திருக்குறளில் செயல்திறன்
கி. ஆ. பெ. விசுவநாதம்

2. இடனறிந்து செய்

போர்க்களம் – ஒருயானை களத்தினுள்ளே நுழைந்து கூர்மையான வேலைத் தாங்கிப் போரிடவந்த வீரர்களை எல்லாம் தன் துதிக்கையால் வாரித் தரையில் அடித்துக் கொன்று குவித்தது. அன்று மாலை, அந்த யானை நீர் அருந்த ஏரிக்குச் சென்றபொழுது சேற்றில் காலை விட்டுக்கொண்டது. காலை எடுக்க முடியவில்லை. நகர முடியவில்லை, துன்பப்படுகிறது. பின்னால் ஒரு நரி வந்து யானையின் உடலைக் கடித்துத் தின்னுகிறது. யானையால் திரும்பி நரியை விரட்டவும் முடியவில்லை. இறுதியில் பலநாள் சேற்றிலே நின்று வேதனைப்பட்டுச் சாகிறது. குறள் இது-

காலாழ் களரில் நரியடும் கண்ணஞ்சா
வேலாள் முகத்த களிறு⁠ (500)

காலையில் ஆறடி நீளமுள்ள வேல்களை வைத்திருந்த வீரர்களை யானை கொன்றது. இதற்குத் துணைசெய்தது போர்க்களத்தில் உள்ள கெட்டிநிலம். மாலையில் அரை அங்குல நீளமுள்ள நகம்படைத்த நரியை விரட்டத் துணை செய்யாதது சேற்றுநிலம். இதிலிருந்து செயல்திறனுக்கு பெரிதும் தேவை இடனறிந்து செய்தல் என்று தெரிகிறது. இது இரண்டாவது யானை.

இந்த புத்தகம் பிடித்திருந்தால்....

மதிப்பிட நட்சத்திரத்தைச் சொடுக்கவும்!!!

சராசரி மதிப்பீடு 0 / 5. வாக்கு எண்ணிக்கை: 0

இந்தப் பதிவிற்கு மதிப்பீடு அளிக்கும் முதல் நபராக இருங்கள்!!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *