
செந்தமிழ் மாலை
ரா. பி. சேதுப்பிள்ளை
குற்றாலப் பாட்டு
வானரங்கள் கனிகொடுத்து மந்தியொடு கொஞ்சும்
மந்திசிந்து கனிகளுக்கு வான்கவிகள் கெஞ்சும்
கானவர்கள் விழியெறிந்து வானவரை அழைப்பார்
கவனசித்தர் வந்து வந்து காயசித்தி விளைப்பார்
தேனருவித் திரையெழும்பி வானின்வழி யொழுகும்
செங்கதிரோன் பரிக்காலும் தேர்க்காலும் வழுகும்
கூனலிளம் பிறைமுடித்த வேணியலங் காரர்
குற்றாலத் திரிகூட மலைஎங்கள் மலையே.
முழங்குதிரைப் புனலருவி கழங்கெனமுத் தாடும்
முற்றமெங்கும் பாந்து பெண்கள் சிற்றிலைக்
கொண்டோடும் கிழங்குகிள்ளித் தேனெடுத்து வளம்பாடி நடிப்போம்
கிம்புரியின் கொம்பொடித்து வெம்புதினை இடிப்போம்
செழுங் குரங்கு தேமாவின் பழங்களைப் பந் தடிக்கும்.
தேனலர்சண் பகவாசம் வானுலகில் வெடிக்கும்
வழங்குகொடை மகராசர் குறும்பலவில் ஈசர்
வளம் பெருகும் திரிகூட மலைஎங்கள் மலையே.
ஆடும்அர வீனுமணி கோடிவெயில் எறிக்கும்
அம்புலியைக் கவளமென்று தும்பிவழி மறிக்கும்
வேடுவர்கள் தினைவிரைக்கச் சாடுபுனம் தோறும்
விந்தை அகில் குங்குமமும் சந்தனமும் நாறும்
காடுதொறும் ஓடிவரை ஆடுகுதி பாயும்
காகமணு காமலையில் மேகதிரை
சாயும் நீடுபல ஈசர்கயி லாசகிரி வாசர்
நிலைதங்கும் திரிகூட மலையெங்கள் மலையே.
கயிலையெனும் வடமலைக்குத் தெற்குமலை அம்மே
கனகமகா மேருவென நிற்குமலை அம்மே
சயிலமலை தென்மலைக்கு வடக்குமலை அம்மே
சகலமலை யும் தனக்குள் அடக்குமலை அம்மே
வயிரமுடன் மாணிக்கம் விளையுமலை அம்மே
வான்இரவி முழைகள்தொறும் நுழையுமலை அம்மே
துயிலுமவர் விழிப்பாகி அகிலமெங்கும் தேடும்
துங்கர் திரி கூடமலை எங்கள்மலை அம்மே
கொல்லிமலை எனக்கு இளைய செல்லிமலை அம்மே
கொழுநனுக்குக் காணிமலை பழனிமலை அம்மே
எல்உலவும் விந்தைமலை எந்தைமலை அம்மே
இமயமலை என்னுடைய தமயன்மலை அம்மே
சொல்லரிய சாமிமலை மாமிமலை அம்மே
தோழிமலை நாஞ்சிநாட்டு வேள்விமலை அம்மே
செல்லினங்கள் முழவுகொட்ட மயிலினங்கள் ஆடும்
திரிகூட மலையெங்கள் செல்வமலை அம்மே.
ஞானிகளும் அறியார்கள் சித்ர நதி மூலம்
நானறிந்த வகைசிறிது பேசக்கேள் அம்மே
மேன்மை பெறும் திரிகூடத் தேனருவித் துறைக்கே
மேவுமொரு சிவலிங்கம் தேவரக சியமாய்
ஆனதுறை அயனுரைத்த தானமறி யாமல்
அருந்தவத்துக் காய்த்தேடித் திரிந்தலையும் காலம்
மோனவா னவர்க்கெங்கள் கானவர்கள் காட்டும்
முதுகங்கை ஆறுசில மதுகங்கை யாறே.
சிவமது கங்கையின் மகிமை புவனமெங்கும். புகழும்
செண்பகா டவித் துறையின் பண்பு சொல்லக்
கேளாய் தவமுனிவர் கூட்டரவும் அவரிருக்கும் குகையும்
சஞ்சீவி முதலான விஞ்சைமூ லிகையும்
கவன சித்தர் ஆதியரும் மவுனயோ கியரும்
கத்திருக்கும் கயிலாயம் ஒத்திருக்கும் அம்மே
நவநிதியும் விளையுமிடம் அவிடமது கலந்தால்
நங்கைமார் குரவை யொலிப் பொங்குமா கடலே.
பொங்குகடல் திரிவேணி சங்கமெனச் செழிக்கும்
பொருந்து சித்ர நதித் துறைகள் பொன்னு முத்தும் [கொழிக்கும்
கங்கையெனும் வடஅருவி தங்கும் இந்த்ர சாபம்
கலந்தாடிற் கழுநீராய்த் தொலைந் தோடும் பாபம்
சங்கவீ தியிற்பரந்து சங்கினங்கள் மேயும்
தழைத்தமதில் சிகர மெங்கும் கொழுத்தகயல் பாயும்
கொங்கலர்செண் பகச்சோலைக் குறும்பலா வீசர்
குற்றாலத் திரிகூடத் தலமெங்கள் தலமே.


