ஞானக் கொழுந்து
கி. வா. ஜகந்நாதன்

உள்முகப் பார்வை

உள்ளத்திலே நல்ல குறிக்கோளும், அந்தக் குறிக்கோளில் பற்றும், அதை அடையும் முயற்சியும் இல்லாதவர்களுக்கு எது கிடைத்தாலும் அது வீணாகிவிடும். ஆற்றல் பெற்ற அசுரர்கள் பிறரை நலிந்தார்கள். வீமன் தீயவரைச் செற்று நல்லோரைக் காத்தான். இராவணன் அறிவு நிரம்பப் பெற்றும் நல்ல குறிக்கோள் இன்மையால் அழிந்தான். தீய உள்ளம் படைத்தவர்களுக்கு எந்தப் பொருளும் பிறருக்குத் தீங்கு புரியவே உதவும்.

பணம் மக்களுக்குச் செருக்கை உண்டாக்குவதைப் போலவே நூலறிவும் செருக்கை உண்டாக்கும். நூலைக் கற்றல் அறிவு தெளிவடைய வேண்டி; அறிவு தெளிந்தால் இறைவனிடம் அன்பு பிறக்கும்.

கற்றதனால் ஆய பயன்என்கொல் வாலறிவன்
நற்றாள் தொழாஅர் எனின்”

என்ற குறளில், கல்வியின் பயன் இறைவன் தாள் தொழல் என்று வள்ளுவர் சொல்கிறார். அந்தப் பயனை அடையும் நெறியிற் செல்லாத ‘அறிவாளிகள்’ எந்தக் காலத்திலும் இருக்கிறார்கள். அவர்களுக்குச் சாத்திரம் பெரிதே ஒழியச் சமய வாழ்வு பெரிது அன்று.

என்றும்,

சாத்திய ரம்பல பேசும் சழக்கர்காள்
கோத்தி ரமுங்குல முங்கொண் டென்செய்வீர்
பாத்தி ரஞ்சிவ மென்று பணிதிரேல்
மாத்தி ரைக்குள் அருளும்மாற் பேறரே

குறிக ளும்அடை யாளமும் கோயிலும்
நெறிக ளும்அவர் நின்றதோர் நேர்மையும்
அறிய ஆயிரம் ஆரணம் ஓதினும்
பொறியி லீர்மனம் என்கொல் புகாததே”

என்றும் இத்தகைய செருக்கர்களைப் பார்த்து இரங்குகிறார் அப்பர் சுவாமிகள்.

நூல்களை ஏணியாகக் கொண்டு இறைவனை அறியும் நெறியிலே புகுந்து செயல் செய்ய வேண்டும். அதனைவிட்டு நூலிழையை ஆயிரம் கூறிட்டுக் காட்டுதல் போல அறிவின் சாமர்த்தியத்தாலும், வாக்கு வன்மையாலும், வாதத் திறமையாலும் சாத்திரங்களின் நுட்பங்களைக் காட்டிச் சமருக்குக் கச்சை கட்டுவோர், ஏணியைச் சுமந்து கொண்டு, ஏறவேண்டிய இடத்தில் ஏறாமல் இருப்பவர்களுக்குச் சமானமானவர்களே.

நூல்களைப் படிப்பதற்கும் அவற்றைத் தெளிவதற்கும் எத்தனை காலம் கழிகின்றது! அவ்வளவு காலத்தைச் செலவிட்டும் நன்மை பெறாமல் செருக்கு மிஞ்சிப் போவதைக் காட்டிலும் துரதிருஷ்டம் வேறு என்ன வேண்டும்? தம்முடைய கட்சியே வெல்ல வேண்டுமென்று மண்டையைக் குடைந்து கொண்டு நிற்பவர்கள், இறைவனைக் காணவேண்டும் என்ற ஏக்கத்தையுடையவராகி அந்த நெறியில் வாழத் தொடங்கினால் எவ்வளவு நன்மை உண்டாகும்!

நம்முடைய பார்வையைப் புறத்தே போகவிட்டு, அறிவை வெளியிலே. அலைய விட்டு, அதனால் தெரிந்து கொண்டவற்றை வைத்துக் கொண்டு, “நான் மெத்தப் படித்தவன்; அகன்ற அறிவுடையவன்” என்று சொல்லுகிறோம். நம்மைக் காட்டிலும் அகலமான அறிவு படைத்தவன் வந்து வாதம் பேசினால் நம் வாய் அடங்கிவிடுகிறது. புறத்திலே செலுத்தும் அறிவு மேலே மேலே போய்க் கொண்டேதான் இருக்கும். அதை நிறுத்த இயலாது. போகப் போக இடம் விரிந்து கொண்டே போகும். ஆனால் இந்தப் பயணத்தை மாற்றிச் சிறிது உள்ளே திருப்பிவிட்டால் நிச்சயமாக ஓரிடத்தில் வந்து நிற்கவேண்டும். அகமுகமாக நம் பார்வையைத் திருப்பிவிட்டால் அகலம் குறைந்துவிடும்; ஆழம் உண்டாகும்.

உலகத்தையும் நூலையும் பார்த்த பார்வையைத் திருப்பி உயிராகிய தம்மையும் அதனூடே உயிர்க்குயிராக நிற்கும் இறைவனையும் பார்க்க முயல வேண்டுமென்பதைச் சொன்னார். ஆணிபோல் பதிய என்று ஒரு சொல்லைக் கூட்டிப் பொருள் கொள்ள வேண்டும். ஆர்த்த – கட்டிய.) பிறவியினாற் கட்டுண்டு கிடக்கும் ஆன்மாக்கள் அக்கட்டினின்றும் நீங்கினால் வீடு பெறும்.

“ஆர்த்த பிறவித் துயர்கெடநாம் ஆர்த்தாடும் தீர்த்தன்.” என்று மாணிக்கவாசகரும் ‘ஆர்த்த பிறவி’யைச் சொன்னார்.

இது ஆறாந் தந்திரத்தில் தவம் என்னும் பகுதியில் வரும் 8-ஆவது பாட்டு.

இந்த புத்தகம் பிடித்திருந்தால்....

மதிப்பிட நட்சத்திரத்தைச் சொடுக்கவும்!!!

சராசரி மதிப்பீடு 0 / 5. வாக்கு எண்ணிக்கை: 0

இந்தப் பதிவிற்கு மதிப்பீடு அளிக்கும் முதல் நபராக இருங்கள்!!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *