கவிமணி தேசிகவிநாயகம் பிள்ளை
சுத்தானந்த பாரதியார்

13. தேவியின் கொள்கைகள்

தேசிகவிநாயகம் பிள்ளை பழம்பெரும் புலவர் ; பழைய நன்மைகளை விரும்புவார்; புதிய நன்மைகளையும் போற்றுவார். மூடக் கொள்கைகளை அவர் பலமாகக் கண்டிக்கிறார்.

பூவும் வேண்டாமே பழமும்பொரியும் வேண்டாமே ;
மேவும் உள்ளன்பேதேவிவிரும்பும் நல்லமுதாம்.

குருடர் கூடிநின்றுகற்பூரம் கொளுத்திக் காட்டுவதால் சிறிதும் நன்மையுண்டோ?–இதனைச்சிந்தனை செய்வாயே!

கூவிப் பறக்குமொருகிளியினைக் கூண்டில் அடைத்து வைத் [தால்,
தேவர் உலகமெல்லாம்அதுசினத்தீயை எழுப்பிடுமே !

தேரைகள் ஓடையிலே இனத்தொடு சேர்ந்து மிதக்கையிலே, காரைகள் வந்திடவே பாவிமனம் நைந்து குழைந்ததடி!

சாதி சாதியென்று நிதம்சண்டை போட்டு மண்டைகளை மோதி மோதி யுடைப்பதொரு மூடச்செயலென் றுணரீரோ?

கல்லைப் பிசைந்து கனியாக்கும் செந்தமிழில் சொல்லை மணியாகத் தொடுத்தவனும் நீதானோ?

ஆலயங்க ளேனையா? அபிஷேகங்கள் ஏனையா? கோலங்கொடிக ளேனையா? கொட்டுமுழக்க மேனையா?

பாலும் பழமும் வைத்துநிதம் பணிந்துநிற்ப தேனையா? சீலம்பேணும் உள்ளத்தைத் தெய்வம் தேடிவாராதோ?’

ஆம் என்று நம் உள்ளம் தேவிக்கு நன்றி கூறுகிறது!

இந்த புத்தகம் பிடித்திருந்தால்....

மதிப்பிட நட்சத்திரத்தைச் சொடுக்கவும்!!!

சராசரி மதிப்பீடு 0 / 5. வாக்கு எண்ணிக்கை: 0

இந்தப் பதிவிற்கு மதிப்பீடு அளிக்கும் முதல் நபராக இருங்கள்!!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

🛒

உங்களுக்குப் பிடித்த புத்தகங்களை ஆன்லைனில் பெற !