நாலு பழங்கள் – கி.வா.ஜகந்நாதன்

குழந்தைகளுக்குக் கதை சொல்லுவதென்பது எல்லா நாடுகளிலும் உள்ள வழக்கம். வயசான மூதாட்டிகளும், கிழவர்களும் தம் பேரன் பேத்திகளுக்குக் கதை சொல்லி உற்சாகப்படுத்தி வருவார்கள். அதனால் அந்த முதியவர்களுக்கும் மகிழ்ச்சி; குழந்தைகளுக்கும் கொண்டாட்டம். குழந்தைகளின் கதைகளில் அதிசயங்களும், அற்புதங்களும் இருந்தால் அவற்றை அவர்கள் நன்றாக ரசிப்பார்கள். “அப்படிச் செய்ய முடியுமா? அது இயற்கைக்கு விரோதம் அல்லவா?” என்று கேட்கமாட்டார்கள். உலகில் உள்ள மொழிகளில் குழந்தைகளுக்காகவே வழங்கும் மோகினிக் கதைகளும், உவமைக் கதைகளும் உள்ளன. தமிழிலும் பல காலமாக வழங்கி வரும் நாடோடிக் கதைகளில் குழந்தைகளுக்கு உரியவையும் உண்டு.

இந்தச் சிறிய புத்தகத்தில் நானாகக் கற்பனை செய்து அமைத்த கதைகளும் பழைய நாடோடிக் கதைகளைத் தழுவிய கதைகளும் உள்ளன. நாமும் குழந்தையாக இருந்திருப்பதனால் குழந்தைகளின் உள்ளத்தை நம்மால் அறிய முடிகிறது.

இந்த வகையில் வேறு சில கதைப் புத்தகங்களையும் வெளியிடலாம் என்று எண்ணியிருக்கின்றேன்.

கி.வா.ஜகந்நாதன்

இந்த புத்தகம் பிடித்திருந்தால்....

மதிப்பிட நட்சத்திரத்தைச் சொடுக்கவும்!!!

சராசரி மதிப்பீடு 0 / 5. வாக்கு எண்ணிக்கை: 0

இந்தப் பதிவிற்கு மதிப்பீடு அளிக்கும் முதல் நபராக இருங்கள்!!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *