வேங்கடம் முதல் குமரி வரை (நான்காம் பாகம்) 
தொ. மு. பாஸ்கரத் தொண்டைமான்

பொருளடக்கம்

வேங்கடம் முதல் குமரி வரை (நான்காம் பாகம்)
தொ. மு. பாஸ்கரத் தொண்டைமான்

முன்னுரை

“வேங்கடம் முதல் குமரி வரை” என்ற தொடரில் நான்காவது புத்தகம் இது. இதற்குமுன் வெளிவந்த பாலாற்றின் மருங்கிலே, பொன்னியின் மடியிலே, காவிரிக் கரையிலே என்ற மூன்று பத்தகங்களையும் தமிழ் அன்பர்கள் ஆவலோடு வரவேற்று ஆதரித்திருக்கின்றனர். அதனாலேயே இந்த நான்காவது புத்தகத்தைப் பொருநைத் துறையிலே என்ற தலைப்போடு வெளியிட முனைகிறேன்.

இந்த நான்காவது புத்தகம் பழனி ஆண்டவன் திருச்சந்நிதியில் இருந்து துவங்கி வைகைக் கரையில் நடந்து பொருநைத் துறையிலே படிந்து கன்னிக்குமரி சந்நிதிவரை செல்கிறது. இத்துடன் தமிழ் நாட்டுத் தலயாத்திரையும் ஒருவாறாக முடிவுறுகிறது. இனி வடநாட்டுத் தலயாத்திரையைத் துவங்கவேண்டியதுதான். அந்தத் தல வரலாற்றுக் கட்டுரைகளும் வேங்கடத்ததுக்கு அப்பால் என்ற தலைப்பில் இரண்டு புத்தகங்களாக வெளியிட எண்ணம். இறை அருள் கூட்ட வேணும்.

கட்டுரைகள் தொடர்ந்து கல்கியில் வெளிவந்தன. அப்போது அவைகளைப் பாராட்டி எழுதிய அன்பர் பலர். அவர்கள் தந்த ஊக்கமே இக்கட்டுரைகள் நூல் வடிவில் வருவதற்கு காரணமாயிருந்தது. அந்த அன்பர்களுக்கு எல்லாம் என் நன்றி.

இந்த நான்காம் தொகுதியில் ஒரு நல்ல முகவுரையைச் சகோதரர் திரு. சா. கணேசன் அவர்கள் வழங்கியிருக்கிறார்கள். அது ஓர் அரிய ஆராய்ச்சியாகவே அமைந்திருக்கிறது. அவர்களோடு நான் இருபது வருஷங்களுக்கு மேலாகத் தொடர்பு கொண்டவன். அவர்கள் நடத்தும் கம்பன் பணியில் எல்லாம் பங்கு கொண்டவன். அவர்கள் ஆசியுடன் இப்புத்தகம் வெளிவருவது ஒரு பாக்கியம் என்றே கருதுகின்றேன். அவர்கள் அன்பிற்கு என் உளம் கனிந்த நன்றி.

என் இலக்கிய வாழ்வை செப்பம் செய்தவர்கள் ரஸிகமணி டி.கே.சி. அவர்கள், அவர்களுக்கும் முன்னால் என்னிடம் அன்பு கொண்டிருந்தவர்கள் வெள்ளகால் சுப்பிரமணிய முதலியார் அவர்கள். அவர்கள் நினைவு என் உள்ளத்தில் என்றும் பசுமையாகவே இருக்கிறது. பொருநைத் துறையிலே என்ற நூலை சமர்ப்பிப்பதில் மிக்க மகிழ்ச்சி அடைகிறேன்.

புத்தகம் வெளிவருவதில் ஆர்வம் காட்டிய அன்பர்கள் புத்தகத்தை அழகாக அச்சிட்டுக் கொடுத்த பிரசுரகர்த்தர்கள், எல்லாவற்றிற்கு மேலாக இக்கட்டுரைகளைத் தொகுத்து புத்தக உருவில் வெளியிட அனுமதி தந்த கல்கி ஆசிரியர் எல்லோருக்கும் என் அன்பம் நன்றியும்.

தொ.மு.பாஸ்கரத் தொண்டைமான்

இந்த புத்தகம் பிடித்திருந்தால்....

மதிப்பிட நட்சத்திரத்தைச் சொடுக்கவும்!!!

சராசரி மதிப்பீடு 0 / 5. வாக்கு எண்ணிக்கை: 0

இந்தப் பதிவிற்கு மதிப்பீடு அளிக்கும் முதல் நபராக இருங்கள்!!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

🛒

உங்களுக்குப் பிடித்த புத்தகங்களை ஆன்லைனில் பெற !