ஆதி திராவிடர் பூர்வ சரித்திரம்

அத்தியாயம்: 2

பறையர்” என்போர் ஆதி திராவிடர் எனல்

⁠திராவிடர் என்போரில் முதல் முதல் இகதேசத்திலிருந்த பூர்வகுடிகள் ஓர்வித கருப்புநிற ஜாதியார் என்பர். அவர்களிருந்தது சந்தேகமாகவே தோன்றுகிறது பின்னிட்டு வந்தவர்கள் நாகர். இந்நாகவமிசத்தை சேர்ந்த எயினர் வகுப் புக்கு “பறையர்” என்போர் சேர்ந்தபடியினால் இவர்களையே ஆதி திராவிடர் என்பர். அப்படி சொல்லவும் நியாய மிருக்கிறது. ஆயினும் இவர்கள் ஆதி திராவிடர் என்கிற பெயரிட்டுகொண்டால் மற்ற திராவிடர்களுக்கும் இவர்களுக்கும் ஓர் வித்தியாசம் தோன்றும். அவ்வித வித்தியாசத்தை உற்பத்தி செய்யக்கூடாது. தமிழ் நூலில் சிறப்புற்று விளங்கும் ஸ்ரீமான் டி. பொன்னம்பலம்பிள்ளை யவர்கள் “பறையர்” என்போரைப்பற்றி அடியில் குறித்தவாறு ஜஸ்டிஸ் பத்திரிகையில் வரைகின்றனர். “ஆதித்திராவிடர் என்கிற பாத்தியதையைக் கேட்கிற பஞ்சமர்கள் கூறுவது ஏறக் குறைய உண்மைதான். “பஞ்சமன்” என்கிற வார்த்தையானது தாழ்ந்த ஸ்திதியிலிருந்து நீக்க யாரோ அவ்வார்த்

தையை கொஞ்ச காலத்துக்குமுன் புதிதாக உற்பத்திசெய்திருக்கிறார்கள்.

அவர்கள் உண்மைப்பெயரான “பறையன்” என்பதற்கு “பேசப்படப்பட்டவன்” என்பது அர்த்தம். பூர்வீக இந்தியாவில் மற்றவர்கள் அவர்களைப்பற்றி பேசும் படியான பேர்பெற்ற மனிதர்களா யிருந்திருக்கவேண்டும். அந்த காரணத்தினால் தங்களை சுற்றி பரவிய நாகரீகக் கருத்துகளை தெரிந்துகொள்ளாதபடி அவர்கள் பிறரை விலக்கி யிருந்திருக்கவேண்டும். அதினால் அவர்கள் பின்னடைந்தி ருக்கவேண்டும். எல்லா சுதேசிய உற்பத்தியான ஜனங்களும் இம்மாதிரியாய் விட்டார்களென்று சரித்திரங்களாலறிகிறோம். சீனதேசத்திலும் ஜப்பானிலும் அயல் நாட்டாரோடு ஜனங்கள் சம்மந்தப்படாதிருக்க விரும்பியகாலமுமிருந்தன. இந்துதேசத்திலேயே ஐரோப்பியா வந்தபோது ஏதாவது ஒன்றை யிழக்கக்கூடியவர்கள் அவர்களை நெருங்கவில்லை. மிகவும் இழிவான ஸ்திதியிலிருந்த “பறையர்கள்” வேலைக்காராகளாக அவர்களிடமமைந்தார்கள். அப்படி யில்லாமல் கலவிக்கு சுதந்திரரா யிருந்த பிராமணரோ படிப்பு விஷயங்களை பிடித்துகொண்டு எஜமானர்களாகி விட்டார்கள்.

⁠இன்னும் சொந்தத்தில் நான் ஒன்றும் சொல்லாமல், ஜென்மம் சொத்தின் உற்பத்தியைக் கண்டுபிடிக்க அதிக கஷ்டப்பட்டவரும் நினைத்தவரும் அறிவை செலுத்தினவருமான திருவனந்தபுரம் ஐகோாட் ஜட்ஜி ராமன் தம்பி என்பவர் எழுதிய ஜென்மி குடியன் கம்மிட்டி ரிபோர்ட்டு முகவுரையிலிருந்து சிலவற்றை சொல்லுகிறேன். அவர் தன்னிட விசாரணையில் சந்தர்ப்பவசமாய் பறையர்களையும் அன்னவர் போன்றவர்களையும் குறித்து எழுதியிருக்கிறார். இந்தியாவின் வடமேற்கு மகாணங்களிலிருக்கும் பிராமணர்களைப் பற்றி பேசும்போது போலன் கணவாய் முதல் பர்சியன் வளைகுடா வரைபிலிருக்கும் பிரம் என்கிற மலைகளிலிருந்து அவர்களுக்கு பிராமணர் என்கிற பெயர் வந்தது என்கிறார். ஒருவேளை அந்த பிரம் என்பது வடகிழக்கு பெலுசிப்தானி லிருந்த பாடர், பரடர் என்பதிலிருந்து வந்திருக்கலாமென்றும் சொல்லுகிறார். ” பறையன்” என்னும் வார்த்தை இவ் வார்த்தைகளோடும், “பர” என்றால் மலை யென்கிற அர்த்தமுள்ள வார்த்தையிலிருந்து வந்த பரவன் , பாரியா பஹரியன் மாலா பா, மராஸ் மலையிலுள்ளவன் என்கிற அர்த்தழுள்ள வார்த்தைகளோடு சமமந்தப்பட்டிருக்கிறது. (பககம் 39)

⁠40 – வது பக்கத்தில் ஜட்ஜி ராமன் தம்பியானவர் அடியில்கண்ட டாக்டர் ஒப்பார்ட துரையின் கருத்தை காண் பித்திருக்கிறார். “பறையன், பஹறையன் முதலிய வார்த்தைகள் பூர்வீக திராவிடர்களின் வமிசத்தார் என்றும், “ப” முதலில் உள்ள இந்த குடிகளெல்லாம் திராவிட வமிசத்தின் பூர்வீக ஜனங்கள்… பறையன், ஒலியன், வள்ளுவன் முதலிய வைகள் பூர்வீக மகிமையின் அடையாளங்கள் இப்பொழுதும் கண்டுபிடிக்கலாம். மலையாளத்தின் “வள்ளுவநாடு” என்பதும் திருவனந்தபுரத்தின் “புலையனார் கோட்டம்” என்பதும் அவர்களிட நீங்கிப்போன பெருமையைக் காண் பிக்கிறது.”

⁠அவர்கள் அதிக பலசாலிகளான ஜனங்களால் ஜெயிக் கப்படுகிறவரையில் அதற்கு அரசர்களாகவும், வயல் உரிமைக்காரர்களாகவும் ஆதியிலிருந்த தங்கள் சுதேசமாகிய சேரநாட்டிற்கு, மலையாளத்தில் புலையர்களுக்கு குடுக்கப்பட் டிருக்கும் செருமன் – செருமி என்கிற வார்த்தைகள் சம்மந்தப்பட்டது என்று ஓர் பெரியவர் ஆதரவால் ஏற்படுகிறது. குரும்பநாட்டு குரும்பரும், வள்ளுவநாட்டு வள்ளுவரும் புலையனார் கோட்டத்தை கட்டிய புலையரும், அதே கதியை யடைந்தார்கள். நெடுவன் காடு என்கிற கோகோஷ மக்களத்தின் புலையர் இராணியால் கோகோஷமங்களம் கார்காரருக்கு அனுப்பிய கடிதமாக எண்ணப்பட்ட ஓர் ஓலை சீட்டை தான் பார்த்ததாகவும் அந்த கமிட்டி பின் பிரசிடென்டுக்கு ஒரு பென்ஷன்பெற்ற தாசீலதார் சொன்னார்.

இந்த புத்தகம் பிடித்திருந்தால்....

மதிப்பிட நட்சத்திரத்தைச் சொடுக்கவும்!!!

சராசரி மதிப்பீடு 0 / 5. வாக்கு எண்ணிக்கை: 0

இந்தப் பதிவிற்கு மதிப்பீடு அளிக்கும் முதல் நபராக இருங்கள்!!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *