திருக்குறளில் செயல்திறன்
கி. ஆ. பெ. விசுவநாதம்

6. பொருளை வைத்துச் செய்

ஒரு வணிகத்தை நடத்தினாலும் ஒரு தொழிற்சாலையைத் தொடங்கினாலும் நிறையப் பொருளை வைத்துத் தொடங்கவேண்டும் என்று வள்ளுவர் கருதுகிறார்.

ஒரு வணிகன் 100 பாக்கு மூட்டைகளைக் கொள் முதல் செய்து வைத்திருந்தான். திடீரெனச் சந்தையில் விலை குறைந்தது: அந்த விலையிலும் 100 மூட்டைகளைக் கொள்முதல் செய்தான். பின்னும் விலை குறைந்தது: அதிலும் 100 மூட்டைகளைக் கொள்முதல் செய்தான். கடைசியாக அவனது சராசரி விலையும் சந்தை விலையும் ஒன்றாக வந்தது. அதற்குமேல் விற்று இலாபம் அடைந்தான். அவனிடம் நிறையப் பொருள் இல்லாதிருந் திருக்குமானால் அவன் தொழிலில் இழப்பு ஏற்பட்டிருக்கும். இதைக் காட்டவும் வள்ளுவர் நம்மை யானைக் காட்டுக்கு அழைத்துச் செல்கிறார்.

கோழிச்சண்டை, ஆட்டுச்சண்டை முதலியவைகளைப் பார்க்க அதிக ஆசை உண்டாகும். அதுபோல தரையிலிருந்து யானைச் சண்டையைப் பார்க்க முடியாது. பார்க்கும்போது பார்ப்பவர்க்கு துன்பமும் வரக்கூடும். அதற்காக அவர்களைக் குன்றின்மீது நின்று யானைச் சண்டையைப் பார்த்து மகிழச் சொல்கிறார் திருவள்ளுவர். நிறையப் பொருளை வைத்துக் கொண்டு வணிகத்தையோ தொழிற்சாலையையோ நடத்துகின்ற செயல்திறன். குன்றின்மீது இருந்து யானைச் சண்டையைக் கண்டு மகிழ்வது போன்றது என்று வள்ளுவர் விளக்குகிறார்.

குன்றேறி யானைப்போர் கண்டற்றால்
தன்கைத்தொன்று
உண்டாகச் செய்வான் வினை.⁠ (758)

இது ஆறாவது யானை.

இந்த புத்தகம் பிடித்திருந்தால்....

மதிப்பிட நட்சத்திரத்தைச் சொடுக்கவும்!!!

சராசரி மதிப்பீடு 0 / 5. வாக்கு எண்ணிக்கை: 0

இந்தப் பதிவிற்கு மதிப்பீடு அளிக்கும் முதல் நபராக இருங்கள்!!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *