செந்தமிழ் மாலை
ரா. பி. சேதுப்பிள்ளை

அம்மானைப் பாட்டு

வீங்குநீர் வேலி யுலகாண்டு விண்ணவர்கோன்
ஓங்கரணம் காத்த உரவோன்யார் அம்மானை
ஓங்கரணம் காத்த உரவோன் உயர்விசும்பில்
தூங்கெயில் மூன்று எறிந்த சோழன்காண் அம்மானை
சோழன்பு கார்நகரம் பாடேலோர் அம்மானை.

புறவுநிறை புக்குப் பொன்னுலகம் ஏத்தக்
குறைவில் உடம்பு அரிந்த கொற்றவன்யார் அம்மானை
குறைவில் உடம்பு அரிந்த கொற்றவன் முன் வந்த
கறவை முறைசெய்த காவலன்காண் அம்மானை
காவலன் பூம்புகார் பாடேலோர் அம்மானை.

கடவரைகள் ஒரெட்டும் கண்ணிமையார் காண
வடவரைமேல் வாள்வேங்கை ஏற்றினன்யார் அம்மானை
வடவரைமேல் வாள்வேங்கை ஏற்றினன் திக்கெட்டும்,
குடைநிழலிற் கொண்டளித்த கொற்றவன்காண் அம்மானை
கொற்றவன் தன் பூம்புகார் பாடேலோ ரம்மானை

இந்த புத்தகம் பிடித்திருந்தால்....

மதிப்பிட நட்சத்திரத்தைச் சொடுக்கவும்!!!

சராசரி மதிப்பீடு 0 / 5. வாக்கு எண்ணிக்கை: 0

இந்தப் பதிவிற்கு மதிப்பீடு அளிக்கும் முதல் நபராக இருங்கள்!!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *