
சன்மார்க்க போதமும் திறவும்
திரு. வி. கலியாணசுந்தரனார்
குறிப்புரை
சன்மார்க்கத்தைப் பற்றிப் பொதுமுறையில் என்னால் நூல்கள் எழுதப்படுவதுண்டு. அம்மார்க்கத்துக்கென்று சிறப்பு முறையில் என்னால் இரண்டு நூல்கள் யாக்கப்பட்டன. ஒன்று சன்மார்க்க போதம்; மற்றொன்று சன்மார்க்கத் திறவு.
முன்னைப் பதிப்பில் இவ்விரண்டும் தனித் தனியே வெளியிடப்பட்டன. இப்பதிப்பில் இரண்டும் ஒன்று சேர்க்கப்பட்டன. காரணம் இரண்டுக்குமுள்ள தொடர்பேயாகும்.
இராயப்பேட்டை
15 – 7 – 1944
திரு.வி.க.



