
ஆதி திராவிடர் பூர்வ சரித்திரம்
அத்தியாயம்: 3
பறையர் மேன்மை
பாப்பார் பறையர் என்போரை தாழ்த்துவதற்கு முன் பறையர் என்போர் நல்லஸ்திதியில் இருந்ததாகவே ஏற் படுகிறது. தண்டகாரணிய வனத்தில் முதலில் சாகுபடி செய்யவும் அவ்விடங்களில் கோட்டைகள் கட்டவும் காடு களை வெட்டினவர்கள் எயினாகள் தான் காடுகளை வெட்டினவர்களுக்கு வெட்டியான் என்கிற பெயர் வந்தது.
சாகுபடிக்கு கிணறு தோண்டினவர்களுக்கு தோட்டி (தோண்டு = வெட்டு) என்கிற பெயர்வந்தது. கி.பி. 3, 4-வது நாற்றாண்டி லிவர்கள் அரசர்கள் ஆம்பூர் வே லூர் மூதலிய இடங்களில் ஆண்டு வந்தார்கள். எயினர் களுக்கு கொட்டகாரம் என்கிற களஞ்சியங்களும் , எயில் எனும் கோட்டைகளும் இருந்தன. அவர்களுக்கு பாணன் என வாத்தியக்காரர்களும் வள்ளுவன் என குருக்களும், தேகபயிர்ச்சிக்காரர்களாகிய பனிக்கர்களும், செம்மான் என்கிற செருப்புதைக்கிறவர்களும், அம்பட்டன் வண்ணான் முதலியவர்களு மிருந்தார்கள். இப்பறையரென் போர்வமி சத்தார் தான் பூர்வீகத்தில் கிராமங்களை ஏற்படுத்தினார். அவர்கள் ஏற்படுத்தின கிராமங்களுக்கு அவர்கள் தான் அதிகாரிகள். இப்பொழுதும் எல்லை தகாரர்களை பறையருக்கு கான் பஞ்சாய்த்து சொல்லிக்கொள்ளுகிறார்கள். 1910நடத்திய ரிபோர்ட்டில் மதுராஸ் கவர்ன்மென்ட் Epigraphist சொல் லுகிறதாவது ‘ 11-வது நூற்றாண்டின் ஒரு சிலா ராசனத்தில் முடிபாகவர் என்னும் கிராமத்தில் ஓர் கோவிலுக்கு பாத்தியப்பட்ட நிலத்தின் பாத்தியதையை வேசாலி பறை யனும் அவனிட மந்திரிகளும் பைசல் செய்ததாக சொல்லியிருக்கிறது. இக்காலத்திலும் தஞ்சாவூர் ஜில்லாவிலிருக்கும் திருவாலூரில் சிவன் பண்டிகைகளில் எவற்றிலும் சுவாமி ஊர்கோலம் வரும்போது பறையன் தான் வெள்ளைக்குடை பிடித்து முன்பாக செல்லுகின்றான். சென்னைப்பட்டணத்தில் நாளைக்கும் பெத்தநாய்க்காமபேட்டையில் பகிரங்கமாய் தெருக்களில் ஏகாத்தா மாரியக்கத்தில் யானை பின் பேரில் உட்கார்ந்து கொண்டு அந்த மமைக்கு தாலிகட்டப்பட்டவன் பறையனே… சிதம்பரத்தில் பேரிறைவன் சிவன் பக்கத்தில் யானைமேல் உட்கார்ந்து வீதிகளில் ஊர்கோலம் வரும்போது புரோகிதர் போன்று சாமரம் வீசப்பட்டவன் பறையனே. சர்வம் ஜகநாதம் என்று சொல்பவர்களுக்கு பிரசாதம் குடுப்பவன் பறையனே. பேலூர் , மேல்கோட்டை முதலிய இடங்களிலிருக்கும் கோவில்களில் பறையன் ஆக்ஷேபனை யன்றி உள்ளே போய் கடவுளை நேரில் தரிசிக்கிறான் ஸ்ரீரா மானுகருடன் கூடபோய் டில்லிபாச்சா ஆமஷாவின் குமார்த்தியிடமிருந்து ரங்கநாயகர் சிலையை கொண்டுவந்தவர் பஞ்சமர் தான். இப்பறையர் வமிசத்தில் உதித்த திருப்பா னாள்வார் கடவுளை திருத்தாண்டகம் செய்ய செய்தார், நந்தன் என்பவர் கடவுனை அலிங்கனம் செய்துகொண்டனர். விரபாகு என்பவர் அரிச்சந்திரனை அடிமை கொண்டார் – திருவள்ளுவர் என்கிறவர் மதுரைசங்கத்தின் சங்கப்பலகையின்பேரில் ஆச்சரியமான நடவடிக்கை நடத்திய குறளை எழுதினர். ஸ்ரீராமானுஜ சுவாமிகள் இக்குலத்தாரை, திருகுலத் தார் என்றார்.
தற்காலத்திலேயே இப்பறையர்களுக்கு இவ்வித சிறப்புகளிருக்குமாயின் பூர்வீகத்தில் எவ்வளவு சிறப்புற்றவர்களா யிருக்கவேண்டுமென்று சொல்லவேண்டியதில்லை. இவர் கள் ஓர்காலத்தில் தென்னிந்தியாவில் அரசவமிசத்தை சேர்ந்தவாகளா யிருநதார்கள் என்பதற்கு சந்தேகமில்லை. கர்னல் ஆல்காட்டுதுரை சொல்லுகிறபடி ” ராஜியங்களும் மதங்களும் மாறினபோது, பறையர் அரசர்கள் தங்கள் தேசத் தையும் , பறையர் கனவான்கள் தங்கள் செல்வத்தையும், பறையரில் தாழ்வானவர்கள் தங்கள் எல்லாவற்றையு மிழந்தார்கள். ரெவிளனட் கௌடி என்பவர், பறையர்களும் பூமியும் என்கிற வியாரத்தில் அடியில் வருமாறு வரைந்து ளார் ‘ அழிந்த பிரபுக்கள் பேரில் அன்பு பாராட்டப்பட்ட ஜனங்களிருக்கிறாகள் ; அன்னவருக்கு நான் சொல்லுவதா வது, இந்த தேசத்தில் அப்பேர்ப்பட்ட பிரபுக்கள் வகுப்பிற் சேர்ந்தவரில் பறையர்கள் பூர்வீகமானவாகள் என்றும் அந்த காரணத்தால் தயாளமுளளவர்களா யிருக்கவேண்டு மென்றும் சொல்லுகிறேன்.



