மணிவாசகப்பெருமான் வரலாறு கா. சுப்பிரமணிய பிள்ளை

3. தில்லைக்கு ஏகுதல்

திருவாதவூரடிகள் திருப்பெருந் துறைக்குச் சென்ற பின் தமது அருட்குரவனை நினைந்துருகி அவன் தம்மைத் தன்பால் அழைத்துக்கொள்ளுமாறு மிகவும் பரிவுடன் வேண்டித் திருச்சதகம் பாடினர். அக்காலத்தில் அடி களுக்குத் துணையாகப் பல பேரன்பர்கள் உடனிருந்தனர். ஒருநாள் அடிகளுக்கும் அடியார்களுக்கும் இறைவன் தோன்றி அங்கிருந்த பொய்கையிற் றோன்றுந் தழற் பிழம்பில் அடியார்கள் ஒவ்வொருவராய்ப் புகுந்து தம்மை யடையவேண்டு மென்றும், அடிகள் மாத்திரம் உத்தர கோசமங்கை, திருக்கழுக்குன்றம் முதலிய திருப்பதிகளுக்குச் சென்று இறைவனை வழிபட்டுத் தில்லைக்கு வரவேண்டு மென்றுங் கட்டளையிட்டு மறைந்தருளினர். அவ்வாறே ஒருநாள் திருப்பெருந்துறையின் கண் ணுள்ள ‘ மொய்யார் தடம் பொய்கை’யிற் பேரொளிப் பிழம்பு தோன்றிற்று.. அதன் கண் அடியாரெல்லாரும் வீழ்ந்து மறைந்தனர். அடிகள் இறைவர் கட்டளைக்கஞ்சி அதன் கட் புகுந்திலர். திருக்குருந்தமர நீழலையடைந்திருந்து தமது பரமாசாரியரது திருவடியையே நினைந்துருகு நாளிற் சிவபுராணம் பாடினர். அதிசயப்பத்தும் திருப்பெருந்துறையின் கண் பாடப்பெற்றது. அதனுள், ‘ அடியரிற் கூட்டிய அதி சயங் கண்டாமே’ என்றதனாலும், அற்புதப்பத்துள், ‘ஆசைதீர்த்து அடியார் அடிக்கூட்டிய வற்பு தமறி யேனே’ என்றமையாலும் அவையிரண்டும் அடியார் அவரினின்றும் பிரிவதற்கு முன்னே பாடப்பெற்றன வென்று கருத இடமுண்டு. ஆசைப்பத்தும் பெருந் துறையிலேயே அருளிச் செய்யப்பட்டது. அதனுள் சிவபுரநகர்புக்கு  உன்பழவடியார் கூட்டம் அடியேன் காண ஆசைப்பட்டேன்’ என்றமையால், அடியார் அடி களைப் பிரிந்தபின்னர் அது பாடப்பட்டிருக்கலாம். அடைக்கலப்பத்தும், வாழாப்பத்தும் முன்னமே செய்யப் பட்டன போலும். செத்திலாப்பத்தும், புணர்ச்சிப்பத்தும் அடியாரைப் பிரிந்தபின் இறைவனை அடைய வேண்டு மென்னும் பெரு விருப்பினாலே திருவாய்மலர்ந்தருளப் பட்டன, திருவார்த்தை என்னும் திருப்பதிகத்துள் ஐயன் பரிமா ஏறிவந்த அருஞ்செயல் குறிக்கப்பட் டிருப்பதால் அவ்வருஞ் செயற்குப்பின் அது திருப்பெருந் துறையில் பாடப்பட்டதாகும். திருவெண்பா என்னுந் தலைப்பின்கீ ழுள்ள பதினொரு பாட்டும், திருப்பள்ளி யெழுச்சியும், ஆனந்தமாலையும், உயிருண்ணிப்பத்தும், பிரார்த்தனைப்பத்தும், திருப்பாண்டிப் பதிகமும் ஆண்டே இயற்றப்பட்டன என்ப. பாண்டிப்பதிகத்துள்ளும், பிரார்த்தனைப்பத்துள்ளுந் திருப்பெருந்துறை தெளிவாகக் குறிக்கப்படவில்லை. ‘மொய்யார் தடம் பொய்கை’ என் பது திருப்பெருந்துறையிலிருப்பதால் திருவெம்பாவை திருப்பெருந்துறையிற் பாடப்பட்டதென்பாரும் உளர்.

திருப்பெருந்துறையிற் சிலநாள் தங்கிய பின்னர் அடிகள் திருவுத்தரகோசமங்கைக்கு எழுந்தருளி இறை வனைக் காணும் பெருவிருப்பால் ‘ நீத்தல் விண்ணப்பம்’ பாடியருளினர். அங்கே திருப்பெருந்துறையில் அவருக் குக்காட்டிய பேரொளி வடிவினைத் தோற்றுவித்தருளினர். அது,

‘தெங்குலவு சோலைத் திருவுத்தரகோச மங்கை
தங்குலவு சோதித் தனியுருவம் வந்தருளி’

என்றமையாற் றெளியப்படும். திருப்பொன்னூசலும் அன்னைப்பத்தும் திருத்தசாங்கமும் இத்திருப்பதியிலேயே பாடப்பெற்றன. திருத்தசாங்கத்தைத் திருப்பெருந் துறையிற் பாடினரென்று கொள்ளவும் இடமுண்டு. அதன் ஒவ்வொரு பாட்டிலுந் திருப்பெருந்துறை குறிக் கப்படுதலின், பின்னர் அடிகள் திருவாரூருக்குச் சென்ற னர். அங்கே திருப்புலம்பலின் முதற்பாட்டுப் பாடப்பட்ட தாகத் தெரிகிறது. அதன் கண்ணுள்ள மற்றை இரண்டு பாட்டும் முறையே திருப்பெருந்துறையையுந் திருக்குற்றாலத்தையுங் குறிக்கின்றன. திருத்தெள்ளேணத்தில் முதற் பத்துப்பாட்டுத் திருவாரூரைப்பற்றியதாகவும் பிந்திய

குருவருள் பெற்றது பத்துப்பாட்டுத் தில்லையி லருளிச் செய்யப்பட்டதாகவுங் கருத இடமுண்டு.

திருவாரூரினின்றும் அடிகள் திருவிடைமருதூர்க்குச் சென்று இறைவனை வணங்கித் திருஏசறவு பாடியருளினர். சீர்காழிக்கு அடிகள் சென்று பிடித்தபத்து அருளிச்செய்ததாகக் கடவுண்மாமுனிவர் கூறுகின்றார். பிடித்தபத்தினுள் ஒரு திருப்பதியுங் கூறப்படவில்லை. ஆனால் “கழுமலமதனிற் காட்சி கொடுத்தும்.” என்றமை யால் அடிகள் சீர்காழி சென்றமை கருதற்பால்தே. பின்னர் அடிகள் திருவண்ணாமலையைச் சேருவதற்கு முன், திருமுதுகுன்றம், திருவெண்ணெய் நல்லூர் முதலிய இடங்களுக்குச் சென்றதாகத் திருவாதவூரடிகள் புராணங் கூறுகின்றது. அடிகள் திருவண்ணாமலையில் மார்கழித் திங்களில் திருவெம்பாவை அருளிச்செய்ததாகத் தெரி கின்றது. திருவம்மானையும் ஆண்டே அவர் திருவாய் மலர்ந்தருளினர். அவணின்றும் போந்து திருக்காஞ்சி நகரெய்தி இறைவனை வணங்கித் திருவுந்தியார் பாடிய தாகத் தெரிகின்றது. திருக்காஞ்சியினின்றும் மீளும் வழியில் திருக்கழுக்குன்றினை யடைந்து இறைவன் தமது குருவடிவங் கண்டு தொழுது பெருமகிழ்வுற்றுத் தில்லைக் குப்புறப்பட்டார்.

திருவாதவூரடிகள் தில்லைக்குச் செல்லும் வழியிலே பொன்னொளி திகழுங் கொன்றை மலர்கள் இருபக்கத்தி லும் மலர்ந்திருந்தன. ஆதலால் அவர் சென்ற பொழில் விண்ணுலகம் போன்றிருந்தது. சிவநாமங்கலந்த தமிழ் போல வண்டுகள் இசைபாடச், செங்காந்தண் மலர்கள் அபிநயங்காட்டும் நாடக மகளிரது கைகள் போன் றிலங் கின. சிவஞானமில்லார் தவவேடத்தை மேற்கொண்

டாற்போல முருக்கமரங்கள் மணமற்ற செவ்வொளி மலர் களைத் தாங்கிநின்றன. காயா மலர்கள் கீழ்மக்களது மனம்போலக் கறுத்திருந்தன. புன்னை மரங்களிலே தேன் கூடும் மலர்களும் பொருந்தியிருந்தமை வானில் மதியும் உடுக்களும் கூடி விளங்கினாற்போன்றன. வழியில் இரு மருங்குமுள்ள கமூக மரங்கள் பூம்பாளை களாகிய சாமரங்களை வீசி அடிகட்கு வழி நடை வருத்தந்தீர்த்தன. மாமரங்களில் வதியுங் குயில்கள் தம் அலகுகளாகிய சின்னங்களை ஊதின. அடிகளது திருவடிகளிலே விண் ணவர் பொன்மலர் சொரிந்தாற்போலச் செண்பகமரங்கள் தம் பொன்மலர்களைச் சிதறின. மாமரம், நாரத்தை, பாதிரி, தெங்கு, கோங்கு, பலா, மகிழ், மந்தாரம் முதலிய மரங்கள் நெருங்கிய சோலைகளைக் கடந்து தில்லை யெல்லை யைத் திருவாதவூர், முனிவர் அடைந்தார். தில்லைமா நகரின் வானளாவிய மதில்களையுஞ் சிற்பத்தொழில் நயம் விளக்குந் திருக்கோபுர வரிசைகளையும் பொற்குடங்களமைத்த மாடங்கள் பலவற்றையுங் கண்டு மகிழ்ந்தனர். மந்திர ஒலியும், இன்னிசை ஒலியும், முழவின் ஒலியும், சிவாகம ஒலியுஞ் செந்தமிழ்த் திருப்பாடலொலியும் கட லொலிபோலத் தில்லையின் கண் முழங்கின. திருவாதவூரடி கள் விதிகளைக் கடந்து திருக்கோபுரத்தை வணங்கித் திருக் கோயிலுக்குட் புகுந்து பொன்னம்பலத்தை யடைந்து கூத்தப்பெருமானைக் கும்பிட்டு அளவற்ற பேரன் போடு கண்டபத்து அருளிச்செய்தார். அதனுள் ஒருபாட்டு வருமாறு :

‘இந்திரிய வயமயங்கி பிறப்பதற்கே காரணமாய்
அந்தாமே திரிந்துபோ யருநரகில் வீழ்வேற்குச்
சிந்தைதனைத் தெளிவித்துச் சிவமாக்கி யெனையாண்ட
அந்தமிலா ஆனந்தம் அணி கொள் தில்லை கண்டேனே.’

இத்திருவாசகம் பாடி இறைவனோடு இரண்டறக் கலந்து நிற்கும் உயர்பெரு நிலையுற்று நெடிதுநேரம் அசைவற்றிருந்து பின் நினைவுற்றுப் புறம்போந்து ஒரிடத் திற் றங்கித் திருப்பதிகங்கள் பல இசைத்தனர். குலாப் பத்து, கோயிற்றிருப்பதிகம், கோயின் மூத்ததிருப்பதிகம் முதலியனவும், கீர்த்தித்திருவகவல், திருவண்டப்பகுதி, போற்றித்திருவகவல் என்பனவுந் தில்லையிற் பாடப்பட்டன. திருப்பொற்சுண்ணம், திருக்கோத்தும்பி, திருத்தோணோக்கம். திருப்பூவல்லி, திருத்தெள்ளேணத்தின் பிற்பகுதி என்பனவுந் தில்லையிலே மகளிர்க்குரிய பல்வகை விளையாட்டுக் களிற் பாடத்தக்க விதமாய் அருளிசசெய்யப்பட்டன. குயிற்பத்து என்பது உத்தரகோசமங்கையில் அல்லது. திருப்பெருந்துறையிற் செய்யப்பட்டிருப்பதாகத் தோன்று கிறது. அதன் கட் டில்லையைப்பற்றி யாதுங் கூறப்படவில்லை. அச்சப்பத்து தில்லையில் அருளிச் செய்யப்பட்டதே. சிவபெருமானைக் கடவுளென்று வணங்காதாரைத் தாம் எவற்றினும் மிக அஞ்சுவதாக அடிகள் இவற்றினுட் குறித்தனர். இவர் தில்லையி லருளிச்செய்த திருவாசகச் செழும்பாடல்களை ஆண்டுள்ள அடியாரெல்லாருங் கற்றுப் பெருவியப்பும் பெருமகிழ்வு மெய்தினர்.

திருவாதவூரடிகள் திருவாலவாயினின்றும் மீண்டு திருப்பெருந்துறைக்குச் சென்று குருந்த மரநிழலில் வைகியகாலை, அவரோடிருந்த அடியார்கள் அருட்குரவரோடு வந்து அவர் மறைந்தபோது அடிகட்குச் சிறிது காலம் துணையாக வைகும்படி விடுக்கப்பட்டவர்களோ வேறு பிறரோ என்று துணியக்கூடவில்லை. திருவாத வூரடிகள் மதுரையி னின்று மீளும்வரை இறைவன் குருந்தமர நிழலில் தங்கவில்லை என்பது திண்ணம்.

காணுமாறு காணேன் உன்னை அந்நாட்கண்டேனும்

என்றமையால் அது தெளியப்படும். ‘ அன்பரு நீயுமங்கு எழுந்தருளி இங்கு எனை யிருத்தினாய் ‘ என்ற திருச்சதகப் பகுதி தம்முடனிருந்த அடியார்களும் மறைந்த பின்னர் அடிகளாற் பாடப்பெற்றிருக்கலாம். ‘ அடியா ரானாரெல் லாரும் வந்துன்றாள் சேர்ந்தார்’ என்பதும் அதனை வற் புறுத்தும். அடியார்களைத் திருவாதவூரடிகளோடு இருத்தியதற்குக் காரணம் அன்பர் துணையின்றி அடிகள் துயர் கூர்வர் என்பதுபற்றியே என்க. அது,

“சித்தமயர்ந்தே துயர்கூருஞ் செய்தியனாமென்
பதுதேரா வித்தலமீதே சின்னாளிங் கெம்முடன் வாரா திருமென்றோம்.’

என்றமையாற் காண்க.

நிலவுலகத்தில் தங்கிய அடியாரைத் தழற்பிழம்பின் மூழ்கச் செய்தற்குக் காரணம், நிலவுலகிற் சின்னாள் தங்கி னும் மலவாதனை ஏற்படுமாதலின், அதனைத் தீர்த்தற் பொருட்டு ஞான அனலின்கண் அவர்களைத் தூய்மை செய்வதேயா மென்க.

‘மலமகல் பவரும் புவிமீதே மானுட வடிவந் தனையெய்திச்
சிலபக லெனினும் பயில்காலைச் சேர் தரு மலவா
தனையென்றே பலமலர் சமழுந் தடமீதிற் பரவரி ஞானத் தழல்சேர்வித்
‘திலதென நீடுஞ் சடம்வேவித் திவ்வுட லீந்தோ மிந்தாளில்’

என்றது காண்க.

அடிகளோடு திருப்பெருந்துறையில் வைகிய அடியார்கள் இறைவனோடு வராத பிற அடியார்களாயின், அவர்கள் அப்போது பரமுத்தியோ, அபரமுத்தியோ எய்துதற்குரியராயிருந்த காரணம்பற்றி அன்னோரை அங்ஙனஞ் சோதியுட்பு சவித்து ஆட்கொண்டனர் என்க. அடிகள் நிலவுலகத்திற் சின்னாளிருந்து தில்லையிற் புத்தரை வாதில் வென்று கூத்தப்பெருமானது திருவடிக்கீழ் இரண்டறக் கலக்கும் பான்மை பெற்றிருந்தமையால், அடியாரோடு அவர் அழைத்துக்கொள்ளப்படவில்லை. ஞாலத்திலிருப்பது நுகரவேண்டிய ஊழ்வினைப்பொருட் டே யாதலின், அடிகள் ‘ முந்தை வினைமுழுது மோய வுரைப்பனியா’ னென்றருளினர். சிவபுராணமென்ற சொல் உயிர் பந்த நீங்கி விடெய்தும் இயற்கை வரலாற்றி னைக் குறிப்பதேயொழிய, முன் நடந்த கதை எதனையுங் குறிப்பதில்லை. அதிசயப்பத்து அற்புதப்பத்து, ஆசைப் பத்து , அடைக்கலப்பத்து, வாழாப்பத்து, புணர்ச்சிப்பத்து என்பன அவற்றிற்போந்த பாடல்களின் முடிவுச் சொந் களால் அப்பெயர் பெற்றன. செத்திலாப்பத்து என் பதில் முடிவுச் சொல் முதல் மூன்று பாட்டிலேதான் வந்துள்ளன. திருவார்த்தை என்பது ‘ எம்பிரானாவாரே” என்று முடியும் பத்துப்பாடல்களை யுடைமையால், அச் சொல்லே திருவார்த்தையாகக் கருதப்பட்டது போலும்,

திருவெண்பா எண்பதின் கண்ணுந் தசாங்க மென்பதின் கண்ணுந் திருப்பாடல்கள், வெண்பா யாப்பா லியற்றப் பட்டுள்ளன ; தசாங்கத்திற்கு அப்பெயருண்மையால் திருவெண்பா என்னும் பதிகம் யாப்பினாற் பெயர்பெற்ற தென்க. திருப்பள்ளியெழுச்சிப் பெயர்க்காரணம் தெளிவு. ஆனந்தமாலை என்பது சிவானந்த விருப்பத்தை உணர்த்தும் பதிகமாயிருத்தலால் அப்பொருள் பற்றி வந்த பெயராகும். அச்சொற்றொடரில், மாலை என்பது விருப்பத்தை யுணர்த்துவது என்று பொருள்படும். உயி ருண்ணிப்பத்து என்பதும் தற்போதத்தை இறைவன் ஒழித்தமையையே கூறுவதால், அதுவும் பொருள் பற்றி வந்த பெயரேயாகும். பிரார்த்தனைப்பத்துள் ஒவ்வொரு செய்யுளும் அருளாய் என்னும் முடிவுச் சொல்லுடைமை யால் அஃது அப்பெயர் பெற்றது போலும் ! திருப்பாண்டிப்பதிகத்துட் பாண்டிய மன்னன் ஒவ்வொரு செய்யுளிலுங் குறித்தோதப்படுவதால் அது சொல்லும் பொரு ளும்பற்றி வந்த பெயராகும். திருவெம்பாவை என்பது முடிவுச்சொல்லாற் பெயர் பெற்றதென்பது தெளிவு, நீத்தல் விண்ணப்பத்திலுள்ள ஒவ்வொரு பாட்டிலும் ‘விடுதிகண்டாய்’ என்ற சொற்றொடர் வருவதால், அஃது அப்பெயர்பெற்றதென்க. அதன் முதலிருபது பாட்டிலே மட்டும் உத்தரகோசமங்கை கூறப்படுகிறது. ஏனையவற்றுள் அது கூறப்படாமைக்குக் காரணம் விளங்கவில்லை. திருப்பொன்னூசலின் ஒவ்வொரு பாட்டி லும் உத்தரகோசமங்கை என்ற சொற்றொடர் வந்திருப்ப வும், அதனுட் டில்லையைப்பற்றிய குறிப்பு யாதுமில்லா திருப்பவும் அது தில்லையி லருளிச்செய்யப்பட்டதென்று கூறுதல் தவறாகுமன்றோர் அன்னைப்பத்தினுள்ளும் ‘பெருந்துறை அத்தர் உத்தரமங்கையர்’ என்ற சொற் றொடர்களே வந்துள்ளன. திருத் தசாங்கத்துள்ளும் அவ் வாறே காண்க. திருப்புலம்பலென்பது பல தலங்களைப் பற்றிப் பாடிய திருப்பாடல்களுள் மூன்றே கொண்டு திகழ்கின்றது. திருத்தெள்ளேணத்தில் இரண்டாம் பாட் டில் திருவாரூரைப்பற்றியும், பதினாறு இருபது என்னும்

எண்ணுள்ள பாட்டுக்களில் தில்லையைப்பற்றியுங் காணப் படினும் ஒவ்வொரு திருப்பதிக்கும் பப்பத்துப்பாட்டும் முறையின் வைத்து அதன் முற்பகுதி திருவாரூரிலும் பிற்பகுதி தில்லையிலும் — பாடப்பட்டதாகக் கருதலாம். திருவேசறவு என்பதனுள்

இடைமருதே அருளெனக்கிங் கிடங்கொண்ட வம்மானே

என்றமையால், அது திருவிடைமருதூரிற் பாடப்பட்ட தாகக் கருத இடமுண்டு. அதனுள் ‘தென்பாலைத் திருப் பெருந்துறை’ என்றதாலும், இங்கு இடைமருதே’ என்றதாலும் அது பாடப்பெற்ற இடம் திருப்பெருந் துறையன்று என்பது தெளிவு. பிடித்த பத்தினுள் ஒரு திருப்பதியுங் குறிக்கப்படவில்லையெனினுந் தில்லையிற் சென்று கூத்தப்பெருமான் குரைகழல் வணங்கி இரண்டறக்கலந்த உணர்ச்சி திட்பமடையப்பெற்ற பின், இஃது அருளிச்செய்யப்பட் டிருக்கலாம். திருவண்ணாமலையில் அடிகள் மார்கழித்திங்களிலே திருவெம்பாவை பாடின ராதலின் ஆவணித்திங்களில் மதுரையில் இருந்து அதற்கு மூன்று அல்லது நான்கு மாதங்கள் கழித்துத் திரு வண்ணாமலைக்கு அவர் வந்தனரென்று கருதலாம். நரிபரி யாக்கிய திருவிளையாடல் நிகழ்ந்த ஆண்டிலேயோ பிறி தொரு ஆண்டிலேயோ  அடிகள் திருவெம்பாவை பாடியிருத்தல் வேண்டும். இரண்டும் ஒரே ஆண்டிலேயே பாடப்பெற்றிருக்கலாம். திருவெம்பாவையை ஒன்பான் சத்திகளின் திருவிளை யாடலென்று கருதுவாருமுளர். திரு அம்மானையிற் திருப்பெருந்துறையைப் பற்றிய குறிப்பு பல திருப்பாடல்களில் வந்துள்ளன. அண்ணாமலை யானைப் பாடுதுங்கா ணம்மானாய்’ என்ற ஒரு அடியின் மாத்திரமே. அண்ணாமலை குறிக்கப்பட்டது. ‘ஐயாறமர்ந் தானைப் பாடுதுங்கா ணம்மானை ” என்றதுங் காண்க. ஒரு திருப்பதியிற் பாடிய திருப்பதிகத்துள் பிற திருப்பதி களை விதந்தோதுதலு மியல்பே. திருவம்மானை தி பெருந்துறையிற் பாடப்பட்டிருத்தலுங் கூடும்.

திருவுந்தியார் காஞ்சியிற் பாடப்பட்டதென்று கருதுதற்குக் காரணம் அதன் இரண்டாவது திருப்பாட் டில் ‘ஈரம்பு கண்டிலம் ஏகம்பர் தங்கையில்’ என்றமை யேயாமென்க. திருக்கழுக்குன்றில் பெருந்துறைப் பெரு மானைக் குறித்துப் பாடி இறைவன் தமது திருக்கோலத் தையுந் திருவடிகளையுங் காட்டின தாகப் புகன்றமையால், ஆண்டு அடிகள் இறைவனது திருவடிவங் கண்டாரென்று கருத இடமுண்டு.

‘கணக்கிலாத் திருக்கோல நீவந்து
காட்டினாய்கழுக் குன்றிலே’

‘இலங்குகின்ற நின் சேவடிகளிரண்டும்
காட்டினாய்கழுக் குன்றிலே’

என்றும் வருவன காண்க.

திருக்கழுக்குன்றத்தினின்று தில்லைக்குப்போகும் வழியில் முல்லை நிலமும் இருப்பதால் அவ்விரண்டிற்கு முரிய கருப்பொருள்களைக் கடவுண்மாமுனிவர் எடுத்து விதந்தனர். கொன்றை காயா முதலியன முல்லை நிலத் திற்குரியன. மா, தெங்கு முதலிய மருதநிலத்திற்குரி யன. பிறவு மன்ன, தில்லையுள் தலைவன் தலைவியர் மாட்டு நிகழ்வதொப்ப அம்பலவாணருக்கும் அடிகட்கும் உழுவலன் பின் பெருங்காட்சி நிகழ்ந்தமையால், இயற்கைப் புணர்ச்சி போன்ற இரண்டற்ற கலப்பு நேர்பட்டது. திருக்கூத்துக் காட்சியைச் சிறப்பித்துக் கண்டபதது பாடப்பட்டது. தில்லையிலேயே மிகுந்த திருப்பதிகங்கள் அருளிச்செய்யப்பட்டனவென்று தெரிவதால் அங்கே ஓராண்டளவாதல் அடிகள் இருந்திருத்தல் கூடும்.

இந்த புத்தகம் பிடித்திருந்தால்....

மதிப்பிட நட்சத்திரத்தைச் சொடுக்கவும்!!!

சராசரி மதிப்பீடு 0 / 5. வாக்கு எண்ணிக்கை: 0

இந்தப் பதிவிற்கு மதிப்பீடு அளிக்கும் முதல் நபராக இருங்கள்!!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *