ஆதி திராவிடர் பூர்வ சரித்திரம்

அத்தியாயம்: 6

ஆதிதிராவிடர் சிறப்பை நாடினவர்.

இம்மாதிரி யெல்லாம் ஆதி திராவிடரை தாழ்ததியதை நீக்கி, யார் யார் உயர்த்த பிரயத்தனப்பட்டனர் என்பதை இனி யோசிப்போம். திராவிட பௌத்த கவிஞர் தங்களை கீழ்படுத்தியதை ஒத்துக்கொள்ளாமல் பாடல்களை பாடியிருக் கபிலர்மேல் சொல்லியபடி தம்மகவலில் ஜாதி வித்தியா சத்தை பிராமணர் நாட்டினர் என்று சொல்லி பிறப்பில் ஜாதியில்லை யென்கிற கருத்துடன்.

“தென் திசைப்யுலையன் வடதிசைககேகி
பழுதரவோதி பார்ப்பானாவான
வடதிசைப்பார்ப்பான் தென் திசைக்கேகி
நடையது கோணி புலையனாவான்.”

என்றார், இவர் அகவல் முழுமையும் படித்து பார்க்கவும். சிவவாக்கியர் அடியில்வருமாறு பாடினர்.

பறைச்சியாவ தேதடா
பண கதியாவ தேதடா
இறைச்சிதோ லெலும்பினு
மிலக்கமிட் டிருக்குதோ
பறைச்சி போகமவேறதோ
பணக்கி போகமவேறதோ
பறைச்சியும் பணத்தியும்
பகுத்துப் பாருமு முளே.

அவிரோத உந்தியார் வுரையாசிரியர்.

அறுவகை சமய கரரையு மெய்ப்பொருளு
மறுபத்திநாலு நற்கலையு ,
மறுவற்ப்பயின்று மாசரத்திகழு
மறிஞராமவர்களே யெனினும்,
குறைவறத் தன்னைக் கொடுத்திடுங்குறவன்
குரைகழல் பணிந்தவரனறேல்,
பரையா மற்றவரை பறையரே
யெனினு மருளுடையவா பரமபரரே.”

ஞானவெட்டி யாக்கிய சாம்பவனார் அடியில்வருமாறு சொல்லுகிறார். “

விட்ட குறை வருமளவும் உபதேசங்காண்
மெய்யுடலும் தளர்ந்து புவிமேறுநோக்கி
தட்டழிந்து விழும்போது வோதிவைத்த
சாததிரத்தை க்ஷணப்போது மறியப்போமோ
எட்டிரண்டு மறியாதார் குருக்களாமோ
யென்னையினி பறையனென்று தள்ளப்போமோ
மட்டமரும் பூங்குழல்வா லாமபிகைப்பெண்
வங்கிஷத்திலுதித்த சாமபவனும் நானே.”

இவைப்போன்ற அநேக பாடல்கள் திராவிடர் பௌத்த கவிஞர்கள் வரைந்துளார்.

மற்ற திராவிட புலவர்களும் அம்மாதிரியே வரைந்துளார். சித்தா்கள் பிராமணர் ஏற்படுத்திய ஜாதிவித்தியாசங்களுக்கும் பிராமணர் வேதங்களுக்கும் ஆசாரங்களுக்கும் விரோதிகள் அவர்கள் “பறையர்” என்போரை உயர்த்த முயன்றார்கள்.

உதாரணமாக குதம்பைசித்தர் சொல்லுகிறார்.

குதம்பைச் சித்தர் பாடல்

” ஆண்சாதி பெண்சாதி யாகுமிரு சாதி
வீண்சாதி மற்றசெலலாங் குதம்பாய் – வீண்
பார்ப்பார்கள் மேலென்றும் பறையோர்கள தீழென்றும்
தீர்ப்பாகச் சொலவசென்ன குதமபாய்- தீழ்ப்பா
கர்ததன் பறையோரைப் பாப்பாரைப் போலவே
தாப்பாய் படைத்தாரோடி குதம்பாய் – தீழ்ப்பா”

பத்திரகிரியார் தம்மிட புலம்பலில்

“ஆதிகபிலர் சொன்ன யாகமத்தின் சொற்படியே
சாதிவரையிலலாமற் சஞ்சரிப்பசெககாலம்.

இன்னொரு புலம்பலில்,

“சாத்திரத்தை சுட்டு சதுர் மறையை பொய்யாக்கி
சூத்திரத்தைக்கண்டு சுகம்பெருவ தெக்காலம்,”

என்றார் .

தேவி காலோத்திரத்திலேயே அடியில் கண்ட பாடலிருக்கிறது.

“சமையாசார சங்கற்ப விகர்ப்பமு
மையார்தாங் குலவாசார மானது
மிமையாதாரும் விடாத வில்லாழ்க்கையு
மமையார் தோளாய் விடுதலா சாரமே.”

இம்மாதிரி யின்னம் அநேக பாடல்கள் எடுத்து எழுதலாம்.

இடமின்மையின் இங்கு சிலவற்றை கூறுவோம்.

பாச்சலூர் பதிகம்.

“ஒருபனை இரண்டுபாளை ஒன்று நுங் கொன்று
கள்ளு அறிவினி லுயாந்தவர்க்கு அதுவுங்கள் இதுவுங் கள்ளே
ஒருகுலை உயர்ந்ததேனோ ஒருகுலை சாழ்ந்ததேனோ
பறையனைப் பழிப்பதேனோ பாச்சலூா கிராமத்தாரே.”

நல்வழியில்.

” ஜாதியிரண்டொழிய வேறில்லை சாற்றுங்கால்
நீதிவழுவா நெறிமுறையின்-மேதினியில் இட்டார்
பெரியோ ரிடாதா ரிழிகுலத்தோர் பட்டாங்கி லுள்ளபடி.”

இன்னும் ஒருவர் கூறுவதாவது:-

“பறையரைப் பறையரென்று பறைந்திடு மனிதர்கேளீர்
பறையர் தம மலததைத்தின்னும் பனறியைப் புசிப்பதென்னோ
கறையதே யாகுமந்தக கறிதனைக் கலத்தினிட்டு மறையவே
வைத்துத்தின்னு மனிதரே பறையர்கண்டீர்.”

இம்மாதிரியாக தமிழ் புலவர்களும் மற்றவர்களும் ஜாதி வித்தியாசத்தை நீக்கவும் பிராமணர் ஆசாரம் வேதங்கள் இவைகளை நீக்கிவிடவும் பலவிதமாய் பாடல்கள் மூலமாய் பிரசங்கித்துவந்தார்கள். ஆயினும் ஜாதி வித்தியாசங்கள் நீங்கவில்லை. இந்துமதம் ஜாதியின் பேரில் கட்டப்பட்டிருக்கிறது. ஜாதியை நீக்கினால் மதம் கெட்டுப்போகிறதாக நினைக்கிறார்கள். ஆங்கிலேய நாகரீகமும் கல்வியும் இத்தேசத்திற்கு வந்தபிறகு எல்லாரும் கண்திறந்து கொண்டார்கள். ஆயினும் பூர்வகாலத்தைப்போல் தற்காலத்தில் மூடர்களிருப்பதால் முழுமையும் நீக்கக்கூடாமலிருக்கிறது. ஆயினும் ஆசார சீர்திருத்தக்காரர் ஜாதி வித்தியாசத்தை ஒழிக்க முயர்சி செய்கின்றனர் ஆதி திராவிடரை விர்த்திசெய்ய ஆரிய சமாஜம் அதிக பிரயத்தனப்படுகிறது எவறாயினும் ஆரிய சமாஜத்தில் சேர்ந்தால் அதைச் சேர்ந்தவர்கள் அவனை சமமாக ஏற்றுக்கொள்ள தயாரா யிருக்கிறார்கள். அநேக அத்தேசத்து பஞ்சமர்கள் அதில் சேர்ந்திருக்கிறார்கள். இன்னம் ஒருசபை பிரமசமாஜ் என்பது இவர்களுக்கு கூட ஜாதி வித்தியாசம் கிடையாது. ஆனால் சென்னப் பட்டணம் பிரமசமாஜகதார் ஜாதியை ஒழிக்கவில்லை இவர்களும் பஞ்சமர்களுக்கு அதிகமாய் உழைக்கிறார்கள். தாழ்த் தப்பட்டவர்களை உயர்த்த Depressed Classes Mission பல இடங்களில் இந்தியாவில் தற்காலத்தில் எற்பட்டுவருகின்றன. கிரிஸ்து மதமும் மகமத்திய மதமும் அநேக ஆதி திராவிடர்களுக்கு நன்மைகள் செய்திருக்கின்ன. ஆங்கிலேய கவர்ன்மென்டாரும் அநேக நன்மைகள் செய்திருக்கி றார்கள். இனி செய்யவும் போகிறார்கள்.

இந்த புத்தகம் பிடித்திருந்தால்....

மதிப்பிட நட்சத்திரத்தைச் சொடுக்கவும்!!!

சராசரி மதிப்பீடு 0 / 5. வாக்கு எண்ணிக்கை: 0

இந்தப் பதிவிற்கு மதிப்பீடு அளிக்கும் முதல் நபராக இருங்கள்!!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *