

தாயார் கொடுத்த தனம்
வெ. இராமலிங்கம்பிள்ளை
எங்கள் பதிப்பகத்தின் வெளியீடாக நாமக்கல் கவிஞரின் கட்டுரைத் தொகுப்பை ‘தாயார் கொடுத்த தனம்’ என்ற தலைப்புடன் பெருமகிழ்ச்சியோடு வெளியிடுகிறோம்.
இக்கட்டுரைகள் எல்லாம் கவிஞரின் வாழ்க்கை நிகழ்ச்சிகளோடு சம்பந்தப்பட்டவை. ஒவ்வொன்றும் தமிழாராய்ச்சியும், இலக்கிய ரஸனையும் உடையதாய் அமைந்துள்ளது.
வாழ்க்கை நிகழ்ச்சிகளைக் கதைகளை விட ருசிகரமாக எழுதும் திறமை கவிஞரின் தனிச் சிறப்பு.
இதனைப் படிக்கும் மக்கள் அனைவருக்கும் இலக்கிய ரஸனை மாத்திரம் அல்ல, தமிழ் ஆராய்ச்சி மாத்திரம் அல்ல, வள்ளுவன் கூறினானே,
“ஒழுக்கம் விழுப்பம் தரலான்
ஒழுக்கம் உயிரினும் ஓம்பப்படும்”
என்ற அந்த ஒழுக்கத்தையும் தரும்படியாக கட் டுரைகள் அமைந்துள்ளன.
ஆதலின் செந்தமிழ் நாட்டு மக்கள் யாவரும் இந்நூலைப் படித்து, ரஸித்து பயனுற விரும்புகிறோம்.



