
ஆதி திராவிடர் பூர்வ சரித்திரம்
அத்தியாயம்: 4
பறையர் எப்படி தாழ்த்தப்பட்டார்கள்.
மேல்கண்டபடி எல்லாம் சிறப்புற்றிருந்த ‘பறையர்” என்போர் யாரால் எப்படி தாழ்த்தப்பட்டார்கள் என்பதை சற்று விசாரிப்போம். இப்படி பறையரைத் தாழ்த்தியவர்” ஆரிய பிராமணர். இவ்வாரியர் சுமார் முவ்வாயிறம் வருஷங்களுக்கு முன் மத்திய ஆசியாவிலிருந்து இந்தியாவின்வடமேற்கு கணவாய் வழியாய் இந்தியாவிற்கு வந்தனர். இவர்கள் வந்து இந்தியாவில் விந்தியபர்வதத்திற்கும் நர்மதைக்கும் வடக்கில் தாங்கள் பெயரிட்ட “ஆரியவர்த்தம்” என்கிற பாகத்தில் நெடுங்கால மிருந்தனர். இவர்கள் பூர்வீக சாஸ்திரங்களின் படி ஆரிய வர்த்தத்தைவிட்டு தென்புறம் வரத்தகாதவர். தென்னிந்தியாவில் தமிழர்கள் ஆரியருக்கு இடங்கொடாமல தாங்கள் தமிழ் தெலுங்கு முதலிய திராவிட பாஷைகளைப் பேசிக்கொண்டு சுயாசசியாய் நெடுங்கால மிருந்தனர் இத்திரா விடர் ஜாதிகுல வேறுபாடுக ளற்றவர்களாய் ஒருவரோடொ ருவர் விவாகம பிரிகி போசனம் முதலியவைகள் எவ்வித ஆக்ஷேபனையுமன்றி செய்து கொண்டும், பிரதேசங்களுக்கு கப்பல யாத்திரை சென்று வியாபார முதலியதுசெய்தும் கல்வியிற் சிறந்தவர்களாகவும் அதிக நாகரீக முடையவர்களா வுமிருந்தார்கள். இத்திராவிடராஜ்ஜியங்களைப்பற்றி மனுதர்ம சாஸ்திரத்திலும் ஆரியர் புராணமாகிய ராமாயணத்திலும் சொல்லப்பட்டிருக்கிறது. திராவிட நாட்டின் சிறப்பைப் பற்றியும் அவர்கள் நாகரீகத்தைப்பற்றியும் இராமாயணத்தி லேயே பார்க்கக் காணலாம். இவ்வண்ணம் சிறப்புற்று சுத்த சைவசீலராய் கோதரத்துவம் நிறைந்து சுகமாய் வாழ்ந்து வந்த நாட்டிற்கு ஆரியா முதலில் யாத்திரைப் பிரயாணிக ளாக வந்தனர். அவர்களுக்கு திராவிடர் மிலேச்சர் என்று பெயரிட்டனர். பண்டைகாலத்து நிகண்டுகள், திவாகரம், பின்கலந்தை முதலியவைகளில் ஆரியர் என்ப தற்கு “மிலேச்சர் என்றே சொல்லப்பட்டிருக்கிறது. இவ்வாரியரில் சிலராவது அனுசரித்துவந்த ஆசாரங்களும் நடத்தைகளும் திராவிடர்களின் நடவடிக்கைகளுக்கு தாழ்ந் திருந்தமையால் அம்மாதிரி ” மிசேச்சர் என்று பெயரிட் டிருக்கவேண்டும். சமஸ்கிருத பாரதத்திலேயே சிந்துநதியின் கணவாயிலிருந்த சில ஆரியர்களுக்கு “ மிலேச்சர்” என்று பெயரிடப்பட்டிருக்கிறது. மேலும் ஆரியருக்கு “சுரர்” என்கிற ஒரு பெயர் உண்டு. அதன் பொருள் “சுரா” சம்மந்தமுடையவர் எனப் புலப்படுகிறது “சுரா” என்பது கள், மது என பலபொருள் குறித்த ஒரு மொழி யாதலால் சுரர் என்பதற்கு கள் குடியா என்பதே பொரு ளாம் இவ்வாரியர்கள் குதிரை ஆடு மாடு முதலியவைகளை தின்பதுடன் சோமபான மென்னுப கட்குடித்தலுமுடைய வராதலினால், வைதிக கிரியை என்று யாகங்கள் செய்வதும், அவற்றுள் ஆடு மாடு அசுவமாதிய இவைகளை பலியிட்டு புசிப்பதுமன்றி புருஷமேத யாகமென மனிதரையும் பலியிட்டு தின்றுவந்தார்கள். இதனாலேதான ஆரியருக்கு ஆதி காலத்தில மிலேச்சர் என்றும் சுரா என்றும் பூர்வகால நூலாசிரியர்கள் கூறியிருக்கின்றனர். மேலும் தமிழகத்தில் முதல் முதல் வரும்போது ஸ்தமபத்தின்பேரி லாடுபவர்களாகவும் வந்தார்கள் – ஆகையினால் தமிழர்கள் அவர்களை தொம்பரென்றும் ஜாலவித்தைக்காரர்களென்றும் நினைத்தார்கள். “ஆரியக் கூத்தாயினும் காரியத்தின்பேரில் கண்ணாயிரு” என்கிற பழமொழியில் நாளைவரையில் ஆரியக்கூத்து என்கிற பதம் தமிழிலிருக்கிறது. மேலும் இன்னொருபதமாகிய “ஆரியப்பாவை” என்பது ஆரியர்கள் தமிழ்நாட்டில் ஆட்டக்காரர்களாக திரிந்துகொண் டிருந்தார்களென்பதை நியாபகப்படுத்துகிறது.இவ்விதமாக ஆரியரில் சிலரிருந்தபோதிலும் அவர்கள் மொத்தத்தில் அறிவுள்ளவர்களாகவும் நாகரீகமுடையவர்களாகவே இருந்தார்களென்று ஏற்படுகிறது. இவ்வாரியர் தமிழகம் வந்து சேர்ந்து சுமார் 400, 500 வருஷங்களுக்கு பின்னர் எழுதப்பட்ட தொல்காப்பியத்தில் பொருளதிகாரம் 502-வது பாடலில் அடியில்வருமாறு ஆரியரை தாழ்மையாக கூறியிருக்கிறது.
“ பார்ப்பான் பாங்கன் றொழி செவிலி சீராரு சிறப்பிற் கிழவன கிழத்தியோ டளவியன மரபினறு வகை பேருங் களவினிற் கிளவிக் குறிய ரெமய.”
இவ்வாரிய பிராமணர்கள் கடவுளுக்கும் மனிதர்களுக்கும் மத்தியில் தாங்கள் நிற்பவர்களென்றும், அநேகவித மந்திரவித்தைகளை தெரிந்தவர்களென்றும், மனிதர்களுக்கு தாங்கள் தேவர்களென்றும், தாங்கள் எதையும் செய்ய சக்தி யுள்ளவர்களென்றும், நவக்கிரகங்கள் தாங்கள் சொல்லுகிற படி நடக்கவேண்டியவைகளென்றும், வேண்டும்போது மழை பெய்யச்செய்ய சகதியுள்ளவர்களென்றும் தமிழர்களை பலவகையில் பயமுறுத்தினார்கள். பண்டைகாலத் தமிழரசர்கள் நீங்கி விபசாரத்தால் பிறந்த தமிழரசர்களை கைவசப் படுத்திக்கொண்டு பலவித தந்திரங்கள் செய்து ஏமாற்றி, குற்றமற்ற தமிழர்களை தங்களிட தீய ஒழுக்கங்களையும் ஆசாரங்களையும் ஏற்றுக்கொள்ளும்படி செய்தனர்.
தமிழ் நூல்களெலலாம் கடலுக்கு இறையாய்விட்ட படியினால்,பின்னிட்டுவந்த தமிழ் வித்துவான்கள் வியாசர் கட்டுபாடு செய்து எழுதிய நூல்களையே ஆதாரமாக எண்ணி தமிழர் எலலாம் ஆரியரென்று சரித்திரம் தெரியாமல் கூறி போயினர். ஆரியர் தமிழர்களிடத்திலிருந்து தங்களுக்கு வேண்டியது எவ்வளவோ அவ்வளவு தெரிந்துகொண்டு, தங்கள் சுயநன்மைகளைக்கோரி எழுதிக்கொண்ட சுருதிஸ்மிருதி இதிகாசங்களையே தமிழ் வித்துவான்கன் உன்மையான நூல் களென நம்பி தாங்கள் அவைகளை அனுசரித்தும் பிறரை அனுசரிக்கும்படி ஏற்பாடுகள் செய்துவிட்டு போயினர். அவ் வித கொள்கைகளையும் அனுசரிக்க அநேக நூல்களையும் எழுதிவிட்டார்கள். தமிழகத்தில் ஆரியரிட ஆசாரங்களையும் நடவடிக்கைகளையும் ஒற்றுக்கொள்ளாதவர் தாழ்ந்தவர் என்கிற கருத்தும் பரவியது. இல்விதமெல்லாம் தமிழர்களை ஏமாற்றி தங்கள் ஆசாரங்களையும் தீய ஒழுக்கங்களை எல்லாம் ஏற்றுக்கொள்ளும்படி ஆரியர் செய்தனர். அவ்வகை ஏற்படுத்தியதில் ஜாதிவித்தியாசம் என்பது ஒன்று. கபிலர் தம அகவலில் பிராமணரைக்குறித்து சொல்லும்போது,
” முற்படைப்பானில் வேறாகிய முறைமைபோல
நால்வகை ஜாதியை யிந்நாட்டினீர் நாட்டினீ ” என்றார்.
தமிழகத்தில் ஜாதி வித்தியாசங்கள் கிடையா. ஜாதிப் பெயர்களெல்லாம் தொழிலைக் காண்பித்ததே ஒழிய யாதொரு ஜாதியையும் காண்பிக்கவில்லை. கிறிஸ்துபிறந்தபின் 800 வருஷங்களான பின்னும் ஒருவரோடொருவர் விவாகம் போசன முதலியது செய்துக்கொண்டு வந்தார்கள். கி. பி. 14வது நூற்றாண்டின் மத்தியில் ” வள்ளுவபறை பதினெட்டுஜாதி” யிருந்ததாக ஏற்படுகிறது. தமிழகத்தில் ஆரியரிட நால்வகை வகுப்பாகிய பிரம க்ஷத்திரிய வைசிய சூத்திர வகுப்புகளை ஏற்படுத்த முயன்றபோது பிராமண பட் டம் தமிழ்ஜாதியாயாருக்கும் குடுக்காமல் அதை தாங்களே பற்றி கொண்டனர். மற்ற மூவகை ஜாதிகளை ஏற்படுத்தியது.
1. போசனம், 2. தொழில், 3 மதம், 4. இடம்
இவைகளை யனுசரித்து ஆரியரும் திராவிடரும் கி. பி. 250-வது வருஷம்வரையில் மாமிச பட்ச னிகளாயிருந்தார்கள். சமணமதம் வந்தபிறகு பிராமணர் அதை விட்டுவிட்டார்கள். திராவிடரில் சிலரும் அதை நீக்கினர். அதிலும் பிராமணர்களுக்கு வேண்டிய பிராணிகள் அதிக மேன்மையானவைகள். அவ்வகை பிராணிகளை கொல்லுதல் பாவம் என்றார்கள். பிராமணருக்கு வேண்டிய பஞ்சகவியத்தை தரும் பசு பரிசுத்தமானதாயிற்று. அதைக் கொல்லுதல் பெருத்தபாவமென்று பிராமணர்கள் சொன்னார்கள். பத்துபாட்டிலும் புறநானூறிலும் எயின வேடர்கள் பன்றி யிறைச்சியும் காட்டுப்பசுவையும் தின்று மதுபானம் செய்துவந்தார்களென்று சொல்லப்படுகிறது. தற்காலத்திலும் அவ்வழக்கம் நீங்கவில்லை. எபினராகிய “பறையர் என்போர் பசு மாமிசத்தை கொன்று தின்றபடியினால் பிராமணர் அவர்களை மிக தாழ்மை படுத்தினர். அவர்களை தீண்டத்தகாதவா என்றனர். பிராமணர் முன் மேலுக்கு வரவேண்டுமானால் மாட்டு மாமிசத்தை சாப்பிடும் வழக்கம் விட்டுவிடவேண்டியதா யிருந்தது. அதின்படியே இதர எயின வமிசததினராகிய கைக்கோளர், பனா, செம்மான், கம்மாளர் முதலியவர்கள் அவ்வழக்கத்தைவிட்டு மேன்மை அடைந்தார். அப்படி விடாத பறையர் தாழ்மை யடைந் தார். பிராமணர்கள் தான் இவர்களை இத்தாழ்வான நிலை மைக்கு கொண்டுவந்தவர் என்று ” தமிழ் வாசகங்கள் ” எழ திய சீனிவாச அய்யங்காரரே ஒத்துக்கொள்ளுகிறார். பரையர்களை பாப்பார் இன்னும் தங்கள் அக்கிராரங்களிலும் கிராமங்களிலும் விடுகிறதில்லை. நந்தன் சரித்திரத்தைப் படித்தால் தமிழ் பிராமணர்களது நடத்தைகள் நன்றாய் தெரியும், ஆகையினால் பிராமணர் வழக்கத்தை ஏற்றுக்கொள்ளாத படி யினால் பறையர் என்போரை பிராமணர் தாழ்த்திவிட்டார் கள் என்பது நிசசயம்.
பறவைபுறத்தார் பரையர் என்றதை கடப்பை Mr. பினேயா கோல் என்பவர் அடியில்வருமாறு சொல்லுகிறார். நான் விசாரணை செய்தவரைபில் இவர்கள் வீரபஞ்சமர் அல்ல. சதாசிவபிரமத்தின் ஐந்தாவது சிரசிலிருந்து உற்பத்தியான லிங்காயத்துகள் அல்லது வீரசைவர்களுக்கு வீரபஞ்சமர் என்று பெயர். அப்பெயர் இப்பறையர் என்போருக்கு தகாது. இவர்கள் மகாபாரதத்தில் சொல்லியிருக்கும் நாஸ்தீக பஞ்சமர்களுமல்ல. நாஸ்தீக பஞ்சமா என்போர் ஓர்காலத்தில் இந்துக்களாயிருந்து பின்னிட்டு சமண பௌத்த மதங்களை யேற்றுக்கொண்டவர்களுக்கு பெயர். அப்படி மதம் மாறினவர் ஜாதியற்றவர்களானார்கள் – அவர் களை ஜாதியற்ற சூத்திரர் என்று சொல்லவேண்டுமே ஒழிய பஞ்சமர் எனலாகாது. காண்டன்ய, தனஞ்ஜய, வசிஸ்ட , விஸ்வாமித்திர கோத்திரத்தார் சூத்திரர் யானார்களே ஒழிய பஞ்சமர் ஆகவில்லை.
இந்தபதம ஓர்காலத்தில் ஆரியரில் ஜாதிகெட்டவர்களுக்கு உபயோகிக்கப்பட்டதால் இவர்களுக்கு தகாது.” இவர்களிடம் பூர்வீக சரித்திரத்தை அடியில் வரு மாறு கூறுகின்றனர் : ‘ இவர்கள் உண்மையான சரித்திரம் கசியப்ப பிரமாவிடமிருந்து ஆரம்பிக்கிறது கசியப்ப பிரஜாபதியின் இரண் டாவது மனைவியாகிய திதி என்பவளின் குமாரர்கள். பரி சுத்த சாஸ்திரங்களில் இவாகளுக்கு “தைத்தியர் என்று பெயர். கசியப்ப முனிவரின் முதல் தாரமாகிய அதிதியின் குமாரர்களுடன் எக்காலமும் சண்டைசெய்ய முடியாமல் தென்னாடு வந்து அவ்விடமே நிலைக்கலாயினர். அவர் களிடம் அரசன் ஹிரண்யகசியப்பர் என்பவர் பிரஹலாதன் ஆமலாதன் பின்னிட்டுவந்தவர். சென்னப்பட்டணம் அடுத்த மகாபலிபுரத்தில் அரசுசெய்த மகாபலி என்பவர் பின் சக்கரவர்ததி யாயினர். பிறகு பாணராஜா ஆண்டார். பிறகு இந்த ராஜ்ஜியம் ஜெயிக்கப்பட்டது. அப்பொழுது அதற்கு தொண்டைமண்டலம் அதாவது தொண்டர், அடிமைகளின் மண்டலம், நிலம் என்கிற பெயர் வந்தது. அக்காலத் தில் அதற்கு இரண்டு ராஜதானிகளிருந்தன. ஒன்று பறவை புரம் – பறவை புறத்தி லிருந்தவர்களுக்கு பறையர் என்று பெயர். இவர்கள் தமிழர் . பறவை புறம் – நீர்பட்சிகளாகிய – பறவை என்கிற பதத்தி லிருந்துவந்தது. கீர்த்தி பெற்ற வாத்துகளுக்கு இப்பொழுதும் பேர்பெற்ற தற்கால காஞ்சி
புரத்துக்கு தான் பறவை புறம் என்று பெயர் இருந்தது. இன்னம் மைசூர் ராஜ்ஜியத்தில் கோலார் ஜில்லாவில் மாலாடு என்கிற பட்டணம் உண்டு. இவர்களில் தெலுங்கு பேசி யவர்கள் இங்கிருந்தார்கள். அவர்களுக்கு அயலாராகிய கன்னடியர் அவர்களை அவர்கள் ஊரை அனுசரித்து மாலரு என்று பெயரிட்டார்கள்.
பறை அடிப்பதால் பறையர் என்றது.
திராவிடர் சரித்திரம் நன்குணராத ஒருவர் சொல்லு கிறதாவது. திராவிடரில் ஆதியில் மூன்றுவகுப்புகள் உண்டு. அதாவது 1. குருக்கள். 2. வனிகர். 3. வேளான்கள். இவைகள் ஜாதிவகுப்பல்ல. பறையர் என்போர் மூன்றாவது வகுப் பை சேர்ந்திருக்கலாம். அக்காலத்தில் அவர்களை தொடக் கூடாது என்று ஒன்றுமில்லை. அவர்களும் ஆதியில் மற்ற தமிழர்களுடன் ஒருவரோடொருவர் விவாகம் போசனம் முதலியது செய்துவந்தனர். பூர்காலத்தில் அரசர்களுக்குள் அடிக்கடி யுத்தங்கள் நேரிடுகிறதுண்டு. அந்த காலங்களில் இவர்கள் பறையடிப்பது வழக்கம். அப்பொழுது பறை யடிக்கும் தொழில் வெகு சிரேஷ்டமாகவே யிருந்தது. யுத்த களத்தில் சேனைகளுக்கு முன் சென்று பறையடிப்பதை அரசர்களும் நன்கு மதித்தார்கள். அவர்கள் அரசர்களுக்கு அத்தியவசிய மானவர்களா யிருந்தார்கள். அம்மாதிரி யுத்தகாலங்கள் சென்றபிறகு மற்றவர்களுக்கு அவர்களைப்பற்றிய அக்கரை குறைந்தது. அதன்மேல் புத்தமதமும் சமணமதமும் விர்த்தியாயின. அதற்குமுன் எல்லாதிராவிடரும் மாட்டு மாமிச பட்சனிகளாயிருந்தவர்கள் தான். மேற்குறித்த மதங்களால் தமிழர்கள் மாமிசம் சாப்பிடுவதை விட்டுவிட்ட னர். மாடு பரிசுத்த பிராணியாய்விட்டது. பறையர் என்போர் மட்டும் விடவில்லை. பறையினால் தான் அவர்கள் சிறப்படைந்தது அதனால் தான் அவர்கள் சிறப்பு பின்னிட்டு குறைவுபட்டது. அவர்கள் பறையடிக்கும் தொழிலை விட வில்லை. யுத்தகாலங்களில் இல்லாவிட்டாலும் மற்ற விவாக மரணகாலங்களில் அவர்கள் பறையடிக்க வேண்டியதாய் நேரி ட்டது. அப்படி அவர்கள் அடிக்கும் பறைக்கு தோல் தேவையானது தோலை பிரித்து எடுப்பதற்கும் அந்த மாமிசத்தை சாப்பிடுவதற்கும் அதிக வித்தியாச மில்லாமையால் அவர்கள் மாட்டு மாமிசத்தையும் சாப்பிட்டுக்கொண்டே யிருந்துவிட்டார்கள். அதனால் தான் இவர்கள் தாழ்ந்த ஸ்திதிகள் வந்துவிட்டார்கள் என்பது ஒரு கொள்கை.
பறையர் , பௌத்தர் என்பது.
பௌத்தமதம அசோக அரசர் ஆண்டகாலத்தில் இந்தி யாவின் எல்லா பாகங்களிலும் இதரதேசங்களிலும் பரவி யது. சிலப்பதிகாரம் மணிமேகலை முதலிய காவியங்களி லும் பெரிய புராணத்திலும் இன்னும் அநேக நூல்களிலும் தென்னிந்தியாவில் பௌத்தமதம் பரவியிருந்தது என்பதாக சொல்லப்படுகிறது. பௌத்தமதத்தையும் சமணமதத்தை யும் துரத்திவிட சைவமும் வைஷ்ணவ மதமும் செய்த பிர யத்தனங்கள் தமிழ் நூல்களில் விசாலமாய் காணலாம். சென்னையில் கீர்த்திபெற்று யிருந்தவரும் தமிழ் நூல்களை நன்று ஆராய்சசி செய்திருந்தவருமான ஸ்ரீமான் அயோத்தி தாஸ் பண்டிதர் என்பவர் பறையர் என்போர் மின்சாரத்தைதை ஏற்றுக்கொண்டதினால் இவ்வித தாழ்மைநிலமைக்கு கொண்டுவரப்பட்டார்கள் என்று அநேக நூலாதரவுகளுடன் ருசுவு செய்கின்றார். இதுவிஷயம் அவர் எழுதியிருக்கும் நூல் களெல்லாவற்றையும் வாசிக்க தகுதி உடையன. அவைகளை அனுசரித்து “பறையர்” என்போர் அநேகர் பௌத்த மதத்தை இச்சென்னை ராஜதானியில் தழுவியிருக்கின்றனர். ஐயன் திசாங்கு என்கிற சீனதேசத்து பிரயாணி சுமார்- கிபி. 630 ஆண்டில் இந்தியாவிற்கு வந்தபோது தென்னிந்தியா விற்கும் வந்தார். அப்பொழுது அவர் காஞ்சிபுரத்தை போய் பார்த்தபோது அவ்விடத்தில் பத்தாயிரம் புத்தமத காம குருக்களையும் புத்தமடங்களையும் பார்த்ததாகவும் சொல்லுகிறார். முன் சொன்னபடி காஞ்சிபுரம் பறவைபுறமாகிறது. இப்பொழுதும் செங்கல்பட்டு வட ஆர்க்காடு தென் ஆர்க்காடு ஜில்லாக்களில் “ பறையர் என்போர் அதிகமாயிருக்கின்றனர். ஆகையினால் காஞ்சிபுறம் பௌத்தமதத்துக்கு அக்கா லத்தில் தென்னிந்தியாவில் சிரேஷ்டமான இடமா யிருநதி ருக்கவேண்டும். இம்மாதிரி தென்னிந்தியாவில் பௌத்த மதத்தை தழுவியவர் “ பறையர் ” என்போரின் முன்னோர் கள். இவர்களை பிராமணர் அதிகாரம் ஏற்பட்ட பிறகு அவர் கள் “ பறையர் என்று தாழ்மைபடுத்தினர். “பறையர்” என்பபோர் புத்தமதத்தை தழுவினபடியினால் பிராமணரிட வேதங்களை நம்பாதவர்களாயினர். அப்படி அவர்கள் வேதங்களை நம்பாமல் அவற்றினை ஏத்துக்கொள்ளாதவர்கள் “சண் டாளர் என்றார்கள். தற்காலத்திலும் ஒரு இந்துவான வன் கிறிஸ்துமதத்தில் சேர்ந்துகொண்டால் அவன் பிராம ணர் வேதங்களை நம்பாதவனாகிறான். அப்பர்பபட்டவனை “பறையன் என்று சொல்வது வழக்கமுண்டு பூராவத தில் இலங்காதேசமென்றும், தற்காலம் கொளம்பு – கண்டியென்றும் வழங்கும்படியான தேசத்தில் வாழும்குடி கள் யாவரும் பெருமபாலும் பௌத்தர்களென்பது சகல ருக்கும் தெரிந்த விஷயமாகும். சமஸ்கிருதத்தில் வரைந் துள்ள சுந்திரகாண்டத்தில் அநுமார் இலங்கை சேர்ந்து அவ் விடத்திலுள்ள மாளிகையிலுட்கார்ந்து அதனை புத்தர் வியா ரமென்றும் கூறியதாக விளங்குகின்றது. அவ்வகை பௌத்தநாடென்று தெரிந்தே தற்காலம் இராமநாடகம் பாடிய அருணாசலக்கவிராயர் என்பவர் தானியற்றியுள்ள சுந்தரகாண்டத்தில் இலங்கைதீவை பறையர் ஊரென்று இழிவுபடுத்தியே பாடிவைத்திருக்கின்றார்.
சுந்தரகாண்டம்.
சீதைபுலம்பல்.
“நிறை தவசுக்குக் குறையிவளென்று
நினைந்துகை விடுவாரோ
பறையா ஊரிலே சிறையிருந்த
வெனனை பரிந்துகை தொடுவாரோ.”
