
அகிம்சா மூர்த்திகள்
கலைஞர் மு. கருணாநிதி
வெற்றி நமக்கே!
ஜாதி வெறியர்கள்- வகுப்பு வாதிகள் – நாட்டைக் கெடுக்கும் நாசகாரர்கள்- சமுதாயப் புல்லுருவிகள்- அராஜக வாதிகள்- அக்கிரமக்காரர்கள்- என்றெல் லாம் அர்ச்சனைகள் நடைபெற்றன. பார்ப்பனர்-பார்ப் பனரல்லாதார் என்ற பேதம் கற்பிப்பது குறுகிய நோக்கம், குருட்டுத்தனம், கொடுஞ் செயல் எனக் கூறப் பட்டது. அப்படிக் கூறியவர்களின் வரிசையிலே முன்னணித் தலைவராக இருந்தவர் பண்டிதநேரு. அவருடைய இன்றைய நிலைபற்றி ‘மெயில்’ பத்திரிகை தலையங்கம் தீட்டுகிறது, “ஜாதி வெறியர், வகுப்புவாதிகள் என்று பத்து வருடங்களுக்கு முன்பு யாரை பண்டித நேரு ஏசினாரோ, அப்படிக் குற்றம் சாட்டப் பட்டவர்கள் பக்கத்திலேயே நின்று இன்று பேசுகிறார்” என்பதாக!
வகுப்புவாரி உரிமை கேட்பதை வகுப்பு வாதம் என்று பிரசாரம் செய்கின்றன ஆரிய ஏடுகள்.
ஜாதியின் பெயரால் உரிமை கேட்பது ஜாதியை வளர்ப்ப தாகாதா என்று கிண்டல்கள் வாரி இறைக்கப்படு கின்றன. அதற்கெல்லாம் நேரு பதில் கூறியிருக்கிறார். நம்முடைய குரலிலேயே பேசியிருக்கிறார், உள்ளம் எப்படியோ தெரியாது. குரல் நம்முடையதுதான். கருத்து நாம் சொன்னதுதான். ஜாதி உணர்ச்சிகள் ஒழிக்கப்பட வேண்டியதும் ஜாதிப் பிரிவினைகள் அழிக்கப்பட வேண்டியதும் நம்முடைய முக்கிய லட்சியம். அந்த லட்சியம் அழிந்து விட்டது என்று அர்த்தமல்ல. காலைக் கதிரவனைக் காண- உதயத்தின் எழிலை ரசிக்க கடற்கரைக்குப் போகிறோம். கடற்கரை நம் இருப்பிடத்திலிருந்து பத்து மைல் தொலைவில் இருந் தால் இருட்டிலேயே: ஊரை விட்டுப் புறப்பட்டு வீடு கிறோம். கதிரவனைத்தான் காணப் போகிறோமே என்று இருட்டு நேரத்தில் கையில் விளக்கில்லாமல் போகமுடியுமா? கதிரவனைக் கண்ட பிறகு வேண்டுமானால் விளக்குத் தேவையில்லை. இதேதான் வகுப்பு வாரி உரிமையிலும் நாம் சொன்னது. ஐ. தி கள் ஒழிய வேண்டுமென்ற நோக்கத்திலே போய்க் கொண்டிருக் கிறோம். தற்போதைய சூழ்நிலையில் பிற்படுத்தப் பட்டுள்ள சமூகத்தினருக்கு சில தனி வசதிகள் தேவை என்கிறோம், இருட்டிலே விளக்குத் தேவை என்பதைப் போல ! இப்படித் தனி வசதிகள் கேட்பதால் ஜாதியை ஒழிப்பது என்ற கதிரவனைக் காண்பது போன்ற கொள்கையிலிருந்து நாம் நழுவி விட்டதாக அர்த்தமல்ல! இதைத்தான் பண்டித நேரு பேசியிருக்கிறார்.
சமூக நீதி சாய்க்கப்படுகிறது என்பது கண்ட திராவிடப் பெருங்குடி மக்கள் நடத்திய கிளர்ச்சியால்- வழங்கிய எச்சரிக்கையால்- இந்தத் திருத்தம் தோன்றி யது என்பதும், நேரு நம் கருத்துக்கள் சிலவற்றைப் பேசினார் என்பதும் மறுக்க முடியாத உண்மைகள். முதலிலே வந்த திருத்தங்கள் கூட நமக்குத் திருப்தியளிக்கக் கூடியதாக இல்லை. திருத்தம் தித்திக்குமா என்று சந்தேகமுற்றோம். 16-வது ஷரத்தும் 29-வது ஷரத்தும் நம் எண்ணத்துக்கு தடையாயிருக்குமென்று கருதினோம். இப்போது செலக்ட் கமிட்டி அந்த இரண்டு ஷரத்துக்களும் சமூகத்துறையில் அல்லது கல்வி வழியில் பிற்பட்ட நிலையிலுள்ள வகுப்புகளுக்கும் சர்க்கார் தனி வசதி அளிக்க தடையாயிருக்கக் கூடா தென்று குறிப்பிட்டிருக்கிறது. இதை நோக்கும் போது ‘நம்பிக்கை நட்சத்திரம்’ உதயமாவதாக, விடி வெள்ளி முளைப்பதாக நமக்குத் தோன்றுகிறது. இழந்த நமது உரிமை புத்துயிர் பெறுவது போன்ற உணர்ச்சி ஏற்படுகிறது. பொறுத்திருந்ததற்குப் பயன் ஏற்படுவது போன்ற ஒளி தோன்றுகிறது. வெத்து வேட்டுகள் வேதனை தீர்க்க உதவாது- விளைவுகளை அமைதியோடு கவனிப்போம் என்று நாம் சொல்லி வந்த விளக்கங்களுக்கு வெற்றி மலர்வது போலத் தெரிகிறது. நமது சக்தி மதிப்பு வாய்ந்தது என்பதை உணர்த்துகிறது திருத்தமும், திருத்தம் பற்றிய நேரு வின் பேச்சும். திராவிடஸ்தான் பிரச்னை நேருவை இப்படிப் பேச வைத்திருக்கிறது.
இன்னும் சிறிது நாளில் திராவிடஸ்தானைப் பற்றிய பேச்சையே நேரு பேச வேண்டிய நிலை வரத்தான் போகிறது.வீரர்களே! திராவிடக் காளையரே! வீணுக்கு அழிவதல்ல நம் வீரம் ! விவேக வழி சென்றிடுவோம்! வெற்றி மாலை சூடிடுவோம்! எட்டுத் திக்கும் இலட்சியக் குரல் எழுப்பிடுவோம் ! இறுதி வெற்றி நமக்கே !
“மாலை மணி“ (1-6-’51)



