கவிமணி தேசிகவிநாயகம் பிள்ளை
சுத்தானந்த பாரதியார்

12. கல்வெட்டு

தேசிகவிநாயகம் பிள்ளைக்குக் கடவுளன்பு அதிகம்; பெரியார்களிடமும் வணக்கம் உண்டு. ஆனால் மூடக் கொள்கைகளில் அவருக்கு நம்பிக்கை கிடையாது. நாகர் கோயில் ‘டவுண் கிளப்பு’க்குத் தெற்கே ஓர் ஆபாசமான இடம் இருந்தது. மூக்கைப் பொத்திக் கொண்டுதான் அங்கே செல்ல வேண்டும். ஒரு நிமிஷங் கூட அங்கே நிற்கமுடியாது. அந்த இடத்தில் ஒரு நட்டகல் இருந் தது. அதைப் பாமரர் ‘இசக்கியம்மை’ என்று பயந்து எண்ணெய் தடவி, நீராட்டி, மலர் சூட்டி வணங்கி வந்த னர். அந்த இடத்தில் ஆளே நிற்க முடியாது! அம்மன் எப்படி யிருக்கும்? இக் கல்லைப் பற்றி வித்துவான் உமை தாணுப் பிள்ளை, தேசிகவிநாயகம் பிள்ளையிடம் சொன்னார்.

பாட்டையா, உடனே தடியூன்றிக் கிளம்பினார்; நாற்றத்தைச் சகித்துக்கொண்டு எப்படியோ அங்கே நின்று கல்லை ஊன்றிப் பார்த்தார்; “ஆ! கல்வெட்டு’ என்றார். கல்வெட்டுகளில் தேவிக்கு நல்ல பயிற்சியுண்டு. உடனே தேவி, கல்லிற் பதிந்த மெழுக்கையும் அழுக்கையும் சுரண் டினார். பார்த்தவர், “ஐயா, இசக்கி; தொடாதீர்” என் றார்கள். தேவி, “இசக்கி யில்லை ஐயா; இது இராஜராஜ சோழன், அல்லது ஒரு சோழனைப் பற்றிய கல்வெட்டு ” என்று கண்டு மகிழ்ச்சியுடன் படித்துச் சொன்னார்! அந்தக் கல்லெழுத்துக்கள் தலையெழுத்துப் போலிருந்தும், தேவி ஊன்றிப் பார்த்துப் படித்துவிட்டார். அதில்

“அஞ்சினான் புகலிடமாக ” என்ற வரி சரித்திரப்பொருள் நிரம்பியதா யிருந்தது. இதைப் பற்றிய ஆராய்ச்சி யொன்று “தமிழன்” பத்திரிகையில் வெளிவந்தது.

இந்த புத்தகம் பிடித்திருந்தால்....

மதிப்பிட நட்சத்திரத்தைச் சொடுக்கவும்!!!

சராசரி மதிப்பீடு 0 / 5. வாக்கு எண்ணிக்கை: 0

இந்தப் பதிவிற்கு மதிப்பீடு அளிக்கும் முதல் நபராக இருங்கள்!!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

🛒

உங்களுக்குப் பிடித்த புத்தகங்களை ஆன்லைனில் பெற !