பாண்டி நாட்டுக் கோவில்கள் பாலூர் கண்ணப்ப முதலியார்

12. திருச்சுழியில்

இது பாண்டிய நாட்டுப் பாடல் பெற்ற தலங்களுள் பன்னிரண்டாவது. இதற்குச் சுந்தரர் பாடிய பதிகம் ஒன்றே உளது. சாதாநந்த முனிவர் பூசித்துப் பேறுபெற்ற தலம். பார்வதி தேவியார் தம்மை இறைவர் மணக்க வேண்டிப் பூசித்த தலமும் ஆகும். கோவில் பெரிதாக உள்ளது. நடராஜர் உருவம் சிலையில் அமைந்ததைக் கண்டுகளிக்கலாம். இத்தலத்து இறைவர் திருமேனி நாதர் என்பதை இத்தலப் பதிகத்தும் குறிப்பிட்டிருப்பதால் காணலாம். இறைவர் திருமேனி நாதேஸ்வரர் என்றும், தேவியார் துணைமாலை அம்மை வனமாலை அம்மை என்றும் கூறப்பெறுவர்.

இத்தலத்தை விருதுநகர் இரயில் நிலையத்திலிருந்து 19 மைல் கடந்தேனும். திருப்பூவனத்திற்குத் தெற்கே 15 மைல் கடந்தேனும் சென்றால் அடையலாம்.

ஏழாம் திருமுறை பதிகம் 82

பண் – நட்டபாடை

1. ஊனுய் உயிர்புகலாய் அகல்இடமாய் முகில்பொழியும் வானுய் வரும்மதியாய் விதிவருவான் இடம்பொழிலின்
தேனு தரித்திசைவண் டினம்மிழற்றும் திருச்சுழியல்
நானு விதம்நினைவார் தமைநலியார் நமன்தமரே

(அ.சொ.) ஊன் – உடல், புகல் – அடைக்கலம், முகில் – மேகம், பொழிலின் – சோலையின், ஆதரித்து – விரும்பி, மிழற் றும் – ஒலிக்கும், நலியார் – துன்புறுத்தார், நமன்தமர் – இயம தூதர்.

2. கவ்வைக் கடல் கதறிக் கொணர்முத்தம் கரைக்கேற்றக் கொவ்வைத் துவர்வாயார் குடைந்தாடும் திருச்சுழியல் தெய்வத் தினைவழிபாடு செய்தெழுவார் அடிதொழுவார் அவ்வத் திசைக்கரசா குவாஅலரான் பிரியாளே

(அ.சொ.) கவ்வை – ஓசை,கொவ்வை – கோவைக்கனி, துவர் – பவளநிறமான, குடைந்து – மூழ்கி, ஆடும் – குளிக்கும், அலராள் – இலக்குமி.

இப்பதிகத்தில் சுந்தரர் திருச்சுழியில் நிலவளத்தை நன்கு புகழ்கின்றார். இங்குள்ள சோலைகளில் உள்ள தேனை விரும்பி வண்டுகள் இசை மிழற்றுகின்றன. இத் தலம் கடற்கரையைச் சார்ந்தது. இதன் அருகில் உள்ள கடல் முத்தைக் கரையில் சேர்க்கின்றன என்று கூறுவதால் அறியலாம். இத்தலத்தில் உள்ள மாதர்களின் இதழ் பவழம் போன்று சிவந்து இருக்கும் என்று குறிப் பிட்டதனால், அவர்களின் ஏனைய உறுப்புக்களின் இயல்பு நன்கு அமைந்திருக்கும் என்று கூறவேண்டுவதில்லை. இம் மாதர்கள் தினமும் குளித்து மூழ்கித் தம்மேனியைத் தூய்மைப் படுத்திக் கொள்வர்.

திருச்சுழியலை நினைக்கும்படி பலவிதமாகச் சுந்தரர் இப்பதிகத்தால் நினைவூட்டுகிறார். அப்படி நினைப்பதால் வரக்கூடிய பயன்களையும் கூறிமுடிக்கிறார். இறைவரைப் பலவிதமாக நினைப்பவரை இயமன் தூதுவர் துன்புறுத்தார். திருச்சுழியலில் தொண்டு புரிபவர் நல்லர்: அவர்கள் துன்பம் அடையாதவர் ஆவர். இத்தலத்துத் தெய்வத்தைத் தொழுது வழிபாடு செய்யவர் திருவடிகளைத் தொழுபவர். அவர் அவர்கள் இருக்கும் திசைகட்குத் தலைவர் ஆவர். அவர்களைத் திருமகள் விட்டுப் பிரியாள், நற்கதியுள் செல்வர். ஏத்துவது கடமையும் ஆகும். மும்மலம் காரணமான பாசப் பிறப்பு ஒழிய வேண்டின், மலராலும், தூபத்தாலும் போற்றி, தியானித்து வருக. அதனால் புகழும் தவமும் ஆகும், அறிவுத் திறமும் ஏற்படும். திருவடிகளை நினைப்பவர் தீவீனை தீர்தல் எளிது என்பன இவர் இப்பதிகத்தின் மூலம் அறிவிக்கும் அறவுரைகளாகும்.

சமணர்களைப் பற்றி பலவாகக் கூறாமல் குண்டாடிய ‘சமண் ஆதர்கள்’ என்று கூறிமுடித்தமையால் ஆதர்கள் நகைப்புக்கு இடமானவர் என்பது புலனாகிறது. இப்பதிகத்தைப் பாடத் துயரே இல்லாமற் போகும்.

அருந்தொடர்கள்

“நானாவிதம் நினைவார் தமை நலியார் நமன் தமரே”,

“தொண்டே செய வல்லார் அவர் நல்லார் துயர் இலர்”,

“மெய்வைத்து அடி நினைவார் வினை தீர்தல் எளிது.”

இந்த புத்தகம் பிடித்திருந்தால்....

மதிப்பிட நட்சத்திரத்தைச் சொடுக்கவும்!!!

சராசரி மதிப்பீடு 0 / 5. வாக்கு எண்ணிக்கை: 0

இந்தப் பதிவிற்கு மதிப்பீடு அளிக்கும் முதல் நபராக இருங்கள்!!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

🛒

உங்களுக்குப் பிடித்த புத்தகங்களை ஆன்லைனில் பெற !