செந்தமிழ் மாலை
ரா. பி. சேதுப்பிள்ளை

குறவன் குறத்தி கூற்று

இத்தனை நாளாக என்னுடன் சொல்லாமல்
எங்கே நடந்தாய் நீ சிங்கி (எங்கே நடந்தாய் நீ)

கொத்தார் குழலார்க்கு வித்தாரமாகக்
குறிசொல்லப் போனனடா சிங்கா (குறிசொல்லப்போனனடா)

பார்க்கில் அதிசயம் தோணுது சொல்லப்
பயா யிருக்குதடி, சிங்கி (பயமா)

ஆர்க்கும் பயமில்லைத் தோணின காரியம்
அஞ்சாமற் சொல்லடா சிங்கா (அஞ்சா)

வள்ளிக்கொடியிலே துத்திப்பூப்பூப்பானேன்
சிங்கி-காதில் வங்காளத் தாரிட்ட சிங்காரக் கொப்படா சிங்கா.

வன்னக் குமிழிலே புன்னை அரும்பேது சிங்கி-மண்ணில்
முந்நீர்ச் சலாபத்து முத்துமூக் குத்திக்காண் சிங்கா.

பொன்னிட்ட மேலெல்லாம் மின்வெட்டிப் பார்ப்பானேன் சிங்கி-இந்த
வன்னப் பணிகளின் மாணிக்கக் கல்லடா சிங்கா.

இந்தப்பணியை நீ பூணப் பொறுக்குமோ சிங்கி – பூவில்
ஈசர்க்கும் நல்லார்க்கும் எல்லாம் பொறுக்கும் காண்
சிங்கா.

இல்லாத சுற்றெல்லாம் எங்கே படித்தாய் நீ சிங்கி – நாட்டில்
நல்லாரைக் காண்பவர்க் கெல்லாம் வருமடா சிங்கா.

இந்த புத்தகம் பிடித்திருந்தால்....

மதிப்பிட நட்சத்திரத்தைச் சொடுக்கவும்!!!

சராசரி மதிப்பீடு 0 / 5. வாக்கு எண்ணிக்கை: 0

இந்தப் பதிவிற்கு மதிப்பீடு அளிக்கும் முதல் நபராக இருங்கள்!!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *