
ஆதி திராவிடர் பூர்வ சரித்திரம்
அத்தியாயம்: 7
முடிவு.
ஆதி திராவிட சகோதரர்களே! நீங்கள் மாட்டிறைச்சி உண்பதினாலேயே உங்களுக்கு தாழ்மை இக்காலத்தில் உண் டாகாது. இந்துக்களிலேயே மாட்டிறைச்சி சாப்பிடும் பெத்தபோயஜாதி முதலிய ஜாதிகளுக்கும் ஆங்கிலேயருக்கும் மரியாதை யிருக்கிறது. நீங்கள் கல்வியில்லாமல் ஏழ்மை தனத்திலிருப்பதால்தான் இவ்வித கஷ்டங்கள் நேரிடுகிறது. உங்கள் ஏழ்மைத்தனத்தை நீக்கவும், செல்வமுள்ளவர்க ளாகவும், சிறந்த கல்விமான்களாகவும் நீங்கள் ஆனால் உங்களுக்கு மேன்மைதானே உண்டாகிறது. நீங்கள் ஏழைகளாயிருந்தாலும் நன்னடக்கை யுள்ளவர்களே என்பதற்கு ஐயமிலலை. 500 ரூபாய் மாதம் சம்பளமுள்ள ஓர் பிராமண உத்தியோகஸ்தன் லஞ்சம் வாங்கினாலும் ஒரு ரூபாய் சம்பளமுள்ள கிராம ஆதி – திராவிட தலையாரி தன்னிடம் மணியகார் குடுத்த ஆயிரம் ரூபாய் சர்க்கார் பணத்தை ஒரு பிசகு மில்லாமல் தாலூக்கா கச்சேரியில் யோக்கியமாய் கொண்டு வந்து கட்டுகிறான் .இந்துமதத்தில் இத்தியாதி சங்கடங்களிருக்க நீங்கள் என் அம்மதத்தி லிருக்கவேண்டும் உங்கள் பூர்வீக மதமாகிய பௌத்த மதத்தில் சேருதல் நலமன்றோ . அல்லது மற்ற உயர்ந்தஜாதி என்கிற இந்துக்களில் படித்தவர் கள் ஏற்றுக்கொண்ட பிரம சமாஜத்தை நீங்கள் ஏற்றுக் கொள்ள ஆக்ஷேபணை என்ன? இவைகளை யோசித்துபாருங்கள். ஆங்கிலேயே அரசாட்சியில் எல்லாரும் சமம் அப்படி யிருக்க உங்களிட சம்பாத்தியத்தை அனுபவிக்க ஒட்டாமல் யாராவது செய்தால் அதை விட்டுவிடக் கூடாது. உங்கள் பாத் தியதைகளை நிலைநாட்டுங்கள். ஓமரூல் காரருடன் சேராதீர்கள், ஆங்கிலேயர் உங்கள் கையினால் செய்யப்பட்ட சாப்பாட்டை சாப்பிட்டு அவர்கள் உங்களை சகோதரர்களாக நினைக்கிறார்கள் அவர்கள் வந்தபிறகுதான் உங்களுக்கு மேன்மை உண்டாகிவருகிறது. நீங்கள் மேல் நிலமைக்கு வருகிறதை அவர்கள் காலத்தில் அதை கெடுக்க யாராலும் முடியாது. ஓமரூல் வந்துவிட்டால் உங்கள் கதியும் மற்ற திராவிடர் கதியும் அதோகதிதான்.
புத்தமார்க்கம் சென்ற பிறகு பிராமணர்கள் மறுபடியும் ஜாதி வித்தியாசங்களை அதிக கடூரமாய் ஏற்படுத்தி திராவிடர்களை இம்சிக்கலாயி னார். அதிலும் ஆதி திராவிடர்களாகிய உங்களை வெகு ஈனஸ்திதியில் கொண்டு வந்து வைத்தார். அந்தஸ்திதியில் ஆங்கிலேயர் இத்தேசம் வருகிறவரையில் நீங்கள் இருகாதீர்கள். இப்பொழுது அவர்களை எதிர்த்து மேலே வருகிறீர்கள். நீங்கள் மாததிரமல்ல மற்ற திராவிடர்களும் அவர்கள் பிடிப்பிலிருந்து வெளிப்பட்டு வருகிறாகள். அப்படி தங்கள் பாதத்தடியிலிருந்து திராவிடர் தப்பி ஓடாதபடி, அவர்களை விர்ததிக்கு கொண்டுவந்தவர்களும் எல்லாரையும் சமமாக நடத்தும் ஆங்கிலேயரைத் துரத்திவிட்டு தாங்கள் மறுபடியும் திராவிடராகிய நம்மை காலடியில் நசுக்கவேண்டு மென்று பிராமணர் சுய ஆட்சி கேட்கிறார்கள். அதற்கு நீங்கள் கொஞ்சமேனும் இடந்தரலாகாது. உங்களால் ஆன வரையில் சுய ஆட்சி தற்காலம் கூடாதென்று எதிர்த்து நிற்கவேண்டும். சுயஆட்சி வேண்டுமென்கிற வாயிலேயே வர்னாசிரம தர்மத்தை நிலைநாட்ட வேண்டுமென்கிறார்கள் இப்பிராமணர்கள். ஓர் பிராமண பைஸ்வா அரசாட்சியில் பறையர் எனபோர் வெளியில் வந்தால் அவர்கள் தங்கள் கழுத்தில் சட்டியை மாட்டி கொண்டும் இடுப்பில் துடப் பத்தை கட்டிக்கொண்டும் வரவேண்டியதா யிருந்தது. ஆகையால் பிராமண அரசாட்சி வேண்டாம். நன்றாய் யோசித்து பாருங்கள்.
★ ★ ★



