
என் கடன் பணிசெய்துகிடப்பதே ! திரு. வி. கலியாணசுந்தரனார்
6. முடிவுரை
‘என்’ என்பது ஆன்மா என்றும், அவ்வான்மா உடலைப் பெறுதற்கு முன்னர் அறிவு செயலில்லா நிலையைப் பெற்றிருக்கிறதென்றும், அஃது உடல் தாங்கப் பெற்ற பின்னர்ச் சிற்றறிவுஞ் சிறு தொழிலும் விளங்கப் பெறுகிறதென்றும், அறிவுந் தொழிலும் விளங்கப்பெறுங் காலத்தை வீணே கழியாது பணி செய்தலில் கழித்தல் வேண்டுமென்றும், அப்பணி, காலத்திற் கேற்றவாறு செய்யப்படல் வேண்டுமென்றும், அதுவும் பயன்கருதா (நிஷ்காமிய) வழிபற்றிச் செய்யப்படுதல் வேண்டுமென் றும், இக்காலத்துக்கு வேண்டப்படுவது தேசப்பணி யென்றும், பிற பணிகள் அப்பணியிலொன்றி விடுயென் றும், தேசப்பணி செய்து பிறப்புரிமை பெற்றுவிடின் நமது உரைக்கு உலகத்தில் மதிப்புண்டாகுமென்றும், அதுபோழ்து நம் முன்னோர் கண்ட சகோதர தருமத்தை உலகத்துக்கு அறிவுறுத்த அருட்பணி நிகழ்த்தல் வேண்டு மென்றும், அப்பேரறத்தை உலகத்தில் நிலைபெறுத்தவே நாம் படைக்கப்பட்டோ மென்றும், எப்பணிக்கும் உயிர் நாடி ஒழுக்கமென்றும், வீடுபேற்றை விரும்பாமலும் பணியை இடையீடின்றிச் செய்து கிடத்தல் வேண்டு மென்றும், அஃதே இறைவன் இயல்பைப் பெறுவிப்ப தென்றும் இந்நூற்கண் கூறப்பட்டுள்ளன.
இதை வாசிக்கும் நண்பர்கள் பணியில் காதல் பூண்டு, வீட்டையும் விரும்பாது எத்தகைக்கைம்மாறுங் கருதாது, ஆண்டவன் அருட்குணம் பெற்றுப் பணி செய்து கிடப்பார்களாக.
அப்பர் திருவடி வாழ்க
காமி யஞ்செய்து காலம் கழியாதே
ஓவியஞ் செய்தங் குள்ளத் துணர்மினோ
சாமி யோடு சரச்சு வதியவள்
கோமி யும்முறை யுங்குட மூக்கிலே.
ஊளி லாவி உயிர்க்கும் பொழுதெலாம்
தானி லாவி யிருப்பனென் நாதனைத்
தேனி லாவிய சிற்றம் பலவனார்
வானி லாவி யிருக்கவும் வைப்ரே.
அல்லல் என்செயும் அருவினை என்செயும்
தொல்லை வல்வினைத் தொந்தந்தான் என்செயும்
தில்லை மாநகர்ச் சிற்றம் பலவனார்க்
கெல்லை யில்லதோர் அடிமைபூண் டேனுக்கே
ரி யந்தமி ழோடிசை யானவன்
கூரி யகுணத் தார்குறி நின்றவன் காரி
கையுடை யான்கடம்பத்துறைச் சீரி
யல்பத்தர் சென்றடை மின்களே.
– அப்பர்
முற்றும்.
★ ★ ★



