
கப்பலோட்டிய தமிழன்
ம. பொ. சிவஞானம்
வீரர் சிதம்பரம் பிள்ளை
மடமையதோ பிறநாட்டார் மயக்கந்தானோ
மக்களெல்லாம் சுதந்திரத்தை மறந்தாராகி
அடிமை இருள் நள்ளிரவாய் அனைத்தும் மூடி
யாரும் தலை நீட்டவொண்ணா அந்த நாளில்
திடமனத்துச் சிதம்பரப்பேர் பிள்ளைவாள்தான்
செய்திருக்கும் அச்சமற்ற சேவை சொன்னால் உடல் சிலிர்க்கும் உயிர்நிமிர்ந்து உணர்ச்சி பொங்கும்
உள்ள மெல்லாம் நெக்குநெக்காய் உருகுமன்றோ.
எல்லாரும் தேசபக்தர் இந்த நாளில்
எத்தனையோ சிறைவாசம் இனிதாய்க் காண்பார் சொல்லாலும் எழுத்தாலும் விளக்க வொண்ணாத்
துன்பமெல்லாம் சிறைவாசம் அந்த நாளில்
வல்லாளன் சிதம்பரனார் சிறையிற்பட்ட
வருத்த மெல்லாம் விரித்துரைக்கில் வாய்விட்டேங்கி
கல்லான மனத்தவரும் கண்ணீர் கொட்ட
கனல்பட்ட வெண்ணெயெனக் கரைவார் இன்றும்.
சாதிகுலச் சமயமெல்லாம் கடந்த தக்கோர்
சமரசமும் சன்மார்க்கம் தழுவும் சான்றோர்
நீதிநெறி மிகப்பயின்ற பலபேர் சேர்ந்து
நிருவியநம் காங்கிரசை நிதமும் போற்றி
பேதமுற்றுப் பிணங்கிவிட நேர்ந்தபோதும்
பெரியசபை அதை இகழ்ந்து பேசா நேசன்
ஓதி அதன் வளாச்சியையே விரும்பி வாழ்த்தி
உள்ளளவும் சிதம்பரந்தான் உவப்பான் உள்ளம்.
பேசிவிட்டே சுயராஜ்யம் பெறலாம் என்று
பெரியபல தீர்மானக் கோவை செய்து
காசுபணப் பெருமையினால் தலைவராகி
காங்கிரசை நடத்தியதைக் கண்டு நொந்து
தேசநலம் தியாகமின்றி வருமோ என்று
திலகர்பிரான் செய்தபெரும் கிளர்ச்சி சேர்ந்து
ஓசைபடா துழைத்த சில பெரியோர் தம்முள்
உண்மைமிக்க சிதம்பரனார் ஒருவராகும்.
உழுதுபல தொழில் செய்து உழைப்போ
ரெல்லாம்உணவும் உடை வீடின்றி
உருகிவாடபழுது மிக அன்னியர்க்குத்
தரகராகிப்பசப்புகின்ற வீணருக்கோ
சுகங்கள்! என்றுஅழுதுருகித் தொழிலாளர்
இயக்கம் கண்டுஅந்நாளில் சிதம்பரனார்
நட்டவித்தாம்விழுதுபல விட்டுபெரும்
மரமாய் இன்றுவெவ்வேறு கிளைகளுடன்
விளங்கக் காண்போம்.
கள்ளமற்றுக் கலகலத்த பேச்சு
கேட்கும்கருப்பெனினும் சிரிப்புமுகம்
கருணைகாட்டும்குள்ளமென்னும் ஒருஉருவம்
இருகை கூப்பிகுண்டெடுத்துக்
கடைந்ததெனக் குலுங்கநிற்கும்வெள்ளையன்றி
வேறேதும் அறியா ஆடைவேதாந்த சித்தாந்த
ஒளியே வீசும்கொள்ளைகொள்ள
சிறையிருந்த குறிகள்தோன்றும்குலவுபிள்ளைச்
சிதம்பரத்தை நினைவு கூர்ந்தால்.
—நாமக்கல் இராமலிங்கம் பிள்ளை.
முற்றும்.
★ ★ ★



