வள்ளலார் வகுத்த வழிகள்
பாலூர் கண்ணப்ப முதலியார்

குறிப்புரை

1. திருவருளை எவ்வாறு பெறக்கூடும்?

திருவருள் = கடவுள் திருவருள். ஆன்ம அறிவு சீவன் அறியும் அறிவு, தத்துவத்தினுக்கு = பொருளுக்கு வேதம் + ஆகமம், வேதம் = சமய முதல் நூல், ஆகமம் = தருமளல்; உண்மை அனுபவம் பெற்ற உத்தமர்களால் மற்றவர்களுக்கு உபதேசமுறையாலே கூறப்பட்டவாக்கியங்கள்: மேலும் சிவபெருமானாலும் திருமாலாலும் ஆன்ம லாபத்தை அடைதற்குரிய சாதனங்களை விரிவாக எடுத்துக் கூறும்வேத முறையைப் பின்பற்றிய வாக்கியங்கள் என்றும் கூறலாம். கலைகளை = சாஸ்திரங்களை, ஆதிகளை முதலியவற்றை, பிண்ட அண்டம் = நுண்ணுடல் உருவங்கள், திருப் பணி – தொண்டுகள்.

வாக்கு = வார்த்தை, காயம் = உடல், பரன் + தாரம் = அன்னியனுடைய மனைவி, கமனம் பண்ண = சென்று இன்பம் அனுபவிக்க, புறங்கூறல் கண்டபோது இனிமையாகப் பேசிக் காணாதபோது இழிவாகப் பேசுதல், இம்சை = தீங்கு, சொல்லாடல் = பேசுதல், கிருத்தியங்கள் = செயல்கள். அபிமானம் = ஆசை, செருக்கு = கர்வம், உடன்பாடு – இசைவு, (ஒப்புக்கொள்ளுதல்) பச்சாத் தாபப்பட்டு மிகவும் இரக்கப்பட்டு, நியமனம் = கட்டளை பிராயசித்தம் = நிவர்த்திக்கும் வழிகள், அன்னவிரயம் = அன்னதானம், வார்த்திகர்களாய் கிழவர்களாய், சயன காலம் = தூங்கும்வேளை, பாராயணத்தாலும் = அருள் நூல்களை (தேவார, திருவாசகம் முதலான நூல்கள்) நியமமாக ஓதுதலாலும், விருந்து,= புதியவர்களாக வந்தவர்கள், வணங்குதல், சண்டாளாதி = ஒழுக்கம் தவறிய பிறப்பு முதலான, வேதாந்திகள் – நாமே பிரம்மம் என்னும் கொள்கையுடையவர்கள், ஏதுக்கள் = காரணங்கள், சர்வ சாட்சி = முழுவதையும் நேரில் கண்டவர், வாசனை = ஆசை, இந்திரிய வாசனை = ஐம்புலன்களின் வழியில் வைத்தபற்று, கரண வாசனை = மனம், புத்தி, சித்தம், அகங்காரமாகிய நால்வகைக் காணங்களில் வைத்த பற்று, சலித்தும் = வெறுத்தும், நிவாத = தூண்டப்படாத. சீவன்முத்தர்கள் = இப்பிறவியிலேயேமோட்சத்தை அடைந்தவர்கள் – அதாவது உடலோடு உயிர்கலந்து வாழ்கின்ற நிலையில் விடுதலை பெற்ற வர்கள், சமூகத்தில் = முன்னிலையில், சித்தர்கள் – அருள் அடைந்தவர்கள், பவுதிகம் மண்,நீர்,நெருப்பு, காற்று, ஆகாயமாகிய ஐம்பெரும்பூதசம்பந்த முடையது, தத்துவம்= கருவிகள், தாத்விகங்கள் = கருவிகளின் செயல்கள், தத்த படங்கள் = எரிந்த ஆடை.

2.வந்தன முறை

நிர் அகங்காரம் = கர்வம் இல்லாமை, மும்மலம் மூன்று குற்றம்; அவை, ஆணவம், கன்மம், மாயை, அதம பட்சம் = கடைசிப்பட்சம், ஆத்மவிளக்கம் = ஆன்மாவின் இயற்கை விளங்குதல், கிரகித்து = வலித்து, நிர்மல = குற்றமற்ற, ரகிதம் = நீக்கம், ஞானிகள்மாட்டு = ஞானிகளிடத்தில், மதம் + அதீதம் = மதத்தைக் கடந்தவர், உலகத்தின் கண் = உலகத்தில், பதி = கடவுள், தூலம் = பருமை, சூக்குமம் = நுண்மை, ஏகதேசங்கள் = சிறுபான்மை, இரண்டு அற்று = ஒன்றாக, அத்துவிதம் = இரண்டற்ற நிலையில், சகிதம் = சேர்க்கை, சங்கல்பம் = கொள்கை.

பரமசிவம் சுப்பிரமணிய சுவாமியிடம் அனுக்கிரகம் பெற்றது:- ஒரு முறை பிரம தேவன் சிவபெருமானைப் பார்க்கக் கயிலாயம் வந்தான். வரும் வழியில் முருகப் பெருமான் விளையாடிக் கொண்டிருக்கையில், முருகப் பெருமான் பிரமனைப் பார்த்து, ‘ யாவன்?’ என்று கேட்டார். பிரமன், தான் உலகங்களைப் படைக்கும் பிரமதேவன் என்று கூறினான். அப்போது முருகப் பெருமான், ‘உலகங் களை நீ எப்படிப் படைக்கிறாய்?’ என்று கேட்கப் பிரமன் “நான் ‘ஓம்’ என்று கூறி, வேதத்தை ஆரம்பித்து உலகங் களைப் படைக்கிறேன்.” என்று கூறினான். முருகப்பெருமான் உடனே பிரமனை நோக்கி, “ஓம்’ என்னும் சொல்லுக்குப் பொருள் யாது? கூறுக” என்று கேட்டார். அதற்குப் பொருள் தெரியாமல் பிரமன் விழித்தான். “பொருள் தெரியாமல் வேதம் சொல்லுதலில் பயன் இல்லை” என்று பிரமனைச் சிறையில் அடைத்தார். இதை அறிந்த சிவபெருமான் முருகப் பெருமானிடத்தில் வந்து விசாரித்து, முருகனையே நோக்கி, “உனக்கு ‘ஓம்’ என்னும் சொல்லுக்குப் பொருள் தெரியுமோ?” என்றபோது, முருகப்பெருமான் “தெரியும்” என்று விடை அளித்தார். “அப்படியானால் சொல்லுக” என்று கேட்டபோது, முருகப்பெருமான் “நீர் எனக்குச் சீட ராகவும், நான் குருவாகவும் இருந்து கூறவேண்டும்” என்று கூற, அவ்வாறே சிவபெருமான் சீடராகவும், முருகப்பெருமான் குருவாகவும் இருக்க “ஓம்” என்னும் பொருளை உபதேசிக்கப் பெற்றார். இதுவே சிவபெருமான் முருகப் பெருமானிடம் அனுக்கிரகம் பெற்ற வரலாறாகும்.

திருஞானசம்பந்தரைத் தாய்தந்தையர் வணங்கியது:- திருஞானசம்பந்தர் சீர்காழியில் பிறந்து, பார்வதி தேவியாரால் ஞானப்பால் உண்டு, எதையும் படிக்காமலே எல்லா ஞானங் களையும் மூன்று வயதில் கைவரப்பெற்றுப் பேர் அறிவு படைத்துக் கடவுளை நேரே கண்டு பல அற்புதங்களைச் செய்தவர். இதனால் இவரது தெய்வீக நிலையைக் கண்டு பெற்றோர் இவரை வணங்கினர்.

அப்பர்சுவாமிகள் திருஞான சம்பந்தரை வணங்கியது- அப்பர் சுவாமிகள் தாம் திருநாவுக்கரசர். இவர் வயதில் மிகவும் முதிர்ந்தவர். ஞானசம்பந்தர் வயதில் மிக இளைஞர், என்றாலும், திருஞானசம்பந்தர் இறைவரால் கொடுக்கப்பட்ட பல்லக்கில் ஏறிக்கொண்டு தம்மைத்தேடி வருவதை அறிந்த அப்பர், ஒருவரும் அறியாதபடி தாமும் திருஞானசம்பந்தர் பல்லக்கைச் சுமந்து வந்து, திருஞான சம்பந்தரை வணங்கினார். இஃது அன்பினால் செய்த செயலாகும்.

3. மெய்ம் மொழியும் ஒழுக்கமும்

தத்துவங்கள் கருவிகள், தத்துவிகள் = கருவிகளின் செயல்கள், அறிஞர்கள்; ஒருவாற்றாலும் = எந்தவிதத்தாலும், அகம் = உள், புறம் = வெளி, மார்க்கம் = வழி, அவத்தை = ‘வேதனை ; வசத்தவர் = உள்ளானவர்; லட்சியம் = குறிக் கோள். சுப = நல்ல,நெறி = வழி, சுத்த சன்மார்க்கம் = தூய்மையான ஞானவழி, வள்ளலார் சென்னையில் இருந்து ஒரு பெரிய நிலைக்கண்ணாடியை வரவழைத்தார். அதனைச் சித்திவளாகம் என்று பெயர் இட்ட மேட்டுக்குப்பத்தில் (வடலூரில் உள்ளது) தம் சிறு குடிசையில் ஒரு மண்டலம் வைத்து வழிபாடு செய்த பிறகு, அக்கண்ணாடியையும், ஒரு திருவிளக்கையும் சபாபதி சிவாசாரியரைக் கொண்டு ஞான சபையில் (வடலூரில் உள்ளது) தாபிக்கும்படி கூறினார். அவரும் அங்ஙனம் செய்து வழிபாடு செய்து வருவாரானார். அதுவே சித்திவளாகம் என்பது. சித்தி = மோட்சம், வளாகம் இடம். ஆகவே மோட்சம் அடைதற்கு இடமாய் உள்ளது என்பதாம். உத்தரஞான சிதம்பரம் = தெற்கே ஒரு சிதம்பரம் இருத்தலின், வடலூரில் வள்ளலார் அமைத்த சிதம்பரத்தினை உத்தரஞான சிதம்பரம் என்ற பெயரால் அழைத்தனர், உத்தரம் = வடக்கு, சித்திகள் = வன்மைகள், அருட்பிரகாச வள்ளலார் = இறைவர், சிவபெருமான், பல் லாற்றானும் பலவழிகளிலும், பிரசித்தப்பட = வெளிப்பட, சிற்சபை = உண்மை விளங்கும் ஞானசபை.

கனிவுற = இரக்கம் தோன்ற, பொறுத்து = தாங்கி, நிமித்தம் = காரணம், பதினான்கு லோகம் = பூலோகம், புவர்லோகம், சுவர்லோகம், சனலோகம், தபோலோகம், மகரலோகம், சத்தியலோகம் (இவை மேல் எழுலோகங் கள்) அதலம், விதலம், சுதலம், தராதலம், மகாதலம் இரசாதலம், பாதலம் (இவை கீழ் ஏழ் உலகங்கள்) ஆகப்பதினான்கு உலகங்கள், ஒருங்கே – ஒன்று சேர்ந்து, தருணம் சமயம், திருவரவு இறைவர் வருகை, விரதங்காத்தில் மேற்கொண்ட நோன்பு கெடாதிருக்கப் பார்த்துக்கொள்ளல், எல்லவரும் எல்லோரும், அசிந்திய = மனத்துக்கு எட் டாத, கணம் கால நுட்பம், புருஷார்த்தம் மக்கள் அடைய வேண்டிய பொருள்கள், சுவர்ண தேகம் = ஞான ஒளிபெற்ற உடல், அதாவது இந்திரியவாசனை வீசாத தேகம், கலை + அனுபவம். சொரூபம் = உண்மை. கருமசித்தி செயல் கைகூடுதல், பேறும் = பாக்கியமும், இன்றியமை யாதது = முக்கியமானது, நாதம் = திருமுறை ஓசை, வேதவோசை அல்லது சிவதத்துவம், சுகந்தம் நறுமணம் ஞானம் + இந்திரியம் = ஞானேந்திரிய ஒழுக்கம் = நல்ல வழியில் புலன்களைச் செலுத்துதல், கருண ஒழுக்கம் = நல் லெண்ணங்களைப் பெற்று ஒழுகும் ஒழுக்கம், சீவ ஒழுக்கம் = நல்ல குறிக்கோள்களை வகுத்துக்கொண்டு ஒழுகும் ஒழுக்கம், ஆன்ம ஒழுக்கம் = சீவ சாட்சிநிலை பெற்றிருத்தல், ஜீவ ஹிம்சை உயிர்க்கு வேதனை, பரிச்சயம் = பழக்கம், நட மாடுதல், பாதைகள் = முறைகள், ஜலம் = மூத்திரம், கிரமம் = முறை, ஒளடதம் =மருந்து, பவுதிக பக்குவம் = மண், நீர்,நெருப்பு, காற்று, ஆகாயம் ஆகிய ஐந்து பூதங்களின் சம்பந்தமான இயற்கை வழியில் நீக்கிக்கொள்ளும் பக்குவம் கருமம் + இந்திரியம், ஆபாசம் = அசுத்தம், சத்துரு = பகைவர், அதிக்கிரமம் = மீறிப்போதல், கோத்திரம் =குடி சூத்திரம் அனுஷ்டான முறையை விளக்கமாகக் கூறும் தருமசூத்திரம்,உயிர் எண்பத்து நான்கு லட்ச வகைப் பிறப்பை எடுக்கிறது. அவை தேவர் பிறப்பு பதினான்கு லட்சம், மக்கட் பிறப்பு ஒன்பது லட்சம், விலங்குப் பிறப்புப் பத்து லட்சம்,பறவைப் பிறப்புப் பத்து லட்சம், ஊர்ந்து செல்லும் உயிர்களின் பிறப்பு பதினொரு லட்சம், நீர் வாழும் உயிர்களின் பிறப்பு பத்து லட்சம், மரஞ் செடி முதலான தாவரப்பிறப்பு இருபது லட்சம், ஆக எண்பத்து நான்கு லட்சம், நூறாயிரம்= இலட்சம்,யோனி = கரு உண்டாகும் பை, நுகர்தல் = அனுபவித்தல், அருந்துதல், இச்சை = விருப்பம், பலகால் = பல முறை, சாதனம் – அடையாளங்கள், பயிற்சிகள், கதி = நிலை, தத்துவசித்தி விகற்ப பேதங்கள் = தத்துவசித்தியின் உட்பிரிவுகள், வேதம் + அந்தம் = வேதத்தின் முடிவு சித்தர் + அந்தம் = அறிஞர் கண்டமுடிவு, மார்க்கம் + அனுபவம், இலேசம் = மனத்தால் எண்ணியதை வெளிக் குறியால் உணர்த்துவது. மதம் + ஆசாரம் = சமய ஒழுக்கம், அனுட்டியாது = மேற்கொள்ளாமல், உலகியற்கண் = உலக விடயத்தில், துணை = அளவு, திரிகரணம் = மனம், வாக்கு காயம், தரிக்க இருக்க, சரம் + அசரம் = அசையும் பொருளும், அசையாப் பொருளும், நடாத்துவித்து = நடக்கும்படி செய்து, வழிபடுகை = வணக்கம் செய்தல்; பின் பற்றுதல், மங்கலம் = நற்செயல்கள், புனைதல் = செய்தல், திருப்பணி தொண்டு, கரணம் + இந்திரியம், குதூகலம் = மகிழ்ச்சி, விந்து விளக்கம் = புருவமத்தியில் விளங்கும் விளக் கம், அல்லது வீரியத்தை மேல் ஓங்கச் செய்வதால் ஏற்படும் பலம், நாத ஒலி = நாததத்துவ ஒலி, புறக்கடையில் = வெளிப்புறத்தில், திருக்கோலம் = அழகிய வடிவம், குழைய உருக்க, பரவசம் = ஆனந்தம் எமரங்காள் = எம்முடைய உறவினர்களே! சாமந்தர் சிற்றரசர், மந்திரிகள், தரம் = தகுதி, காமம் + அந்தகாரம் = கரம இருள், அத்தை அந்தப் பேர் இன்ப நிலையை, நான்கு + திசை திசைக்கண் = நாற்றிசை திசைகளில், நமரங்காள் = நம்மவர்களே, ஆற்றல் = வல்லமை, புவி = உலகு.

4. நித்தய ஒழுக்கம் என்னும் உலகியல்

மைதுனம் = மாதர் புணர்ச்சி, சூரியன் + உதயம். உதயம் = – தோற்றம்; உபாதிகள்= துன்பம் ; சங்கற்பம் = கொள்கை, நாசி = மூக்கு ,கரிசலாங்கண்ணி = ஒருவகைத் தாவரம். சூரணம் = தூள், நாழிகை என்பது 24 நிமிட நோம், ஆலசியம் = தாமதம், அக்கினி அளவு = பசியளவு, ஏகதேசத்தில் = அடிக்கடி இல்லாமல் சிற்சில வேளைகளில், மோதகம் – கொழுக்கட்டை, ததி + ஓதனம் = தயிர்ச் சாதம், சித்திரான்னம் = புளியோரை, ததியோதனம் சர்க்கரைப் பொங்கல் முதலியன இப்பெயரால் வழங்கப்படும் சாதங்கள், சிலேத்துமம் = குளிர்ச்சி சம்பந்தமான நோய், வாதம் = வாய்வு சம்பந்தமான நோய், பித்தம் = உஷ்ண சம்பந்தமான நோய், பஞ்சவாசம் = ஐந்து வகையான வாசனை, அவை இலவங்கம், ஏலம், பச்சைக் கர்ப்பூரம், சாதிக் காய், தக்கோலம் என்பன, புறத்தில் = வெளியில், நெளிவு = தளர்ச்சி, கரணசுதந்திரம் = மனம் முதலிய கரணங்கள் தன் வயப்பட்டிருத்தல், பரிச்சேதபயம் = அற்ப தோற்றத்தால் ஏற்படும் பயம்.

ஓங்கார பஞ்சாட்சரம் = ஓம் என்னும் பிரணவத்தில் அடங்கிய ஐந்து எழுத்தால் ஆன மகாமந்திரம், பஞ்ச +அட் சரம் = ஐந்து எழுத்துக்கள், விரேசனம் = மலம் மிகுதியாகக் கழித்தல், பேதி, வமனம் வாந்தி, நசியம் = மூக்கிலிடும் மருந்து, இதனால் மூக்கில் உள்ள அழுக்குகளை நீக்குதல், மூக்குப்பொடி, அஞ்சனம் = மை, தீட்டல் = இடுதல், ஒருபட்சம் = பதினைந்து நாட்கள், சாவதானம் = நிதானம், துர்கந்தம் = கெட்ட வாசனை, உலோபம் = ஏழை எளியவர் கட்கு ஈயாத குணம், சுகியம் = இக் காலத்தில் சுய்ய உண்டை என்று குறிப்பிடும் தின்பண்டம், தந்தம் பல், சாமம் = எழரை நாழிகை நேரம், அதாவது மூன்று மணி நேரம், அனுபானித்து = உடன் சேர்த்து, சத்துவமான = சாரமான, நன்மையே நோக்கும் தன்மையான.

5.உபதேசம்

அதிட்டிக்கின்ற = இடமாகக் கொண்டுள்ள, வேலாயுத முதலியார் = வள்ளலாரின் மாணவர், இலக்கண இலக்கியம் நன்கு கற்றவர், அனந்தம் = பல, உன்னியும் = எண்ணியும், பரலோகம் = மேலுலகம், இகலோகம் இவ்வுலகம், ராகம் + ஆதிகளை = ஆசை முதலியவற்றை, முழை = மலைக்குகை, இசுவிசாரம் = இவ்வுலகத்தைப் பற்றிய விசாரம், அன்னியில் = தவிர்த்து, நெகிழ்ச்சி = இரக்கம், உபசர்க்கம்= சமஸ்கிருத மொழியில் இதனை அடை உருபு என்பர். யா = எவை, கூறு = பகுதி, போகலட்சியம்= இன்பத்தையடை யும் குறிக்கோள், சாத்தியம் = நிறைவேற்றக் கூடியது, புனிதர் பரிசுத்தவான்கள், பஞ்சகிருத்தியம் = ஐந்து வகையான செயல்கள், அவை தோற்றுவித்தல், வாழ்வித்தல், குற்றம் நீக்குவித்தல் பக்குவம் வருவித்தல் விளக்கம் செய் பல், விபவம் = பெருமை) இதர வேறு, பொன்மை = தொன்நிறம், எட்டுத் திரைகள் = கரும்பெருந்திரை, நீலப் பெருந்திரை, சுத்தமாயாதிரை, அசுத்தமாயாதிரை செம்மைத் திரை பொன்மைத்திரை வெண்மைத்திரை, கலப்புத்திரை. லட்சியம் = குறிக்கோள், குமூஉக்குறி = ஒரு கூட்டத்தவர்` மட்டும் விளங்கிக்கொள்ளும் வகையில் ஒன்றிற்கு ஒரு பெயரைக் குறிப்பிட்டுக் கொள்ளுதல். குடியர் கள்ளை ஆகாசப் பால் என்பது போல, புறங்கவிய = அன்னியர்களும் ஒப்புக் கொள்ளும்படி, பிண்டம் = உருவற்ற கருவு, அண்டம் உலகவெளி, சத்திய லோகாதிபதி = பிரமன், சத்திய + உலக + அதிபதி, இந்திர சாலம், = மாயரவித்தை; சாலம் = கண்கட்டி வித்தை, தேசிகன் = குரு, அலங்கல் மாலை பாசுரம் பாட்டு, வியாகரணம் சமஸ்கிருத இலக்கண நூல், தொல்காப்பியம் தமிழில் உள்ள மிகப் பழைய இலக் கணநூல் இதனால் தமிழர் நாகரிகங்களை அறியலாம். இதை எழுதியவர் தொல்காப்பியமுனிவர், பாணீனியம் = பாணினி முனிவரால் எழுதப்பட்ட வட மொழி இலக்கணம் கணிதம் = அளவு, இலக்கம் = எண்கள், உகர இறுதி = உ என்னும் எழுத்தைக் கடைசியில் பெற்று இருத்தல், தொக்கியது = மறைந்தது,தொன்மை மறைந்தது, தொன்மை = பழமை, மருவியது திரிந்தது.

வாசகப் பெருவிண்ணப்பம் என்பது வள்ளலார் எழுதிய ஓர் அருமையான உரைநடை இங்கு க் குறிப்பிடப்பட்ட பாடல்கள் கீழ்வருவன.

1. மாயையால் கலங்கி வருந்திய போதும்
வள்ளல்! உன் தன்னையே மதித்துன்
சாயையாப் பிறரைப் பார்த்ததே அல்லால்
தலைவ! வேறு எண்ணிய துண்டோ?
தூயபொன் பாதம் அறியநான் அறியேன்;
துயர் இனிச் சிறிதும் இங்கு ஆற்றேன்;
நாயக! எனது மயக்கெலாம் தவிர்த்தே
நன்று அருள் புரிவது உன் கடனே.

2. தேடியதுண்டு நினதுரு உண்மை;
தெளிந்திடச் சிறிது நின்னுடனே
ஊடியதுண்டு ; பிறர்தமை அடுத்தே
உரைத்ததும் உவந்ததும் உண்டோ?
ஆடியபாதம் அறியநான் அறியேன்;
அம்பலத் தருட்பெருஞ் சோதி !
கூடியநின்னைப் பிரிகிலேன்; பிரிவைக்
கூறவும் கூசும்என் நாவே.

3. “கருணையும் சிவமே பொருள்எனக் காணும்
காட்சியும் பெறுக!மற் றெல்லாம்
மருள்நெறிஎன நீ எனக்கறி வித்த
வண்ணமே பெற்றிருக் கின்றேன்;
இருள்நெறி மாயை வினைகளால் கலக்கம்
எய்திய தென்செய்வேன்? எந்தாய்
தெருள்நெறி இன்றிக் கலங்கினேன் ; எனினும்
சிறுநெறி பிடித்ததொன் றிலையே.

ஊடியது = சிறிது மனவேறுபாடு கொண்டது, உவர்தது = மகிழ்ந்தது, மருள் = மயக்கமான, நெறி = வழி, தெருள்நிலை = தெளிந்த நிலை, பதிகம் = பத்து அல்லது பதினோரு பாடல்கள் அடங்கிய பாட்டுத் தொகுதி, நிலை மிசை நிலையில், அண்டம் + அண்டங்களுக்கு = உலகங்களுக்கும் அவ்வுலகங்கட்கு அப்பாலும் உள்ள உலகங்கட் கும், நேயம் = அன்பு, ஒருமைப்பாடு ஒற்றுமைப்பாடு. சாலை சத்திரம் = வள்ளலார் வடலூரில் ஏற்படுத்திய தரும சாலை, வாதிகள் = தர்க்கம் செய்பவர், புறமுகம் = வெளிப்பட்ட நிலையில், உள்ளும் = மனத்திலும்,புறமும் = வெளியிலும், சொரூபம் = உண்மை, ரூபம் = வடிவம்,சுபாவம்= இயல்பு, தத்துவங்கள் = பொருள்கள், பிரபஞ்சபோகம் = உலக ஒழுக்கம், கிரியை = இன்பம், நிர்+ஆசை = ஆசை இல்லாமை, சரியை முதல் சாதகம் நான்கு = சரியை கிரியை, யோகம், ஞானம் முத லான பயிற்சிகள் நான்கு, சரியை = செய்கை, யோகம் = தவநிலை, ஞானம் அறிவு நிலை, கண்டம் = சில பகுதிகள், அகண்டம்= எல்லாப்பகுதிகள் அனந்தம் = பல, சங்கை = எண், சுவர்கம் = மோட்ச உலகம், அறிவின்கண் அறிவில், ஐயம் = சந்தேகம். திரிபு = வேறுபாடு, வாச்சியம் = வெளிப்படை ‘சந்ததமும் வேதமொழி’ என்னும் பாடல் தாயுமானவர் பாடல், அப் பாடல்,

சந்ததமும் வேதமொழி யாஒன்று பற்றினது
தான்வந்து முற்றும் எனலால்,
சகமீ திருந்தாலும் மரணம்உண் டென்பது
சதாநிஷ்டர் நினைவ தில்லை ;
சிந்தை அறி யார்க்கீது போதிப்ப தல்லவே.
செப்பினும் வெகு தர்க்கமாம்;
திவ்யகுண மார்க்கண்டர் சுகமாதி முனிவோர்கள்
சித்தாந்த நித்யர் ஆலரோ?
இந்திராதி தேவதைகள், பிரமாதி கடவுளர்,
இருக்காதி வேத முனிவர்,
எண்ணரிய கணநாதர், நவநாத சித்தர்கள்,
இரவிமதி ஆதி யோர்கள்,

கருவூர் கின்னர்கள் மற்றையர்கள் யாவரும்
கைகுவித் திடும் தெய்வமே,
கருதரிய சிற்சபையில் ஆனந்த நிர்த்தமிடும்
கருணா கரக் கடவுளே !

என்பது .

நாபி = கொப்பூழ், ஈறு = முடிவு, நாடி = இரத்தக் குழாய், ஆப்தர்கள் = அன்பர்கள், சந்ததமும் = எப்பொழுதும், சகம் = பூமி, சதா = எப்பொழுதும், நிஷ்டர் = யோகத்தில் இருப்பவர், செப்பினும் = சொன்னாலும், சுகர் சுகப் பிரம்மரிஷி முதலானவர், இருக்கு ஆதி = ரிக் வேத முதலான, இருக்கு, யஜுர், சாமம், அதர்வண வேதங்கள் சதுர்முகன் = சதுர் பிரம்மா முதலானவர், இரவி = சூரியன், மதி = சந்திரன், கருதரிய = நினைப்பதற்கு அருமையான, சிற்சபையில் = சிதம்பரம் பொற்சபையில், நிர்த்தம் = நடனம், கருணை + ஆகரம் = இரக்கத்திற்கு இருப்பிடமான

முற்றும்.

★ ★ ★

இந்த புத்தகம் பிடித்திருந்தால்....

மதிப்பிட நட்சத்திரத்தைச் சொடுக்கவும்!!!

சராசரி மதிப்பீடு 0 / 5. வாக்கு எண்ணிக்கை: 0

இந்தப் பதிவிற்கு மதிப்பீடு அளிக்கும் முதல் நபராக இருங்கள்!!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *