
வாழ்க்கை இன்பம்
கா. சுப்பிரமணியப் பிள்ளை
9. தோல்
உடம்பின் எல்லாப் பகுதிகளையும் மூடிப் பாதுகாக்கும் இயற்கைப் போர்வையாயமைந்தது தோலாகும். தோலின் மேலடுக்கு ஒன்றும், உள்ளடுக்கு ஒன்றும் இருப்பதைப் பலர் அறியாமலிருக்கலாம். உள்ளடுக்கில் மிகச் சிறிய வியர்வைக் கோளங்கள் உள்ளன. அவற்றுள் ஒவ்வொன்றிலிருந்தும் ஒவ்வொரு சிறு குழாய் மேற்பாகத்திற்கு வியர்வை நீரைக் கொண்டு போகின்றது.
வியர்வை நீர் காற்றில் ஆவியாகிக் கலக்கின்றது. அதில் உப்பும் உடம்பிலுள்ள அழுக்குப் பொருள்களும் இருக்கும். வியர்வைத் துவாரங்கள் அடைபட்டால், உடம்பி லுள்ள அழுக்குகள் வெளியே போவதற்கு வழி இல்லாமல், உடம்பைக் கெடுக்கும் நச்சுப் பொருள் களாய்விடும். வியர்வையிலுள்ள அழுக்குப் பொருள் கள் கெட்ட நாற்றத்தை உண்டாக்குவதுடன் வியர் வைத் துவாரங்களையும் அடைத்தல் கூடும். ஆதலால், உடம்பை நன்றாகக் கழுவிச் சுத்தம் செய்தல் வேண் டும். உடைகளை அடிக்கடி மாற்றி உடுத்திக் கொள்ளுதல் வேண்டும்.
ஒவ்வோர் உரோமத்தின் அடியிலும் எண்ணெய் உண்டாவதற்குரிய கோளம் உண்டு. ஒவ்வொரு சிறு அக்கோளத்திலிருக்கும் எண்ணெய் தோலின் மேல் பரவித் தோலின் வறட்சியைத் தடுக்கிறது.
அவ்வெண்ணெயோடு காற்றிலுள்ள புழுதி கலந்தால், கெடுதியை விளைக்கும். ஆதலால், சீயக்காய், சோப்பு, வெந்நீர் முதலியவற்றால் அதனைக் கழுவி விடுவது நல்லது. அந்த எண்ணெயில் உண்டாகும் புழுக்களினால் மயிர் முளையாது. மழமழப்பு ஏற்படுகின்றது. சிலர் அப்புழுக்களைப் போக்குவதற்கு நனைந்த உப்பு முதலிய சில மருந்துப் பொருள்களைப் பயன்படுத்துகிறார்கள்.
பரிச உணர்ச்சிக்குக் காரணம் தோலிலுள்ள நரம்புகளுள் ஏதாவது அதனைத் தொடுதலை மூளைக் குத் தெரிவிப்பதேயாகும். அந்நரம்புக்கும் மூளைக் கும் சம்பந்தமில்லாமற்போனால், ஒரு பொருள் சூடாயிருப்பதையும் குளிர்ச்சியாயிருப்பதையும் நாம் உணர முடியாது. குருடர்க்கும் பரிச உணர்ச்சியை நன்கு பயிற்றுவதால் அவர்கள் கடிதத்தின் மேலெழுந்து தோன்றும் எழுத்துகளை வாசிக்கக் கூடியவர்களாகின்றார்கள்.
நகங்கள் விரல்களைப் பாதுகாக்கின்றன. ஆனால், அவை அழுக்குச் சேர்ந்த நோய்ப் பூச்சிகள் தங்கு வதற்கும் இடமாகுமாதலால், நாம் உணவு கொள் ளத் தொடங்குமுன் நன்றாக நகங்களைக் கழுவி விடுதல் வேண்டும். நகங்களைக் கடிக்கும் பழக்கம் நோய் விளைக்கக் கூடிய கெட்ட பழக்கமாகும்.



