ஆதி திராவிடர் பூர்வ சரித்திரம்

அத்தியாயம்: 5

பிராமணர் தான் பறையர்என்போரை தாழ்த்தியது.

முதலில் பிராமணர் கல்வியற்ற குடிகளையும் காமிய முற்ற சிற்றரசர்களையும் வஞ்சித்து பயந்து யாசித்துவந்தார்கள். அதிகாரத்துடன் பிச்சை எடுத்து உண்ண ஆரம்பித்த போது திராவிட பௌத்தர்களை ஊரைவிட்டு துரத்தியும் விட்டார்கள். அத்திராவிட பெளத்தர் பிராமணர்களின் மோச நடவடிக்கைகளை சகல குடிகளுக்கும் பறைந்துவந்தார்கள் அப்படி செய்தவர்களை பறையர் என்று வகுத்தது சகல விஷயத்கிலும் சீர்பெற விடாமல் நசித்துவிட்டார்கள். புத்த விவேக்குடிக ளிருக்கப்பட்ட யிடங்களில் பிராமணன் வந்து விட்டால் சாணத்தை கரைத்து அவர்களை துறத்தி சாணச் சட்டியை உடைப்பது வழக்கமாம். அப்படி ஓடும்காலத் தில் பிராமணர் இவர்களை தீண்டலாகாது என்று சொல்லிக் கொண்டு ஓடினார்களாம். அதை அனுசரித்து விவேகமற்ற குடிகள் இவர்களை தீண்டாதவர்களென்று கூறினார்கள். அப்படியே ஏற்படுத்தியும் விட்டுவிட்டார்கள். பிராமண பருந்து என்றும் பறப்பருந்து என்றும் பாப்பார்நாய், பறநாய் என்றும் ஒவ்வொன்றுக்கும் பெயர் வைத்தார்கள். வீரவாகு சக்கிரவர்த்தியை பறையன் என்றார்கள். அரிச்சந்திர புராணமெழுதி, அதிலும் “பறையன் ” என்ற பெயரை பரவச் செய்தார்கள். “பறையரை” பதிமூன்று வர்க்கமாய் பிரித்து “பறையன்” என்ற பெயரைப் பரவச்செய்தார்கள். மேலும் திராவிட பௌத்தர்களை சுத்த சலத்தண்டை நாடவிடாமலும், அம்பட்டர்களை சவரம் செய்யவிடாமலும், வண்-

ணார்களை வஸ்திரம் துவைக்கவிடாமலும் செய்துவிட்டார் கள். இம்மாதிரியாக திராவிட பௌத்தர்கள் ஸ்தானம் செய்யாமலும் துணிகளில்லாமலும் ஏழைகளாய் போனமையால் அழுக்குடையவர்களாய் தாழ்ந்த நிலைமைக்கு கொண்டு வரப்பட்டார்கள். தற்காலத்திலும் ஓர் பிராமணனை பிடித்து அவனை ஸ்தானம் செய்யவிடாமலும் தரித்துக்கொள்ள வஸ்திரமில்லாமலும் அழுக்குத் துணிகளை போட்டுக்கொள்ள செய்தால் அவன் பறையன் போல் தானிருப்பான். ” பறையர் என்போர் இந்த ஸ்திதிக்கு வந்ததற்கு காரணம் பிராமணர்கள் தாம் என்பதற்கு சந்தேகமில்லை. கி.பி. 7-வது நூற்றாண்டில் தென்னிந்தியாவிற்கு வந்த ஐயன திசாங்கு என்பவர் “பிராமணர் சமயபேதககாரர்களுடனும் அவர்கள் கடவுள்களுடனும் சண்டை செய்துக்கொண் டிருந்தபோதிலும் அம்மதம் (புத்தமதம) நிஜமாகவே தென்னிந்தியா முழுமையும் உன் னத ஸ்திதியிலிருந்தது. இசசாட்சியததினால் புத்த மதத்துடன் சண்டை செய் தவர் பிராமணர் என்று ஏற்படுகிறது. திராவிடர் பௌத் தர்களை, பறையராக தாழ்த்தியது பிராமணர் என்பதற்கு வேறு சாட்சியம் வேண்டியதில்லை. திராவிட பௌத் தர்களுக்கு பெருத்த விரோதிகள் பிராமணரேயாம். இதைத் தவிர தமிழ் வாசகம் எழுதிய ஸ்ரீமான், யம . ஸ்ரீனிவாச அய் யங்கார், M. A. அவாகள் பிராமணர். திராவிடா சங்கிதி தெரிந்தவராயு மிருக்கிறார். அவர் சொல்லுகிறதாவது:- ” எல்லாவற்றிற்கும் மேலாக பறையர் ஜாதியை ஏற்படுத் திய சூழ்ச்சியில் முதல் காரணம் பிராமணரிட விலக்குகையே”. விவேகானந்த சுவாமிகளும் இந்து தேசம் தாழ்வடைந் தது பிராமணர்களால் தான் என்கிறார். அவர் சொல்வ தாவது : “கடித்த பாம்பே தான் கக்கிய விஷத்தை தானே உரிஞ்சால், கடியுண்ட மனிதன் பிழைப்பான் என்கிற ஓர் குருட்டு நம்பிக்கையுண்டு. அப்படியானால் பிராமணர் தங்களிட விஷத்தை தாங்களே உரிஞ்சவேண்டும்.”⁠⁠.

⁠ஆலசிய மகாத்மியம் என்கிற பூர்வீக நூலில் 69-வது அத்தியாயத்தில் தங்கள் மத நம்பிக்கைக்காக பௌத்தர் களும் சமணர்களும் யெப்படி தலை வெட்டுண்டார்களென் றும், சிலருடைய தலைகள் எப்படி எண்ணெய்செக்கில்வைத்து ஆட்டப்பட்டதென்றும், எப்படி கழுவேற்றப் பட்டார்க ளென்றும், அப்பேர்ப்பட்டவர்கள் திரேகங்களை குள்ளநரி, நாய் பட்சிகளுக்கு இறையாக விடப்பட்டதென்றும் பார்க்கக் காணலாம். மேல்கண்ட அவஸ்தைகளெல்லாம் மதுரை மீனாடசியம்மன் கோவிலின் பரிசுத்தகிணற்றின் சுவற்றில் ஒரு பெரிய தட்டினமேல் எழுதியிருப்பதை இப்பொழுதும் பார்க்கலாம். ஐயன் திசாங்கு சாட்சியத்தினால் இம்மாதிரி யெலலாம் சமணா பௌத்தர்களை நசுக்கியது பிராமணர் என் பதற்கு யாதொரு சந்தேகமுமில்லை.

⁠தற்காலத்தில சிலர் பிராமணரல்லாத மற்ற ஜாதியா ரும் இதற்கு உத்திரவாதம் என்பார்கள். சில திராவிடர் பூர்வீகத்தில் கல்வியின்மையால் பிராமணரிட ஜாதிவித்தியா சத்தை ஏற்றுக்கொண்டனர். மற்ற திராவிட ஜாதியாரும் தாழ்த்தப்பட்டவர்களே. அவர்களையும் பிராமணர் தீண்டு கிறதில்லை. இப்பொழுது பிராமணர் தங்களை ஏமாற்றிவிட் டார்கள் என்று மற்ற ஜாதியுள்ள திராவிடர் அறிந்துகொண் டார்கள். தற்காலம் கிளம்பியிருக்கும் பிராமணரலலா தார் இயககத்தினர் பறையர் என்போருடன் சமபந்தி போசனம் செய்து காண்பித்தனர். திராவிடன் முதலிய பத்திரிகை கள் இன்னும் அதிகமாய் பரவ நாளுக்குநாள் திராவிடஜாதி யார் எல்லாரும் பறையர் என்போரை சமமாக ஏற்றுக் கொள்வார்கள். தற்காலம் மற்ற திராவிடர் அறிவின்மை

யால் ஜாதிவித்தியாசத்தை பாராட்டுகின்றனர். பிராமண ரோவெனில் அவர்களுக்கு தாங்கள் செய்தது பிசகென்று தெரிந்தும் ஜாதிவித்தியாசத்தை அப்படியே நீடித்து வளர்க்கவேண்டுமென்றும் பறையர் என்போரை காலின்கீழ் நசுக்கி வைக்கவேண்டுமென்றே நினைக்கிறார்கள். இதற்கு சாட்சி யம் அவர்களிட வர்னாசிரம் இயக்கமே போதும். பிராம ணர்கள் பறையர் என்போரை விர்ததிக்கு கொண்டுவர பிரயத்தனப்படுகிறதில்லை கொஞ்சகாலத்துக்கு முன் ஆனரிபில் வி. கிருஷ்ணசாமி அய்யங்கார் அவர்கள் பறையர்கள் அந்த ஸ்திதியிலிருப்பது அவர்கள் கருமத்தினால் என்றும் தாங்கள் செய்யவேண்டியது ஒன றுமில்லை என்று சொன்னார். இது தான் எவ்வித பிராமணனும் சொல்லிக்கொள் டிருக்கிறான். சுயஆட்சி கேட்கும் இக்காலத்தினும் கூட ராஜ பாதையில் ” பறையர் ” என்போர் செல்லக்கூடாது என்று பிராமணர் தகரார் செய்கிறாகள். திராவிட சகோதராக ளாகிய ஆதி திராவிடர் நன்று யோசித்தது மற்ற திராவிட களுடன் சகோதரபாவம் பாராட்டுவாராக.

இந்த புத்தகம் பிடித்திருந்தால்....

மதிப்பிட நட்சத்திரத்தைச் சொடுக்கவும்!!!

சராசரி மதிப்பீடு 0 / 5. வாக்கு எண்ணிக்கை: 0

இந்தப் பதிவிற்கு மதிப்பீடு அளிக்கும் முதல் நபராக இருங்கள்!!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *