
முருகன் அல்லது அழகு
திரு. வி. கலியாணசுந்தரனார்
12. வேண்டுகோள்
(அருள் – அஞ்சாமை – இயற்கை வாழ்வினரை நாள்கோள் ஒன்றுஞ் செய்யாமை – திருப்புகழ் மாண்பு – அருணகிரியார் வீரமொழிகளாற் சில வேண்டுகோள்.)
இயற்கைச் செந்நெறி விடுத்துத் தன்னலக் கருத்தால் பிறரைத் துன்புறுத்துவோன் உள்ளத்தில் அச்சமன்றோ குடி கொள்கிறது? அச்சமின்றி அன்னார் எங்ஙனம் வாழ்தல் கூடும்? அச்சத்தால் நிகழும் நடுக்கம், நரப்புக் கட்டுக்களைக் குலைத்து, செந்நீரை நஞ்சாக்கி எரித்து, இளமையையும் அழகையுங் கல்லிக்கல்லி அரிக்குமன்றோ? அச்சத்தின் பருமையே (பரி ணாமமே) உலகிலுள்ள கொலைக் கருவிகளென்று கூறுவது மிகையாகாது. அச்சமே முடிவில் வருங் காலன். அச்சமுள்ள வனே பெரிதுங் கருவி தாங்குகிறான். ஏன்? தான் பிறர்க்கு ஊறு செய்தமையால், பிறர் தனக்கு ஊறு செய்வரென்று அஞ்சித் தன்னைக் காத்துக்கொள்ள அவன் கருவி தாங்குகிறான். பிறர்க் கேன் ஊறு செய்தல் வேண்டும்? பின்னை ஏன் அச்சத்தால் பீடிக்கப்பட்டு, அது காலனாக வருங் காட்சி கண்டு நடுக்குறல் வேண்டும்?
எவ்வுயிர்க்குந் தீங்குசெய்யா இயற்கைச் செந்நெறியில் வாழ்வு நடாத்துவோர்க்கு நாளுங் கோளும் பிறவும் துணை நின்று நலமே செய்யும். செந்நெறி விடுத்து வேறு வெந்நெறி பற்றி உழல்வோர், தாம் இடர்ப்படும் வேளையில், நாளையுங் கோளை யும் பிறவற்றையும் பழிப்பது வழக்கம். இவர் நன்னெறிபற்றி யொழுகியிருந்தால் இவரை நாளென் செய்யும்? கோளென் செய்யும்? பிற என் செய்யும்? நாளுங் கோளும் பிறவும் ஆண்ட வனால் படைக்கப்பட்டன. அவனடியாரை அவைகள் என் செய் யும்? ‘வேயுறு தோளிபங்கன்’ என்னும் பதிகத்தில் திருஞான சம்பந்தர்,
‘ஞாயிறு திங்கள்செவ்வாய் புதன் வியாழம் வெள்ளி சனி பாம்பிரண்டு முடனே, ஆசறு நல்லநல்ல அவை நல்ல நல்ல அடியா ரவர்க்கு மிகவே’
என்றும்,
‘ஒன்பதொ டொன்றொடேழு பதினெட்டொ டாறு முடனாய நாள்க ளவைதாம் – அன்பொடு நல்லநல்ல அவை நல்ல நல்ல அடியாரவர்க்கு மிகவே’
என்றும் அருளிச் செய்திருத்தல் காண்க.
இயற்கைவழி முருகைக் கண்டு, இன்பத்திற் றோய்ந்து, அழியா வாழ்வுபெற்ற அருளாளர் எதற்கும் எவர்க்கும் அஞ் சாத ஞானவீரராவர். முருகனருள் பெற்ற அருணகிரியார் திருப் பாடல்களைப் பயின்றால், அன்பும் மகிழ்வும் அஞ்சாமையும் வீரமும் பொங்கித் ததும்பி வழிவது காணலாம். அவரருளிய திருப்புகழைப் பாடும்போதும், பிறர்பாடக் கேட்கும்போதும் எழும் உணர்வின் மிடுக்கை ஈண்டு எழுத்தால் எழுதல் முடிய வில்லை. மயிர் தோல் குருதி நிணம் நரம்பு எலும்பு முதலிய எல் லாம் குலுங்கிக் குலுங்கிப் புத்துயிர் பெறுகின்றன; அன்பு ஊற்றெடுத்தோடுகிறது; மகிழ்ச்சி பொங்குகிறது; அச்சம் பறக் கிறது; வீரம் வீறிட்டெழுகிறது. அவ்வேளை கிளம்பும் அஞ் சாமைக்கு ஓரளவுமுண்டோ? ‘எமக்கார் நிகர்’ என்னும் எண்ண மும் எழுகிறது. ‘திருப்புகழ் படிக்குமவர் சிந்தை வலுவாலே, ஒருத்தரை மதிப்பதிலை உன்றனருளாலே’ என்னும் வீரமொழி யும் நோக்கற்பாலது. மணமும், -இளமையும்- கடவுட்டன்மையும் – அழகுஞ் செறிந்து, பாட்டா யமைந்துள்ள முருகல்லவோ திருப்புகழ், அலங்காரம், அநுபூதி முதலியன?
திருப்புகழ்
அகரமு மாகி யதிபனு மாகி யதிகமு மாகி அகமாகி
அயனென வாகி அரியென வாகி
அரனென வாகி அவர்மேலாய்
இகரமு மாகி யெவைகளு மாகி யினிமையு மாகி வருவோனே
இருநில மீதி லெளியனும் வாழ
எனதுமு னோடி வரவேணும்
மகபதி யாகி மருவும்வ லாரி மகிழ்களி கூரும் வடிவோனே
வனமுறை வேட னருளிய பூஜை
மகிழ்கதிர் காம முடையோனே
செககண சேகு தகுதிமி தோதி திமியென ஆடு மயிலோனே
திருமலி வான பழமுதிர் சோலை
மலைமிசை மேவு பெருமாளே.
அலங்காரம்
தண்டா யுதமுந் திரிசூல மும்விழத் தாக்கியுன்னைத்
திண்டாட வெட்டி விழவிடு வேன்செந்தில் வேலனுக்கு
நோன்பிருங்கள்; பெண்ணைப் போற்றி இல்லற நடத்துங்கள்; முருகன் திருவருளால் பிணி மூப்பு சாக்காடெனுங் கட்டுகளை அறுத்துக்கொள்ளுங்கள்; கொள்ளின் இயற்கை மணமும், மாறா இளமையும், அழியா அழகும், கடவுட்டன்மையும் உங்கள் பால் பொலியும்; பொலியும்;
இயற்கையும் அழகும் என்றும் வாழ்க!
கச்சியப்பர்
‘துய்யதாம் மறைக ளாலுந் துதித்திடற் கரிய செவ்வேள்
செய்யபே ரடிகள் வாழ்க சேவலும் மயிலும் வாழ்க
வெய்யசூர் மார்பு கீண்ட வேற்படை வாழ்க அன்னான்
பொய்யில்சீ ரடியார் வாழ்க வாழ்கஇப் புவன மெல்லாம்.
ஆறிரு தடந்தோள் வாழ்க அறுமுகம் வாழ்க வெற்பைக்
கூறுசெய் தனிவேல் வாழ்க குக்குடம் வாழ்க செவ்வேள்
ஏறிய மஞ்ஞை வாழ்க யானைதன் னணங்கு வாழ்க
மாறிலா வள்ளி வாழ்க வாழ்கசீ ரடிய ரெல்லாம்.
புன்னெறி யதனிற் செல்லும் போக்கினை விலக்கி மேலா
நன்னெறி யொழுகச் செய்து நவையறு காட்சி நல்கி
என்னையும் அடிய னாக்கி இருவினை நீக்கி யாண்ட
பன்னிரு தடந்தோள் வள்ளல் பாதபங் கயங்கள் போற்றி’
என் செய்யும்? தமிழ் நாட்டுச் செல்வத்துட் பெருஞ் செல்வ மன்றோ திருப்புகழ்? இச் செல்வம் பெற்ற தமிழ்நாடு இந்நாளில் வறுமையால் பீடிக்கப்படுகிறது; அச்சத்தால் அலைக்கப்படு கிறது. தமிழ் நாட்டின் கல்வி காணோம்; வழக்க ஒழுக்கங் காணோம்; வீரங் காணோம். தமிழ்நாட்டின் இக்கால நிலை என்னே! என்னே! கண்ணீர் பெருகுகிறது! முருகா! நினது உண்மையை முதல் முதல் கண்டவர் தமிழரல்லரோ? தொன்மை வாய்ந்த மக்கள் தங்கள் நிலை திரிந்து இடர்ப்படுகிறார்கள்; இயற்கை வழி விடுத்து வேறு வேறு வழிகளில் புகுந்து புகுந்து வருந்து கிறார்கள். அவர்கள்மீது திருவருள் பொழிக. முருகா! நினக் குரிய நாட்டை நின்னையன்றி எவரே காப்பர்? தமிழ் முருகா! முருகா!
நண்ணினர்க் கினியா யோலம் ஞானநா யகனே யோலம்
பண்ணவர்க் கிறையே யோலம் பரஞ்சுடர் முதலே யோலம்
எண்ணுதற் கரியா யோலம் யாவையும் படைத்தா யோலம்
கண்ணுதற் பெருமா னல்குங் கடவுளே யோல மோலம்.
தேவர்கள் தேவே யோலம் சிறந்தசிற் பரனே யோலம்
மேவலர்க் கிடியே யோலம் வேற்படை விமலா வோலம்
பாவலர்க் கெளியா யோலம் பன்னிரு புயத்தா யோலம்
மூவருமா கிநின்ற மூர்த்தியே யோல மோலம்
(கந்தபுராணம்)
என்று ஓலமிடுகிறேன்; முறையிடுகிறேன். முருகா! நின் தமிழ் நாட்டைக் காக்க; நின் கன்னி நாட்டைக் காக்க.
தமிழ் மக்களே! முருகன் எல்லாப் பொருள்களிலும் நீக்க மற நின்று, அவைகளை அழகு செய்வதை உங்கள் முன் னோர்கள் கண்டு இன்ப நுகர்ந்தார்கள். அவ்வின்பத்தை இப் பொழுது நீங்கள் நுகர்கிறீர்களா? இயற்கை, முருகன் வடிவா யிருப்பது உங்கட்குப் புலனாகிறதா? முருகனைக் காண முயல் கிறீர்களா? அவன் செந்நெறியை ஓம்பினால் அவனைக் காணலாமன்றோ? முருகனுக்கு ஏராளமான கோயில்களிருக் கின்றன. அவனுக்கு இனிப் புதிய கோயில்கள் கட்டுதல் வேண்டா; எங்கும் நிறைந்துள்ள அவனுக்கு எக்கோயிலும் வேண்டா. அவன் செந்நெறியை வளர்க்கக் கழகங்கள் காணுங்கள்; கல்லூரி அமையுங்கள்; அறநிலையம் நிறுவுங்கள்; திருப்புகழைப் பொரு ளுணர்ந்து ஓதுங்கள்; இயற்கையிலுள்ள அவனழகை நூல் களாக எழுதுங்கள்; பாட்டாகப் பாடுங்கள்; போலி ஞானம் பேசி முருகனிடத்துள்ள அன்பை – நம்பிக்கையை – மன உறு தியைக் கெடுத்துக் கொள்ளாதேயுங்கள்; முருகன் பெயரால் பிணியை ஓட்ட முயலுங்கள்; உறுதிக் கொள்கையை வளருங்கள்;
★ ★ ★



