கொலைக்களம்! 
கலைஞர் மு. கருணாநிதி

கொலைக்களம்!
கலைஞர் மு. கருணாநிதி

இன்பத்துளி!

காலம்! காலத்தின் கோலம்! எப்படி யெப்படியோ இருக்கிறது,மாறுகிறது, மாறிக் கொண்டே வருகிறது!

இரண்டாவது உலக மகா யுத்தம் முடிந்தது, உலக வாழ்வை உருமாற்றி விட்டு !

மீண்டும் யுத்தம்! யுத்த பேரிகை! மீண்டும் களம்! போர்க்களம்! கொலைக்களம்!

அமைதி – புயல் – வாழ்வு – சாவு, சமாதானம் – சண்டை – ஒற்றுமை – வேற்றுமை களிப்பு – கடுகடுப்பு – சாந்தம் – சமர்; மாறி மாறி வருகிறது, வாழ்வில்!

போர் ! போர்! உலகப் போர்! உலகை, உலக வாழ்வை, உருவை, தலை கீழ் மாற்றத் தில் கொண்டுவிடும் போர் – உலகப் போர்! கொலைக் களம்!

இந்த நிலையில் இரண்டு உலகப் போர் மூண்டு, முடிந்தன. மீண்டும் போர், மூன்றாம் போர், மூன்றாவது உலக யுத்தம் மூண்டநிலை, இன்று!

இந்த நிலை, நாடு மீண்டும் கொலைக்களம் ஆகிவிட்ட நிலை வரும், வந்தே தீரும் என்ற முன்னறிவிப்பை, கலைஞர் கருணாநிதி அவர்கள் தமது “முரசொலி” இதழில் 1948-ம் ஆண்டிலேயே அறிவித்துள்ளார்.

அந்த நிலையில் நமது நிலை, கடமை என்ன?

நமது இன்பத் திராவிடங் காண, நமது ‘அஸ்திகளைக் கரைத்தாவது இனப் பலியை நிறுத்துங்கள்!’ வீணில் ‘விழலுக்கு நீர் இறைத்து ஓயாது, எந்தச் சோதனைக்கும் அஞ்சாது, நாட்டு விடுதலையில் நாட்டங் கொண்டு வீரமுழக்கஞ் செய்வீர்’ நாடு. கொலைக்களம் ஆகிவிடாது தடுக்க! கொலைக்களம் ஆனாலும் நாடு வாடாதிருக்க, என்ற கருத்துக் குவியல்களைத் திரட்டி தந்திருக்கிறோம்.

‘கொலைக்களம்’ கலைஞர் கருணாநிதியின் இன்பத் துளி! துளியைச் சுவையுங்கள்!

துன்பம் நீங்குங்கள்!

இந்த புத்தகம் பிடித்திருந்தால்....

மதிப்பிட நட்சத்திரத்தைச் சொடுக்கவும்!!!

சராசரி மதிப்பீடு 0 / 5. வாக்கு எண்ணிக்கை: 0

இந்தப் பதிவிற்கு மதிப்பீடு அளிக்கும் முதல் நபராக இருங்கள்!!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *