
கண்ணன் கதை
சுத்தானந்த பாரதியார்
6. அறப் போர்!
அறப்போர் மூண்டது; கண்ணன் விஜயனைக் கருவியாகக் கொண்டு, தான் நடுநிலையிலிருந்து தேரோட்டி, பாரதப் போரைத் தூண்டி நடத்தினான். குழலூதிய கண்ணன், பாஞ்சஜன்யம் முழங்கினான்! போரிடை ஒருநாள், தனது சுற்றங் கண்டு, இரங்கி வீர விஜயன் தளர்ந்தான். அப்போது கண்ணன், உலகிற் கெல்லாம் வழிகாட்டும் சிறந்த அத்யாத்ம யோக நூலான கீதையை யருளித்தனது விஸ்வரூபத்தையுங் காட்டி, தன் அவதார காரியம் நிறைவேறவே கருவியாகக் கொண்டதை விளக்கி, விஜயனை மீண்டும் வீர வேள்விக்கு ஏவி, கௌரவக் கும்பலைக் கட்டுடன் வீழ்த்தி, தரும ராஜ்யத்தை நாட்டினான். கண்ணன் கீதை வடிவாக இன்றும் விளங்குகிறான். எங்கே கீதை முழங்குகிறதோ, அங்கே கண்ணன் உள்ளான்!



