செந்தமிழ் மாலை
ரா. பி. சேதுப்பிள்ளை

பாமாலை

கல்லார்க்கும் கற்றவர்க்கும் களிப்பருளும் களிப்பே
காணார்க்கும் கண்டவர்க்கும் கண்ணளிக்கும் கண்ணே
வல்லார்க்கும் மாட்டார்க்கும் வரமளிக்கும் வரமே
மதியார்க்கும் மதிப்பவர்க்கும் மதிகொடுக்கும் மதியே
நல்லார்க்கும் பொல்லார்க்கும் நடுநின்ற நடுவே
நார்களுக்கும் சுரர்களுக்கும் நலங்கொடுக்கும் நலமே
எல்லார்க்கும் பொதுவில் நடம் இடுகின்ற பரமே
என்னரசே யான்புகலும் இசையும் அணிந்தருளே.

எண்ணாத மந்திரமே எழுதாத முறையே
ஏறாத மேல்நிலைநின் றிறங்காத நிறைவே
பண்ணாத பூசையிலே படியாத படிப்பே
பாராத பார்வையிலே பதியாத பதிப்பே
நண்ணாத மனத்தகத்தே நண்ணாத நலமே
நாடாத நாட்டகத்தே நடவாத நடப்பே
அண்ணா என் அப்பா என் அய்யா
என் அரசே அடியிணைக் கென் சொன்மாலை அணிந்து
மகிழ்ந்தருளே.

கையாத தீங்கனியே கயவாத அமுதே
கரையாத கற்கண்டே புரையாத கரும்பே
பொய்யாத பெருவாழ்வே புகையாத கனலே
போகாத புனலேயுள் வேகாத காலே
கொய்யாத நறுமலரே கோவாத மணியே
குளியாத பெருத்தே ஒளியாத வெளியே
செய்யாத பேருதவி செய்த பெருந் தகையே
தெய்வ நடத் தரசேஎன் சிறுமொழிஏற்றருளே.

தனித்தனிமுக் கனிபிழிந்து வடித்தொன்றாய்க்
கூட்டிச் சர்க்கரையும் கற்கண்டின் பொடியும்மிகக்கலந்தே
தனித்தநறுந் தேன்பெய்து பசும்பாலின் தேங்கின்
தனிப்பாலும் சேர்த்தொருதீம் பருப் பிடியும் விரவி
இனித்தநறு நெய்யணைந்தே இளஞ்சூட்டின் இறக்கி
எடுத்தசுவைக் கட்டியினும் இனித்திடுந் தெள்ளமுதே
அநித்தமறத் திருப்பொதுவில் விளங்குநடத்தரசே
அடிமலர்க்கென் சொல்லணியாம் அலங்கல் அணிந்து அருளே.

எல்லாம்செய் வல்ல தெய்வம் எங்குநிறை தெய்வம்
என்ன உயிரில் கலந்தெனக்கே இன்ப நல்குதெய்வம்
நல்லார்க்கு நல்லதெய்வம் நடுவான தெய்வம்
நற்சபையில் ஆடுகின்ற நடராச தெய்வம்
கல்லார்க்கும் கற்றவர்க்கும் களிப்பருளும் தெய்வம்
காரணமாம் தெய்வம் அருட் பூரணமாம் தெய்வம்
செல்லாத நிலைகளெல்லாம் செல்லுகின்ற தெய்வம்
சிற்சபையில் ஆடுகின்ற தெய்வமதே தெய்வம்.

என் இதயக் கமலத்தே இருந்தருளும் தெய்வம்
என்னிரண்டு கண்மணிக்குள் இலங்குகின்ற தெய்வம்
பொன்னடியென் சென்னியிலே பொருந்தவைத்த தெய்வம்
பொய்யாத தெய்வம் இடர் செய்யாத தெய்வம்
அன்னியமல் லாத தெய்வம் அறிவான தெய்வம்
அவ்வறியுக் கறிவாம் என் அன்பான தெய்வம்
சென்னியிலே செம்பொருளாய்த் திகழ்கின்ற தெய்வம்
சிற்சபையில் விளங்குகின்ற தெய்வமதே தெய்வம்.

முற்றும்.

★ ★ ★

இந்த புத்தகம் பிடித்திருந்தால்....

மதிப்பிட நட்சத்திரத்தைச் சொடுக்கவும்!!!

சராசரி மதிப்பீடு 0 / 5. வாக்கு எண்ணிக்கை: 0

இந்தப் பதிவிற்கு மதிப்பீடு அளிக்கும் முதல் நபராக இருங்கள்!!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *