்கொடி என் பாட்டி
பூமகள் மா யவன் மார்பில் பொலிவள் என்று சொன்னாள்
மற்றவள் பெண்களில் எங்கள் பெரியதாய் கலைமான்
மலர் அயனார் திருநாவில் வாழ்வள் என்று சொன்னாள்
பெற்ற எங்கள் நற்றாயும் சுந்தரி இந்திரன் தோள்
பெறும் என்றாள் பின் எங்கள் சிறியதாய் அம்மே
சொற்ற குறிக் களவிலை என் கன்னிமார் அறியச்
சொன்னேன் பொய் யல நாங்கள் சொன்னது [சொன்னதுவே.
முன்னொரு நாள் அம்மைதடா தகைபிறந்த நாளில்
முகக் குறிகண் டிவள் உலக முழுதாளு மென்றேன்
பின்னொருநாள் கைக்குறி பார்த் தம்மை யுனக்கெங்கள்
பிஞ்ஞகர்தாம் மணவாளப் பிள்ளை யென்று சொன்னேன்
அன்னை யவள் மெய்க்குறிகள் அனைத்தையும் பார்த் [துனக்கோர்
ஆண்பிள்ளை உண்டுபிறந் தரசாளு மென்றேன்
சொன்ன குறி யெல்லாமென் சொற்படியே பலிக்கும்
தொகுத்து நீ நினைந்தகுறி இனிச் சொலக்கேளம்மே.


