பசி 
க. நா. சுப்ரமண்யம்

பொருளடக்கம்

பசி
க. நா. சுப்ரமண்யம்

இந்த நாவலுக்கு ஏனோ தெரியவில்லை ஆசிரியர் பசி என்று பெயர் வைத்து விட் டார். வேறு எந்தப் பெயர் வைத்திருந்தாலும் பொருந்தும் என்றுதான் தோன்றுகிறது.

பசிதான் உலகத்தின் நியதி என்பதே ஆசிரியரின் கட்சி.

மனிதனின் பசிகளைத் தீரித்து விடுவதென்பது வெறும் லக்ஷ்யவாதிகளின் கனவே தவிர வேறு அல்ல.

சாமாவின் பசிகள் அலாதியானவை; சற்று விசித்திரமானவை என்று கூடச் சொல்லலாம். கமலாவின் தாற்காலிகப் பசி எளிதில் சமனமாகக் கூடிய து: மிகவும் நியாயமானது. அதைத் தீர்ப்பது தன் கடமை என்று சாமா கடைசியில்தான் உணருகிறான். சொந்த விஷயங்களைப் பற்றி யாராலும் நேர்மையாக, தெளிவாக, சுலபமாகச் சிந்தனை செய்ய முடிவதில்லை. தன் மனத்தை அறிய சாமா வெகுவாகப் பாடுபடுகிறான்.

சுந்தரப்பாட்டி, நாராயணையர், ஜானம்மாள் முதலியோர் வேறு ஒருவருக்காக வாழ்க்கையில் பசி கொண்டுள்ளவர்கள். படித்துப் பட்டம் பெற்ற ராஜி தன் உள்ளத்துப் பசிகளை மூடி வைக்க முயலுகிறாள். சாம்ப மூர்த்திராயர் பசிகளை எல்லாம் மீறியவர்தான். ஆயினும் அவரும் மனிதர்தான்.

ஜோதி நிலையம் ஆரம்பிக்கும் உத்தேசம் தோன்றிய போது நண்பர் அ. கி. ஜயராமன் தமது நிலையத்துக்கு நான் சின்னதாக ஒரு புஸ்தகம் எழுதித் தரவேண்டும் என்று உத்ஸாகத்துடன் கேட்டார். அப்பொழுது நான் எழுதிக்கொண்டிருந்த பசி என்கிற நாவலைத் தருவதாக ஒப்புக்கொண்டேன். இதோ, அது புஸ்தக உருவத்தில் வந்துவிட்டது. உங்களுக்கு எப்படி இருக்கிறதோ! என்னைப் பற்றிய வரையில் திருப்தி தான். நண்பர் ஜயராமனுக்கு எனது நன்றி.

ஜீன்- கிறிஸ்தோவ், கெஸ்டா பெர்லிங், கரமஸாவ் சகோதரர்கள் போன்ற ஓர் அதி அற்புதமான நாவலைச் சிருஷ்டித்துவிட வேண்டும் என்றுதான் ஆரம்பித்தேன். ஆனால் என்னால் எழுத முடிந்தது பசி என்ற இந்தச் சின்ன நாவல்தான். இது எவ்வளவு சிறியது, எப்படிச் சிறியது என்பதைப் படிப்பவர்கள் (ஏன், விமரிசகர்களும் கூடத் தான்) தாமே தெரிந்து கொள்ளுவார்கள். நான் ஏன் குறுக்கே நிற்கவேண்டும்?

இந்தக் கதையில் வரும் பாத்திரங்களும், சம்பவங்களும், இடங்களும் உண்மையில் யாரையும் எதையும் குறிப்பிடுவன அல்ல. கற்பனை தான். எந்தத் தமிழ்ப் பேராசிரியனுடைய எந்தத் தமிழ்க் கதையையோ அல்லது வேறு பாஷைக் கதையையோ உருட்டித் திரட்டி உருமாற்றி வைத்து விடவில்லை நான்.

சாமாவின் வாழ்க்கை இத்துடன் முடிந்து விடவில்லை. உண்மையில் அது அவனுடைய கல்யாணத்தில் தான் ஆரம்பமாகிறது.

.நா.சுப்ரமண்யம்

இந்த புத்தகம் பிடித்திருந்தால்....

மதிப்பிட நட்சத்திரத்தைச் சொடுக்கவும்!!!

சராசரி மதிப்பீடு 2.5 / 5. வாக்கு எண்ணிக்கை: 2

இந்தப் பதிவிற்கு மதிப்பீடு அளிக்கும் முதல் நபராக இருங்கள்!!!

One comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

🛒

உங்களுக்குப் பிடித்த புத்தகங்களை ஆன்லைனில் பெற !