மணிவாசகப்பெருமான் வரலாறு கா. சுப்பிரமணிய பிள்ளை

மணிவாசகர் புகழ்மாலை

மச்சபுராணம்

கறைமிடற்றெம் பரற்போற்றி நரிபரியா
வரவழைத்துக் கயற்கண் மூங்கை
யிறைவளையைப் பேசுவித்துப் புத்தரைவென்
றம்பலத்தினினிதி னாடும் பிறைமுடித்த
பிரானெழுதக் கோவை திரு
வாசகப்பேர் பிறங்கு பாடன்
மறைவகுத்த வாதவூர் மாணிக்க
வாசகர்தாள் மனத்துள் வைப்பாம்.

செவ்வந்திப்புராணம்

தேனூறும் வாசகங்க ளறு நூறுந் திருக்கோவை
நானூறு மமுதூற மொழிந்தருளு நாயகனை
வானூறுங் கங்கைநிகர் மாணிக்க வாசகனை
யானூறு படாதவகை யிரு போது மிறைஞ்சிடுவேன்.

திருவெண்காட்டுப்புராணம்

சிற்றம் பலக்கோவைத் தேன் சொரியுஞ் செம்முகிலை
மற்றொப் பிலாத்திரு வாசகத்தின் வாரிதியைக்
கற்றைச் சடையான் கருத்துருக்குங் காதலனைக்
கொற்றைத் திருவாத வூரனைக்கை கூப்புதுமே.

காஞ்சிப்புராணம்

பெருந்துறையிற் சிவபெருமா னருளுதலும்
பெருங்கருணைப் பெற்றி நோக்கிக் கரைந்து
கரைந் திருக்கண்ணீர் மழைவாரக்
துரியநிலை கடந்து போந்து
திருந்து பெருஞ் சிவபோகக் கொழுந்தேறல்
வாய்மடுத்துத் தேக்கிச் செம்மாந்
திருந்தருளும் பெருங்கீர்த்தி வாதவூ
ரடிகளடி யிணைகள் போற்றி.

பேரூர்ப்புராணம்

உள்ள மாகிய புலத்தினைப் பத்தியா லுழுது
தெள்ளு ஞானவித் துறுத்துநற் சிரத்தைநீர் பாய்த்திக்
கள்ள வான்பொறிகளைகள் கட்டானந்தம் விளைத்துக்
கொள்ளை கூறுமா ணிக்கவா சகன்கழல் குறிப்பாம்.

திருவோத்தூர்ப்புராணம்

நிலனேறும் புகழ்வைகை நீரேற நீரோடு
மலரேறுஞ் சடைமுடியின் மண்ணேற மணிமேனி
யலரேறு மாறேற வாண்டருளும் பெருமானைக்
கலனேறும் பரியேறக் கண்டவர் தாள் பாவுவாம்.

திருச்சுழியற்புராணம்

குதிரைகொளத் தரும் பொருளைக் குருந்தடியி
லேகிடத்தி மதுரையிற்பாண் டியனார் முன் னரிவாசி கொண்டானை
யெதிரினெய்திப் பெருந்துறையிற் றனைப்புரந்த
வெழிற்கோலங் கதிர்மணியார் கழுக்குன்றிற்
கண்டானைத் தினம்பணிவாம்.

திருவருட்பா

வான்கலந்த மாணிக்க வாசகரின் வாசகத்தை நான் கலந்து
பாடுங்கால் நற்கருப்பஞ் சாற்றினிலே தேன்கலந்து
பால்கலந்து செழுங்கனித்தீஞ் சுவைகலந்தென்
ஊன்கலந்து வயிர் கலந்து வுவட்டாம லினிப்பதுவே.

திருச்சிற்றம்பலம்

இந்த புத்தகம் பிடித்திருந்தால்....

மதிப்பிட நட்சத்திரத்தைச் சொடுக்கவும்!!!

சராசரி மதிப்பீடு 0 / 5. வாக்கு எண்ணிக்கை: 0

இந்தப் பதிவிற்கு மதிப்பீடு அளிக்கும் முதல் நபராக இருங்கள்!!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *