பாண்டி நாட்டுக் கோவில்கள் பாலூர் கண்ணப்ப முதலியார்

14. திருநெல்வேலி

இது பாண்டிய நாட்டுப் பாடல் பெற்ற தலங்களில் பதினான்காவது. இவ்வூரில் வேதசன்மர் என்ற பக்தர் ஒருவர் இருந்தார். அவர் சிவபெருமானுக்கு நிவேதனம் செய்ய நெல்லைக் கட்டி வைத்திருந்தார். அதுபோது இவ்வூரில் வெள்ளம் புரண்டது. அவ்வெள்ளத்தில் இந்நெல் அடித்துச்செல்லாதபடி இறைவர் வேலியிட்டுக் காத்தனர். இக் காரணம் பற்றி இத்தலம் நெல்வேலி எனப்பட்டது. இங்குள்ள இறைவர் மூங்கில் அடியில் தோன்றியவர். இதன் காரணமாக இத்தலம் வேணுவனம் என்றும் கூறப்படும்.

தாருகாவனம், பிரமவிருத்தபுரம் என்றும் இத்தலம் கூறப் படும். பிரம்மா, விஷ்ணு, அகஸ்தியர் இத்தலத்து இறைவரைப் பூசித்துப் பேறுபெற்றனர். இறைவரது பிட்சாடணத் திருவுருவம் இங்கு கண்டு களித்தற்குரியது. இதனை முதற் பிரகாரத்தின் மேற்குப் பக்கத்தில் காணலாம். இறைவர்க்குரிய ஐந்து சபைகளுள் ஒன்றான தாமிரசபை இங்குத்தான் உண்டு. இது பெரிய சிவாலயம். நடராஜர் திருவுருவமும் பெரியது.

இத்தலத்தில் நடைபெறும் பிரம்மோற்சவம் ஆனி மாதத்தில் ஆரம்பமாகும். 45 நாட்கள் நடைபெறும்; 9-ஆம் நாள் உற்சவத்தில் அம்பிகை கிருஷ்ண வேடம் கொண்டு காட்சி அளித்தல் பார்க்கத்தக்கது. நெல் கொண்டு காட்சி அளித்தல் பார்க்கத்தக்கது. நெல் வேலி கட்டின திருவிளையாடல் தை மாதம் நடைபெறும். திருக்கல்யாண மகோற்சவம் ஐப்பசிமாதம் நடக்கும். வசந்தோற்சவமும் இத்தலத்தில் பார்க்கத் தக்கதாகும். இத்தலத்தில் உள்ள கற்றூண்களுள் சிலவற்றைத் தட்டினால் இசை முழக்கம் வெளிவரும். நடுமண்டபத்தில் பாண்டியர்களின் உருவங்களைக் காணலாம். சுவாமி சந்நிதானமும் அம்மன் சந்நிதானமும் அடுத்து அடுத்து அமைந்துள்ளன. சுவாமிகோயிலில் முன்று கோபுரங்களும், அம்மன் கோயிலுக்கு மூன்று கோபுரங்களும் இடையில் ஒரு கோபுரமும் உண்டு. அம்மன் கோயில் கோபுரம் உயர்வுடையது. ஆனால், இறைவர் கோயில் கோபுரம் அகற்சியுடையது. இத்தலத்தில் 1000 கால் மண் டபம் உண்டு, கோயிலுக்குள் பெரிய குளம் ஒன்று உண்டு. வசந்த மண்டபமும் இங்கு உளது. சுவாமி கோயிலில் உள்ள மண்டபத்தில் இரண்டு தூண்கள் உள்ளன. அவை 100 தூண்களாக வெட்டப்பட்டிருப்பதைக் கண்டு களிக்கவும். இங்கு சந்தன மரத்தாலாகிய நடராஜரைக் காணலாம். இவர்க்கு என்றும் சந்தனக் காப்பு உண்டு. இத்தலத்தின்மீது திருஞானசம்பந்தர் பாடிய பதிகம் ஒன்று உண்டு.

இத்தலத்து இறைவர் நெல்லையப்பர், வேணுவன் நாதர், அனவரதநாதர், சாலிவாடீஸ்வரர் என்றும் இறைவியார் காந்திமதியம்மையார் என்றும், பிள்ளையார் நல்ல பொல்லாப் பிள்ளையார் என்றும் பெயர் பெறுவர். இத்தலத்துத் தீர்த்தம் தாமிரவருணி, சிந்துபூந்துறை, பொற்றாமரை. இத்தலம் திருநெல்வேலி டவுன் ஸ்டேஷனிலிருந்து அரைக் கல் தொலைவில் உள்ளது. ஜங்ஷனிலிருந்தும் போகலாம்.

குறிப்பு: இத்தலத்திலிருந்து பஸ் மார்க்கமாகவோ ரயில் மாக்கமாகவோ திருச்செந்தூர் என்னும் முருகப் பெருமாரது திருத்தலத்தையும் அடைந்து தரிசிக்கலாம். குறுக்கு துறையில் சுப்பிரமணியர் கோயில் சிறப்புடையது.

தாமிரவருணியில் இன்பமாகக் குளித்து மூழ்கலாம். பலநாள் மூழ்கக் கொடு நோயும் நீங்கும்.

மூன்றாம் திருமுறை பதிகம் 92

பண் – சாதாரி

மருந்தவ மந்திரம் மறுமை நன்னெறிஅவை மற்றும்எல்லாம் அருந்தூர் கெடுமவர் நாமமே சிந்தைசெய் நல்நெஞ்சமே பொருதுதண் புறவினில் கொன்றைபொன் சொரிதரத் துன்று பைம்பூஞ்
செருநிசெம் பொன்மலர் திருநெல்வேலி யுறைசெல்வர் தாமே

(அ . சொ.) மறுமை – மறுபிறப்பிற்குரிய, நெறி – வழி நாமம் திருப்பெயர், பொன் – மகரந்தப் பொகளை. புறவு-காடு. செருந்தி – ஒருவகை மலர்ச்செடி.

பெருதண் மாமலர் மிசைஅயனவன் அனையவர் பேணுகல்வித்
திருமா மறையவர் திருநெல்வேலியுறை செல்வர் தம்மைப் பெர்ந்து நீர்த்தடம் மல்குபுகலியுள் ஞானசம்பந்தன் சொன்ன அதமிழ் மாலைகள் பாடி ஆடக்கெடும் அருவினையே

(அ. சொ.) தண்மலர்மிசை – குளிர்ந்த சிறந்த தாமரை மலரில், அயனவன் – பிரமன். அனையவர் – போன்ற அந்தணர், பேணு – போற்றும், மறையவர் – வேதம் உணர்ந்த அந்தணர், தடம் – குளம், மல்கு – மிகும், புகலியுள் – சீர்காழியுள், அருவினை – கொடுவினை.

இப்பதிகத்தில் முதல்பாடல் தம்மனத்திற்கு அறிவுறுத்தும் முறையில் அமைந்துள்ளது. இறைவர் திருநாமங்கள் மருந்தாகவும், மந்திரமாகவும் மறுமைக்கு நல்வழிகாட்டுவனவாகவும் துன்பங்களைக் கெடுப்பாவாகவும் உள்ளன. ஆதலின் அவன் திருப்பெயர்களையே கூறுக என்பதே நெஞ்சுக்குக் கூறும் அறவுரையாகும்.

திருநெல்வேலியின் இயற்கை வளம் இனிது பேசப்படுகிறது. காடுகள் கொன்றை மலர்கள் மலர்ந்து, கரந்தப் பொடிகள் சிந்தக் காணப்படும், செருந்திச் செடிகள் பொன் போல மலர்ந்து காணப்படும். இத்தலத்து இறைவர் பெருஞ் செல்வர் என்பது இப்பதிகம் கூறும் குறிப்பாகும். இஃது உண்மையே. தென்றல் காற்று தாழை மகரந்தில் படிந்து அதன் மணத்தையும் கொண்டு இங்கு வீசிக் கொண்டிருக்கும். சோலைகள் மரஞ் செடி அடர்ந்து காணப்படும். இங்குள்ள மாடமாளிகைகள் உயர்ந்து அவற்றின் மீது நாட்டப்பட்ட கொடிகள் சந்திர மண்டலம் அளவு பறந்து சந்திரனைத் தொட்டுக்கொண்டு இருக்கும். இத்தலம் அங்குள்ளவர்களால் மட்டும் புகழ்ந்து பேசப்படுதற்குரியது அன்று. திசைகள் எல்லாம் புகழ்ந்து பேசப்படும் பெருமை சான்றது. சோலைகளில் குரங்குகள் பாய, அப்படிப் பாய்வதனால் மலர்த் தேன் சிந்தும் வளமுடையது. இத்தலத்தில் மாதந்தோறும் திருவிழா நடந்த வண்ணம் இருக்கும் என்பது “திங்கள் நாள் விழாமல்கும்” என்பதால் அறியக்கிடக்கிறது. இங்கு சோலைகள் ஆடிக்கொண்டிருக்கும், சந்திரன் தவழ்ந்து கொண்டிருப்பான். இங்குள்ள அந்தணர்கள் வேதம் நன்குணர்ந்து கல்வி கேள்விகளில் சிறந்து பிரமனுக்கு நிகராக விளங்குவர்.

இத்தலத்துப் பதிகத்தைப் பாடப் பாவம் ஒழியும்.

முற்றும்.

★ ★ ★

இந்த புத்தகம் பிடித்திருந்தால்....

மதிப்பிட நட்சத்திரத்தைச் சொடுக்கவும்!!!

சராசரி மதிப்பீடு 0 / 5. வாக்கு எண்ணிக்கை: 0

இந்தப் பதிவிற்கு மதிப்பீடு அளிக்கும் முதல் நபராக இருங்கள்!!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

🛒

உங்களுக்குப் பிடித்த புத்தகங்களை ஆன்லைனில் பெற !