ஆதி - திராவிடர்  பூர்வ சரித்திரம் கோபால் செட்டியார்

ஆதி திராவிடர் பூர்வ சரித்திரம்

வங்காள ராஜதானியின் மேற்கு அறைபாக வடங்களிலிருந்து கன்னியாகுமரி வரையிலுள்ள பாகங்களிலும், இலங்கைதீவிலும் பெலுசிஸ்தான் தேசத்திலும் கலப்பற்ற திராவிடர்கள் இருக்கிறார்கள். அவர்கள் மொத்தம் பதினோரு கோடியே முப்பதுலட்சம் ஜனங்கள்.இதைத்தவிர கலப்புற்ற திராவிடர்கள் இந்தியாவில் சுமார் பத்துகோடி ஜனங்களிருக்கிறார்கள். மகமதியர் ஆறுகோடி இந்தியாவிலிருக்கிறார்கள். இவர்கள் மங்கோலிய தூகி நாட்டாரின் வம்சமாகையால் இந்தியாவிலுள்ள சுமார் முப்பது கோடி ஜனத்தில் கலப்பற்ற ஆரியர்கள் மூன்றுகோடி தான் என்கிறார்கள். தமிழ், தெலுங்கு மலையாளம், கன்னடம், துளுவம், கொச்சி, காண்டு, தோடா, கோட்டா, ராஜமகால், உரேயான், பிராஉளுஇ முதலிய பன்னிரண்டு பாஷைகளும் திராவிட பாஷைகள்.

இத்திராவிடர் இந்தியாவின் பூர்வக்குடிகள். ஆரியர் பின்னிட்டு வந்தவர்கள். திராவிடர் ஆதியில் யூபிரடீஸ், டைக்ரிஸ் நதிகளின் மத்தியிலுள்ள “ஏலம்” நாட்டிலிருந்து இத்தேசம் வந்தார்களென்று சிலர் சொல்லுகிறார்கள். வேறு சிலர் இந்தியாவின் தெற்கிலிருந்தும் கடல் கொள்ளப்பட்டதமான “இலேமூரியா” கண்டத்திலிருந்து வந்தவர்களென்றும் சொல்லுகிறார்கள். வேறு சிலர் ஆரியர் இந்தியாவிற்கு பின்னிட்டு வந்தவழியாகவே இவர்களும் வந்து நியுஜீலண்டு

வரையில் பரவியிருந்த இந்தியாவின் தென்பாகத்தில் குடியேரினர் என்கிறார்கள். வேறு சிலர் திராவிடர் மத்திய ஆசியாவிலிருந்தவர்களென்றும், சிலர் இமயகிரி மூலமாய் இந்தியாவின் வடகிழக்கு கணவாய் வழியாய் இத்தேசத்துக்கு வந்தனர் என்கிறார்கள். திராவிடர் இந்தியாவின் ஆதிகுடிகளே என்பாரும் உளர். இவைகளிலெல்லாம் கொஞ்சம் கொஞ்சம் உண்மை இருக்குமென்றே தோன்றுகிறது.

⁠1800 வருஷங்களுக்கு முன்னிருந்த தமிழர் என்னும் நூலில் ஸ்ரீமான் கனகசபை என்பவர் இந்தியாவின் பூர்வகுடிகள் வில்லவர், மீனவர் என்றும், மத்திய ஆசியாவிலிருந்து வந்த நாகர்களால் இவர்கள் ஜெயிக்கப்பட்டார்களென்றும் தேவ நாகரி என்கிற பாஷைகளின் எழுத்துகளை நாகரிடம் ஆரியர் கற்றுக்கொண்டார்களென்றும் சொல்லுகிறார் மேலும் தமிழ் சங்க நூல்களில் கூறப்படும் மறவர், எயினர், ஒலியர், ஓவியர், அருவளர், பரத்துவர் முதலியோர் மேல்கூறிய நாகவமிசத்தார் என்றும் கூறுகின்றார். பின்னிட்டு இந்நாகர்கள் மங்கோலியாவிலிருந்து வந்த தமர்லிடி அல்லது தமிழர்களால் ஜெயிக்கப்பட்டார்களென்றும் சொல்லுகிறார். மேலும் இத்தமிழரில் மாரர் என்போர் பாண்டிய ராஜ்ஜியத்தையும், திரையர் சோழராசசியத்தையும், வானவர் சேர ராச்சியத்தையும், கோசர் கொங்குநாட்டையும் ஏற்படுத்தினதாகச் சொல்லுகிறார்.

⁠இந்தியாவின் பூர்வீக குடிகள் கருப்புநிறமுள்ள ஓர் வகை நீக்ரோ ஜாதியார் என்பாரும் உளர். நாகர்களே பூர்வ குடிகள் என்று சொல்பவரும் உளர். வேறு சிலர் அம்மாதிரி கருப்புநிறமுள்ள பூர்வகுடிகளிருந்திருந்தாலும் அவர்கள் நாகர்களுடன் விவாகம் முதலியது செய்துகொண்டு கலந்துகொண்டார்கள் என்பதற்கு சந்தேகமில்லை என்கிறார்

கள். டாக்டர் கால்ட்வெல் துரை ” பறையர் ” என்போர் முதல் எல்லோரும் திராவிடரே, வேறு பூர்வகுடிகளில்லை என்கிறார். ஆயினும் நாகரே பூர்வகுடிகள் என்று தோன்றுகிறது. கிமு. 11-வது நூற்றாண்டில் தமிழர் வந்தபிறகு நாகரும் தமிழரும் கலந்து திராவிடராயினர்.

⁠1911 ௵ சூலை௴ 28௳ யுள்ள ரிபோர்ட்டில் சர்க்கார் சாசன சாஸ்திரவித்துவான் அடியில்வருமாறு கூறுகின்றனர். “மகாபாரதவீரன் அருச்சுனன் நாகஇராணியையும், தமிழ் நூல்களில் சோழ அரசர்களைப்பற்றி அவ்வித சங்கிதியையும், நாகர்கள் பல்லவ அரசர்களுடன் விவாகம் செய்து கொண்டதாகவும் ஏற்படும் சரித்திரங்களால் நாகர்கள் இந்தியாவின் பூர்வகுடிகள் என்று ஏற்படுகிறதுடன் வடக்கிலிருந்து வந்த அரசர்களால் ஜெயிக்கப்பட்டார்களென்றும் அப்படிவந்த அயலாருடன் விவாகங்கள் செய்து கலந்தபடியினால் நாகர் என்னும் வமிசம் மறைந்துவிட்டதாகவும் ஏற்படுகிறது. மணிமேகலையில் அடியில் கண்ட பாடலிருக்கிறது:-

“வெனறிவேற் கிள்ளிக்கு நாகநாடாள் வோன
றன்மகள் பீலிவளை தானபயந்த,
புனிற்றிளங்குழவி -“

⁠அதாவது. “நாகநாட்டு அரசன் குமார்த்தி பீலிவளை எனபவள், ஜெயக்கொடிஏந்திய சோழன் கில்லி என்பவனுக்கு ஈன்ற இளங்குழந்தை.”

⁠இதனால் தமிழ் அரசனாகிய கில்லிக்கும் நாகநாட்டு பெண் பீலிவளை என்பவளுக்கும் விவாகம் நடந்ததாக ஏற்படுகிறது. இம்மாதிரியாக தமிழர்களும் நாகர்களும் விவாகங்கள் செய்துகொண்டு கலப்புற்றார்கள். இவ்வகை கலந்தவர்கள் சமபூமியில் உள்ளவர்தான். அம்மாதிரி கலக்காதவர் மலைகளில் இன்னு மிருக்கின்றனர். நீலகிரியிலுள்ள தோடர்கள் கலப்பற்ற திராவிடர்கள் என்றும், காடர் குறும்பர் முதலியவர்கள் பூர்வகுடிகள் என்றும் சொல்லுகிறார்கள்.

⁠தமிழிலக்கண வித்துவான்களும் கூட திராவிட நாட்டிலிருந்தவர்களை மக்கள், தேவர், நரகர் என்றனர். இதில் நரகர் என்பது நாகர், மக்கள் என்பது தமிழ் மக்கள், தேவர் என்பது ஆரிய பிராமணர். நரகர் என்பது நாகர் என்கிற பூர்வகுடிகன். காடுகளிலும் தாழ்ந்த நிலங்களிலும் விளங்காத இடங்களிலும் (நரகம்) இருந்த பூர்வகுடிகளுக்கு நாகர் என்றும் பெயர். மேற்குறியவைகளால் திராவிடர் என்பது ஆதிகுடிகள் – நாகர் – தமிழர் என்கிற மூவகை ஜனங்கள் ஒன்று பட்டபிறகு உண்டான பெயர் ஆதிகுடிகள் இல்லை என்று ஏற்பட்டால், நாகரும் தமிழரும் சேந்து திராவிட ராயினர்.

மணிமேகலை, பத்துப்பாட்டு முதலிய நூல்களில் நாகர்களைப்பற்றி சொல்லியிருக்கிறது. பூர்வீக புத்தமத நூல்களிலும் நாகர் என்கிற பெயர் அடிக்கடிவருகிறது.

சிலப்பதிகாரத்தில் அடியில் கண்டவைகள் காணப்படும்.

“நாக நன்னாட்டு நானூறி யோசனை
வியன்பாதலத்து வீழ்ந்து கேடெய்தும்”

நக்க சாரணர் நாகர் வாழ்மலை

⁠நாகநாடு என்பது தமிழகத்துக்கு கிழக்கு அல்லது தென்கிழக்கிலிருப்பதாக சொல்லப்பட்டிருக்கிறது. தமிழ் ஜில்லாக்களில் கள்ளர் வேடர்களில் நீலன், நாகன் என்கிற பெயர்களை சாதாரணமாய் காணலாம். கள்ள ஜாதியினராகிய திருமங்கை ஆள்வாருக்கு நீலன் என்பது பெயர். அவர் மலையரசன் ஒருவனுக்கு ஓர் துணிகுடுத்தார் – அதை சிறுபாணாற்றுப்படையில், “நீல நாகன் நல்கிய கலிங்கம்” என்று

கூறப்பட்டிருக்கிறது. கண்ணப்பநாயனார் தகப்பனுக்கு நாகன் என்று பெயர் அவர் ஓர் வேடர். நாகர்கள் வீரர்கள். அநநாகரில் ஒலிநாகன், முகளிநாகன், சங்கநாகன், நீல நாகன் என்று நால்வகை யுண்டு.

⁠மறவர், எயினர், ஒலியர், ஓவியர், அருவலர், பரத்துவர் இவர்கள் நாகவமிசத்தை சேர்ந்தவர். பூர்வீக தமிழ் நூல்களில் மறவன், எயினன் என்கிற வார்த்தைகளை அடிக்கடி காணலாம். அவர்கள் வில்வித்தை தெரிந்தவர்களாகவும், யுத்த வீரர்களாகவுமிருந்தார்கள். பாண்டிய நாட்டில் இப்பொழுது கூட மறவர்களை அதிகமாய் பார்க்கலாம். பூர்வீக காலமுகல எயினர்கள் பல்லவ சோழநாட்டிலிருந்தார்கள். பறையர் என்போர் மேல்குறித்த எயினர் தான். இவர்களை தற்காலத்திலும்கூட வட ஆர்க்காடு, செங்கலப்பட்டு, தஞ்சாவூர் ஜில்லாக்களில் அதிகமாய் காணலாம் இவ்விடங்களில்தான் எயினர் முன்காலத்திலிருந்தது.

⁠கி. பி. இரண்டாவது நூற்றாண்டிலிருந்த மாங்குடி கீலார் எழுதிய ஓர் நூலில் அடியிலகண்ட பாடலிருக்கிறது.

⁠”துடியன் பாணன் பறையன் கடம்பனென், றிநநான் கல்லது குடியுமில்லை (புறநாநூறு) இதில் தான் முதல்முதல் “பறையன்” என்கிறபதம தொழில்பெயராக காணப்படுகிறது இவைகள் எல்லாம் தொழிலைக் காண்பிக்கும் பெயர்கள். இதைத்தவிர 11-வது நூற்றாண்டிலிருந்த ராஜராஜ சோழன் காலம்வரையில் பறையன் என்ற பெயரே தமிழ் நூலிலாவது சாசனங்களிலாவது காணோம். கி.பி. 11-வது நூற்றாண்டில் பறையன் என்பது ஜாதிபெயரானது. டாக்டர் ஒப்பார்ட்துரை, சமிஸ்கிருத பகரியா (மலைநாட்டின்) என்பதிலிருந்து பறையன் என்ற பதம் உண்டானதாக சொல்லுகிறார். பறை அடித்ததால் இவர்களுக்கு பறையர்

என்கிற பெயர் உண்டானது என்றும் சொல்லப்படுகிறது. கி. பி. இரண்டாவது நூற்றாண்டு முதல் 11-வது நூற்றாண்டு வரையில் பறையன் என்பது இந்த அர்த்தத்தைதான் உடை யதாயிருந்தது. பௌத்தமதமும் சமணமதமும் அடங்கியபிறகு பார்ப்பார் ஜாதிளித்தியாசங்களை கடூரமாய் ஏற் படுத்தியபோது இப் பறையரென் போரைப்பிரித்து அவர் களை தாழ்மை படுத்தினர். இந்த விவரங்களை பின்னிட்டு றைபோம்

இந்த புத்தகம் பிடித்திருந்தால்....

மதிப்பிட நட்சத்திரத்தைச் சொடுக்கவும்!!!

சராசரி மதிப்பீடு 0 / 5. வாக்கு எண்ணிக்கை: 0

இந்தப் பதிவிற்கு மதிப்பீடு அளிக்கும் முதல் நபராக இருங்கள்!!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *