
ஆனந்தக் குமரன்
ரா. பி. சேதுப்பிள்ளை
5. நச்சுக்கண் நாகம்
பாரதநாட்டில் பலவகைப்பட்ட நாகங்கள் வாழ்ந்து வருகின்றன. முற்காலத்தில் நாகத்தைப் போற்றி வழிபட்ட மாந்தரும் உண்டு. சைவம் வைணவம் என்னும் இருசமய வழிபாட்டிலும் நாகம் இடம் பெற்றிருத்தலைக் காணலாம். செம்பொருளாய சிவபெருமான் நாகத்தை நல்லணியாகக் கொண்டு விளங்குதலால் பன்னகாபரணன் என்னும் பெயர் பெற்றான். ஆயிரம் தலையுடைய நாகத்தைத் திருமால் பாயலாகக் கொண்டு பாலாழியிற் பள்ளிகொண்ட பான்மையால் பன்னக சயனன் என்னும் பெயர் பெற்றான்.
நாகத்தின் நஞ்சு பெரும்பாலும் அதன் பற்களிலேயே அடங்கி நிற்குமென்பர். நச்சுப் பற்களால் நாகம் தீண்டும்பொழுது அவற்றிலுள் ள நஞ்சு குருதியிற் கலந்து உயிரணுக்களைக் கொன்றுவிடுகின் றது. இத்தகைய நஞ்சை எயிற்றிலுடைய நாகத்தை ‘அழல்வாய் நாகம்’ என்று பழந்தமிழ் நூல்கள் குறிக்கக் காணலாம். முற்காலத் தில் சோழநாட்டின் தலைநகராய் விளங்கிய பூம்புகார் நசுரத்தில் அமைந்திருந்த ஐம்பெரு மன்றங்களுள், நாகத்தின் நஞ்சினைப் போக்கும் மன்றமும் ஒன்றாக விளங்கிற்றென்று சிலப்பதிகாரம் கூறுகின்றது.
“அழல்வாய் நர்கத் தாரெயி றழந்தினர்
சுழலவந்து தொழத் துயர் நீங்கும்
நிழல்கால் நெடுங்கல் நின்ற மன்றம்“
என்று இளங்கோவடிகள் அம்மன்றத்தின் மாண்பினை எடுத்துரைத்தார். நாகத்தின் நஞ்சினால் நலிவுற்றோர், முறையாக வலம்வந்து தொழுதமைந்தநிலையில் துயர் நீங்கி இன்புறுதற்குச் சாதனமாய் நெடுங்கல் மன்றம் புகார் நகரத்தில் நின்றதென்பது இதனால் நன்கு விளங்கும்.
இங்ஙனம் தொன்றுதொட்டு இந்நாட்டில் வாழ்ந்துவரும் நாகங்களுள் நச்சுக்கண் நாகமும் ஒன்றாகும். ஏனைய நாகங்களைப்போல் நஞ்சினை எயிற்றிலடக்காது கண்ணிலடக்கிய காரணத்தால் அந்நாகம் திட்டிவிடம் என்னும் பெயர் பெறுவதாயிற்று. அப்பாம்பின் கண் ணெதிர்ப்பட்டோர் இறந்துபடுதல் ஒருதலையென்று பழந்தமிழ் நூல் கள் கூறுகின்றன. முந்தைப் பிறப்பில் மணிமேகலையின் கணவனாயிருந்த இராகுலன் என்பவன் திட்டிவிடமென்னும் நச்சுக்கண் நாகத்தின் நோக்காலேயே உயிரிழந்தானென்று மணிமேகலைக் காவியம் கூறுகின்றது.
நச்சுக்கண் நாகம் பெரும்பாலும் பாலைவனங்களிலேயே வாழு மென்று அறிந்தோர் கூறுவர். காணும் கண்ணையும், கருதும் மனத்தையும், நவிலும் நாவையும் சுட்டெரிக்கவல்ல தாடகை வதிந்த பாலைவனத்தில், கண்ணிற் கனலமைந்த கடுநாகம் வாழ்ந்ததென்று கம்பர் கூறுமாற்றால் அந்நாகத்தின் தன்மை நன்கு விளங்கும். கற்பமைந்த மாதரை முறையின்றிக் காதலிக்கும் ஆடவர் திட்டிவிடத்தின் கண்ணெதிர்ப்படும் உயிர்களைப் போன்று எரிந்து வீழ்வரென்று தமிழ்க்கவிஞர் கற்பின் பெருமையை அணிந்துரைப்பாராயினர். கற்பினுக் கணியாய சீதையை மையலால் நோக்கிய இலங்கை மன்னன் அந்நங்கையின் கற்பழலால் அழிவுறுதல் திண்ணம் என்றுணர்ந்த கும்பகர்ணன், தவறிழைத்த தன் தமையனை நோக்கி,
“திட்டியின் விடமன்ன கற்பின் செல்வியை விட்டிலை யோஇது விதியின் வன்மையே“
என்று இரங்கிக் கூறுமாற்றால் இவ்வுண்மை இனிதறியப்படும்.
இன்னும், இணையற்ற வீரம்வாய்ந்த தன் கணவனைக் கொல்லுதற்கு எழுந்த கொடு நஞ்சாகிய சீதையின் திறமறிந்த மண்டோதரி,
“அஞ்சினேன் அஞ்சி னேனிச் சீதையென் றமிர்தாற் செய்த
நஞ்சினால் இலங்கை வேந்தன் நாளையித் தகைய னன்றே”
என்று இறந்து பட்ட இந்திர சித்தனை நோக்கியநிலையில் மேல்வரும் தீமையை நினைந்து புலம்புவதும் ஈண்டு அறியத்தக்கதாகும். அமுதம் போன்ற மிதிலை நங்கையின் நலத்தினை நச்சிய இலங்கை நாதன், அவளிடம் அமைந்த கற்பெனும் நஞ்சினால் அழிதல் ஒருதலை யென்றுணர்ந்து துணுக்குற்ற மண்டோதரி அத்திருமகளை அமிர் தாற் செய்த நஞ்சாகக் கருதினாள்.
இத்தகைய தெய்வக் கற்புவாய்ந்த தேவியைக் காதலித்து ஆவி பிழந்து மண்மீது கிடந்த தன் அண்ணனை நோக்கி,
“உண்ணாதே உயிருண்ணா தொருதஞ்சு சனகியென்னும் பெருதஞ் சுன்னைக் கண்ணாலே நோக்கவே போக்கியதே உயிர்நீயும் களப்பட் டாயே எண்ணுதேன் எண்ணியசொல் இன்றினித்தான் எண்ணுதியோ எண்ணி [லாற்றால் அண்ணாவோ அண்ணாவோ அசுரர்கள்தம் பிரளயமே அமரர் கூற்றே“
என்று விபீஷணன் வருந்திப் புலம்புவானாயினான். ஆலகாலமனைய கொடிய நஞ்சும் உண்டாரைக் கொல்லுமேயன்றிக் கண்டாரைக் கொல்லும் தகையதன்று; திட்டிவிடம் போன்று கண்டார் உயிர் கவரும் திறம்வாய்ந்த சீதையின்பால் அமைந்த பெருநஞ்சு போக்கரிய அரக்கர் கோன் ஆவியைப் போக்கியதே என்று இலங்கை அறிஞன் வாயிலாகக் கம்பர் அருளிய கவியில், திருமகளாய சீதையை நச்சுக் கண் நாகத்திற்கு ஒப்பிட்டிருத்தல் நன்கு விளங்கும்.
தீயோரை அழிக்கும் கற்பெனும் அழல் தன்பால் அமைந் திருந்த தன்மையைச் சீதையும் இனிதறிந்திருந்தாள்.
“வரிசிலை ஒருவ னல்லால் மைந்தரென் மருங்கு வந்தார் எரியிடை வீழ்ந்த விட்டி லல்லரோ“
என்று சீதை வெகுண்டு கூறும் மொழிகளில் நிறையமைந்த மாதர் திறம் சிறந்து இலங்குவதாகும். இங்ஙனம் முறையிகந்த ஆடவரை அழிக்கும் திறல் கற்புடைய மாதரிடம் அமைந்திருந்ததாலேயே தமிழ் நாடு கற்புநெறியைத் தெய்வநெறியாகக் கொண்டு வழிபடுவதாயிற்று. நச்சுடை வடிக் கண்மலர் நங்கையரை வழிபட்ட பெருமை பழந் தமிழ்நாட்டுக்குச் சிறப்பாக உரியதாகும். கற்பின் ஆற்றலால் மதுரை மாநகரையும் மாறனையும் எரித்தழித்த கண்ணகியென்னும் கற்பின் செல்விக்கு வஞ்சிமாநகரில் அழகிய கோட்டம் அமைத்துப் பண்டைத் தமிழ்மன்னரும் மக்களும் வணங்கிய செய்தி இதற் கொரு சான்றாகும்.



