தொலைவிலுணர்தல் மறைமலையடிகள்

இரண்டாம் பதிப்பின் முகவுரை

இந்நூலின் முதற்பதிப்பு முகவுரையிற் கண்டபடி தொலைவிலுணர்தல் என்னும் இத்தமிழ்நூல் திருவள்ளுவர் ஆண்டு 1942-இல் (கி.பி1911-இல்) இயற்றத் துவங்கி, இடை யிடையே பல ஆண்டுகளாக எழுதி அச்சிடப்பட்டு 1935-ஆம் ஆண்டில் (கி.பி. 1966-இல்) நூல் வடிவில் வெளிவந்ததாகும்.

அதன்பின் இவ்விரண்டாம் பதிப்பு, கி.பி. 1939 இல் துவங்கிய மேல் கீழ்நாட்டுக் கொடும் பெரும் போருக்குமுன் பல்லாண்டுகள் இடையிடையே அச்சிடப்பட்டு, அப்போர் முடிந்ததற்குப்பின் இப்போதுதான் வெளிவரலாயிற்று.

முதற்பதிப்பின்கண் இருந்த வடசொற்கள் முற்றுங்களைந் தெடுக்கப்பட்டு இவ்விரண்டாம் பதிப்பு முழுதுந் தூய தனித் தமிழ் உரைநடையில் ஆக்கப்பட்டிருக்கின்றது. முப்பத்தைந்

தாண்டுகளுக்குப்பின் இந்நூலின் 2-ஆம் பதிப்பை வெளியிடுதற்கு அருள்சுரந்த எல்லாம் வல்ல இறைவன் திருவடிப்போதுகளுக்கு அடியனேன் புல்லிய வணக்கம் உரியதாகுக!

மறைமலையடிகள்

இந்த புத்தகம் பிடித்திருந்தால்....

மதிப்பிட நட்சத்திரத்தைச் சொடுக்கவும்!!!

சராசரி மதிப்பீடு 0 / 5. வாக்கு எண்ணிக்கை: 0

இந்தப் பதிவிற்கு மதிப்பீடு அளிக்கும் முதல் நபராக இருங்கள்!!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

🛒

எங்களது இணைப்பைப் பயன்படுத்தி அமேசானில் பொருட்கள் வாங்கி ஆதரவு அளியுங்கள்!