“பறையர்” என்போர் மனு தர்மசாஸ்திரத்தில் குறிப் பிட்டிருக்கும் ” சண்டாளருக்கு ” சமப்படுத்தினார்கள். மனு தர்மசாஸ்திரம் எழுதியகாலத்தில் தமிழகத்தில் ” பறையர் ” என்ற பெயரே கிடையாது. ஆனபடியினால் மனுதாமசாஸ்தி ரத்தில் பறையர் என்கிற வார்த்தயே கிடையாது. ஆனால் அந்த சாஸ்திரத்தில் ” சண்டாளன் என்கிற பத முண்டு. மனு சொல்லுகிறபடி சண்டாளன்” என்பவன் பிராமணஸ்திரிக்கும் சூத்திர தகப்பனுக்கும் பிறந்தவன். அப்படி இருந்தால் இச்சண்டாளர் என்போர் ஆரிய நாட்டில் தான் இருந்திருக்கவேண்டும் ஆனால மிஸ்டர் ரோமிஸ் சண்டாட்ட என்பவர் வெங்காள ராஜதானியிலிக்கும் 3 கோ டியே 60 லட்சம் ஜனங்கள் இம்மாதிரி சண்டாளர் என்பதை ஒத்துக்கொள்ளுகிறதில்லை. ஆரிய சாஸ்திரபடி மேல்ஜாதி யார் கீழ்ஜாதியாருடன் விவாகம் செய்துக்கொள்ளலாமென்று இருப்பதால் அவ்விதம் பிறந்த பிள்ளைகளை சண்டாளர் என் பது தகாது. ஆரியநாட்டில் சமண பௌத்தமதங்கனை சேர்ந்தவர்க ளுக்கு ஆரியர் நாஸ்திக பஞ்சமர் என்றார்கள். தென்னாட்டு பிராமணர்கள் அப்பேர்ப்பட்டவர்களை பறையர், சண்டாளர் என்றார்கள். மனுதர்மசாஸ்திரத்தில் சண்டாளனுக்கு அடி யில் குறித்தவாறு தெண்டனை சொல்லியிருக்கிறது:-” தங்களுக்கு தகுந்த வேலைகளை செய்துகொண்டு, இவர்கள் காட்டிலாவது, சுடுகாட்டு பக்கங்களிலாவது, குன்றுகளின் மேலாவது, பெரிய மரங்களின் அடியிலாவது குடியிருக்கவேண்டி யது. அவர்கள் கிராமங்களின் வெளிபாகங்களிலு மிருக்க வேண்டியது அவர்களுக்கு பாத்திரங்கள் கிடையாது. நாய்களும் கழுதைகளும் அவர்கள் செல்வம். சவங்களின்மேலிருக்கும் துணிகளை அவர்கள் தரிக்கவேண்டும் ; உடை பாண்டங்களில் புசிக்கவேண்டும், இரும்புநகை போடவேண் டும். அவர்கள் திரிந்து கொண்டே யிருக்கவேண்டும். ஒருவன் மதசடங்குகள் செய்யும்போதே அவர்களை பார்க்கவும் கூடாது அவர்களுடன் பேசவும் கூடாது. அவர்கள் தங்க ளுக்குள்ளாகவே விவாகம் செய்துகொள்ளவேண்டும். அவர்களுடன் லேவாதேவி யாரும் செய்யக் கூடாது. அவர்களுக்கு சாப்பாடு குடுக்கும்படசத்தில் உடைந் தபாண்டங்களில் ஆட் காரன் மூலமாய் குடுக்கவேண்டும். அவர்கள் கிராமத்தில ராத்திரியில் திரியக்கூடாது. அரசன் உத்திரவின் பேரில் பகல்காலத்தில் கிராமத்திற்குள் வரலாம். கிராமத்தில் அனாதி பிணங்களை அவர்கள் புதைக்கவேண்டியது அர சன் கொலையாளிகளென்று ஏற்படுத்தியவர்களை அவர்கள் கொன்று அவர்கள் துணிமணிகளையும் படுக்கைகளையும் எடுத் துக்கொள்ளலாம்” (மனு அதிகாரம் X. 5. 50-55.) புத்தமதமடங்கி பிராமணர்கள் அதிகாரம் பெற்ற போது மேல் குறித்த மனுதர்ம சாஸ்திரபடி திராவிடரில் புத்தமதத்தை சேர்ந்தோரை அடக்கிவிட்டார்கள். அச் சாஸ்திரப்படியே ” பறையர் ” என்போர் நாளைக்கு மிருக்கிறார்கள்.



