வாழ்க்கை இன்பம்
கா. சுப்பிரமணியப் பிள்ளை

14. முழுக்கு

உடல் முழுவதும் நனையும்படி மூழ்குகின்ற வழக்கம் இக்காலத்திலேதான் ஆங்கில நாடுகளில் ஏற்பட்டது. குளிர் மிகுந்த நாடுகளில், முழுகுவது அசௌகரியமாகத் தோன்றும். மேலும் மத்திய காலத்தில், ஐரோப்பியப் பாதிரிகள் உடல் முழுக்கு உடம்பைச் சுத்தப்படுத்தினாலும், உயிரைப் புனித மாக்குவதில்லையென்று பேசினர். நல்ல முழுக்கு,

உடம்புக்கு அழகைக் கொடுத்துக் காம நோக்கத்தை விளைப்பதென்று அவர் கருதினர். இக்காலத்தில், ‘கடவுட்சார்புக்கடுத்தபடி புனிதச் சார்பு’ என் னும் கருத்தே பரவியுள்ளது. இந்திய நாட்டில் இக்கருத்து எக்காலத்திலும் பயின்று வந்துள்ளது. விடியற்காலையில், கதிரவன் உதிப்பதற்கு ஐந்து அல்லது மூன்றே முக்கால் நாழிகைக்குமுன் நாள் தோறும் எழுந்து, நீரில் மூழ்கிக் கடவுளை வழிபடுதல் சிறந்த நியமம் என்பது பண்டைத் தமிழரால் விதிக் கப்பட்டிருக்கின்றது. மத்திய வயது கழிந்த பின் நடுநடுங்கிக்கொண்டு குளிர்ந்த நீரிற்குளித்து வருந்த வேண்டுவதில்லை. குளிர்காற்று மிகுதியான இடத்திலே, குளிர்நீரில் மூழ்குதல் உடம்பிற்கு நடுக் கத்தைக் கொடுக்கும். யாதொரு நோவும் உணராது குளிர்நீரில் மூழ்குகின்ற முதியவரும் உளர். அவர் அவ்வாறு செய்தலாற் கெடுதியில்லை. வெளியே வெப்பமிகுந்த நாளில் குளிர்நீரிற்குளிப்பது இன்ப மாகத்தோன்றும். மிக வெப்பமான நீரில் மூழ்குதல் நல்லதன்று. நரம்பைப் பலவீனப்படுத்தித் தூக்கத்தை உண்டாக்கக்கூடிய முழுக்கு உடற்கு உறுதி செய்யாது. நம்முடைய நாட்டில் நாடோறும் ஒரு முறை முழுகுதல் நல்லதே. சிலர் ஒரு நாளில் மூன்று தரம் மூழ்குவதுண்டு. மிகுந்த வெப்பமுள்ள உடலினர் அவ்வாறு செய்யலாம்.

சோப்பு அதிகமாகப் பயன்படுத்தினால், அது தோலிலுண்டாகும் எண்ணெயை முற்றிலும் அகற்றி விடுமென்கிறார்கள். தோலிலுள்ள அழுக்கை நன்றாகத் தேய்த்து முழுகுவது அவசியம். அதற்காகத் தோலை ஊறுபடுத்தும் பொருள்களைப் பயன்படுத்துவது நன்றன்று. எலும்பு மூட்டு வாய்களில் வாத நோய் இருந்தால், அவற்றைத் தேய்த்து வெந்நீர் விடுவது நன்று. வயிறு நிறைய உண்டதும் வெந் நீரில் முழுகுதல் தக்கதன்று.. மனிதனைத் தவிர மற்றப் பிராணிகள் வெந்நீரை விரும்புவதில்லை. முழுகியவுடன் துண்டு கொண்டு உடம்பை நன்றாகத் துவட்டுதல் நல்லது.

இந்த புத்தகம் பிடித்திருந்தால்....

மதிப்பிட நட்சத்திரத்தைச் சொடுக்கவும்!!!

சராசரி மதிப்பீடு 0 / 5. வாக்கு எண்ணிக்கை: 0

இந்தப் பதிவிற்கு மதிப்பீடு அளிக்கும் முதல் நபராக இருங்கள்!!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *