
வாழ்க்கை இன்பம்
கா. சுப்பிரமணியப் பிள்ளை
22. நினைவாற்றலால் நோய் நீக்கும் முறை
உள்ளறிவு, புறஅறிவு என்னும் இருவகையறிவு நம்முள் இருக்கின்றன. புறஅறிவு தெளிவாக நமக்கு விளங்குகிறது. உள்ளறிவு அது போலப் புலனாவ உணர்ச்சி தில்லை. ஆதலால், இதனைத் தெரியா என்று கூறும் வழக்கமுண்டு. தூங்கும் போது படுக்கை விட்டெழுந்து நடந்து சென்று சில காரியங் களை நடத்தி, மீளவந்து துயில் கொள்ளும் ஒருவன் செயல் முற்றிலும் உள்ளறிவினால் நிகழ்வது. அவ் வறிவு, மிகுந்த நினைவாற்றல் உடையது; ஆனால், விவகாரமின்றி எதனையும் ஏற்றுக்கொள்ளுவது. அஃதே உயிர் சார்ந்ததன் வண்ணமாந் தன்மையை நன்கு புலனாக்குவது. உட்கருவிகளை மூளை வாயிலாக நடத்துவதும் அஃதேயென உளநூலார் கருதுகின் றனர். இதனைப் புனைவாற்றல் (Imagination) என்று மேலை நாட்டினர் கூறுவர். இஃது, ஆங்காரத்தினும் வலியுடையதென்பர். ‘இதைச் செய்வேன்!’ என்று தெளிவாகத் துணிந்தெழுவது ஆங்காரம் எனப்படும். உள்ளறிவு சித்தத்தின் தன்மையது. சித்தம் ஆங் காரத்தை வென்று காரியங்களை நடத்துமென்பது உளநூலார் கருத்து. ஓர் ஆடு போன வழியே பிற ஆடுகளும் போவதற்குக் காரணம், அவற்றின் உள் ளறிவே. அஃது ஒன்றைச் செய்தல் கூடுமென்று நினைத்தால், அதனாற் கூடியவரை அதைச் செய்து முடிக்கும். குடிகாரர் குடியை ஒழித்தல் இயலா தென்றெண்ணும் வரை அதை ஒழிக்க இயலாதராவர். செய்வேனென்றெழும் எண்ணமும், செய்தல் கூடுமென்ற நம்பிக்கையும் வேறு வேறாயிருப்பன. முன்னதை ஆங்காரம் (Will) என்பர்; பின்னதைச் சித்தம் (Imagination) என்பர்.
ஒரு கருத்தை நம்பும்படி செய்தலைக் குறிப்பித்தல் (Suggestion) என்பர் உளநூலார். தானே தனக்கு ஒரு கருத்தைக் குறிப்பித்துக்கொள்ளுதல், தற்குறிப்பு (Auto-Suggestion) எனப்படும். குறிப்பித்துக்கொள்ளுதலாவது, நம்பும்படி தன் உள்ளறிவைச் செய்வித்துக்கொள்ளுவது. அப்படிச் செய்வதால், நம்பிய நிலை இருப்பதாக எண்ணும் எண்ணம் ஒன்றே மனத்தை நிரப்பி நிற்பதால், அதன் மூல மாகப் பல நோய்களைக் குணமாக்குதல் எளிதென எமிலி க்யூ (Emile Cue) என்னும் பிரெஞ்சு அறிஞர் அனுபவமாகக் காட்டினர். ஏதாவது ஒரு நோய் நீங்கவேண்டுமானால், அது நீங்குகிறது, நீங்குகிறது என்ற சொல்லையே வேறொன்றுங் கருதாது சொல்லிக்கொண்டிருந்தால், அவ்வெண்ணத்தைச் சித்தமானது ஏற்றுக்கொள்ளுமானால், உடனே நோய் நீங்கக் இதனையே ஒன்றி நினைத்தல் எனவும் பாவனையெனவும் இந்நாட்டு நூல்கள் கூறும். கருட பாவனையிற்றேர்ந்தவர், விடத்தை நீக்க வல்லவராகின்றனர். பன்முறை ஒரு கருத்தை ஒரு வகையா கத் தீர்மானித்த சொற்றொடராற்கூறுவதே மந்திர உருவெண்ணல்போலும் ! நம்பிக்கை ஒருபுறமிருப்ப, மற்றொரு வகையாக ஒன்றைச் செய்ய உறுதி கொண்டாலும் பயன் பெற முடியாது. ஒன்றைச் செய்ய மனந் துணிந்தாலும், சித்தம் அது செய்ய முடியாதென்று நம்புமானால், மனத்துணிவு அதனை நிறைவேற்ற முடி யாது. நம்பிக்கையே மனத்துணிவினும் ஆற்றலுடை (Imagination will overcome the will). இரண்டும் ஒன்று சேர்ந்தால் நம்பிக்கையைத் துணிவானது பெருக்கும், ஒரு குறிப்பின் பொருளறியக் கூடாதவர்களும், அறிய விருப்பமில்லா தவர்களும் அதனாற்பயனடைய முடியாது. ஒன்றையே ஒரு நேரத்தில் மனம் அழுந்தி முழுவதும் எண்ணுமானால், அது செயலுக்கு வந்துவிடும்.
பிறர்க்கு இடுங்கட்டளையால், அவரைக் கருதியபடி செய்விக்கும் ஆற்றலுடையார், அத்தகைய கட்டளைகளால், நோயாளிகளின் வியாதிகளையும் குணப்படுத்துதல் கூடும். ‘கையை மூடு ; கண்ணைத் திற,’ என்று சொன்ன மாத்திரத்தில் கட்டளையிடப் பட்டவர், தாமாகவே அச்செயல்களைச் செய்யுமியல் பினராவர். இவ்வாறு பசியில்லா தவர்களுக்குப் பசி உண்டாக்குதலும், தூக்கமில்லாதவர் களுக்குத் தூக்கமுண்டாக்குதலும் தக்க பயிற்சியாளரால் செய்யப்படுகின்றன. ஒவ்வொரு நாளும்,எல்லா விதத்திலும் நான் மேலுமேலும் சுகமடைகின்றேன், என்று நம்பிப் பன்முறை சொல்லச் சொல்ல, உடம்பு நோய் நீங்கிச் சுகப்படுதலை அனுபவத்திற் பலர் கண் டுள்ளனர். நம்முடைய நாட்டிலே, முற்காலத்தில் குருமார்கள், இந்த முறையைப் பயன்படுத்தி மாணாக்கர்களை நல்வழிப்படுத்தினார்கள். ஒவ்வொரு நாளும் விடியற்காலம் படுக்கையை விட்டெழுமுன்னும், இரவு படுத்துறங்குமுன்னும், ‘எவ்விதத்திலும் நான் மேலு மேலும் சுகமடைந்துகொண்டிருக்கிறேன், என்னும் வாக்கியத்தை ஒரே விதமான ஒலி முறை யில் இருபத்தொரு முறை சொன்னால், உடம்பி லுள்ள எந்த நோயும் நீங்கிப்போமென்கின்றனர்.
ஒரு வைத்தியர் பெயர் பெற்றவராயிருந்தால், அவரிடத்திலுள்ள நம்பிக்கையால் நோய் குணமாவ தற்கும், உணரப்படாத தற்குறிப்பே (Auto-Suggestion) காரணமாகும். அத்தகைய மருத்துவர் ஒரு மருந்தின் சிறப்பை நன்றாகச் சொன்னால், அதை நம்புகிறவர்களுக்கு அம்மருந்தை உண்டவுடன் நோய் குணமாவதைக் காணலாம். தக்க வைத்தியர் களின் சொந்த மருந்தே, பிற மருந்துகளைக்காட்டி லும் நன்மை தருவதாகும். பித்து நோய்கள், நரம்பு நோய்கள் முதலியவற்றை நீக்க இம்முறை மிகவும் நன்றாகப் பயன்படும்.
ஆங்காரம் ஒழிந்த தன்னம்பிக்கையே, இயலு மளவுந் தக்க பயனளிப்பது. தன்னம்பிக்கை, ஒரே நினைவு. இடைவிடாதெண்ணுதல் என்பன வெற்றிக் குக் காரணமாவன. இம்முறையை எங்கும் பரப்பும் முயற்சி பெரும்பாலார்க்கு நற்பயன் விளைக்கும்.
ஒரு பிள்ளை கருவில் வளரும் பருவத்தே அஃது இன்ன பிள்ளையாய் இருக்க வேண்டும் என்றும், அதன் உடலியல்பு இவ்வாறிருத்தல் வேண்டும் என்றும், அதன் மனப்பாங்கு இத்தன்மையதாயிருக்க வேண்டும் என்றும் தாய் திண்மையாக எண்ணிக் கொண்டேயிருந்தால், குழந்தை நினைத்தவாறாகுமென அறிஞர் கருதுகின்றனர். பிள்ளைகளோடு பழகுவதில், தவறான கருத்துக்களைக் குறித்தல் கூடாது.
மிகக் கவனமாக அவர்களோடு உரையாட வேண்டும். சாந்தமாயும் மரியாதையாயும் அவர்களிடம் நடந்துகொள்ளுவதே நல்லது. அப்போது அவர்கள் இயற்கையாகவே கீழ்ப்படிதல் உள்ளவர்கள் ஆவார்கள். ஒருவரைப்பற்றியும் தவறாக அவர்கள் முன் பேசுதல் கூடாது. நல்ல வழியில் ஒவ்வொருவரையும் அவர்கள் நடத்தும்படி பழக்கம் உண்டாக்க வேண்டும். குழந்தைகள் கேள்வி கேட் டால், சமாதானமாக அவர்கள் மனத்திற் பதியும்படி விடையளிக்க வேண்டும். அச்சம், ஐயம் முதலிய உணர்ச்சிகளை அதிகமாகக் குழந்தைகள் மனத்தில் உண்டாக்கக்கூடாது. “வேலை செய்தலும் படித்தலும் நம் கடமை,” என்னும் உணர்ச்சியை உண்டாக்க வேண்டும். எல்லா மக்களையும் நேசிக்கும் மனப் பான்மையைப் பிள்ளைகளுக்குப் போதிக்க வேண்டும். தன்னம்பிக்கையும், காரியாகாரிய உணர்ச்சியும் அவர்கள் உள்ளத்தில் தோற்றுவிக்க வேண்டும். சமயங்களைத் தக்கபடி பயன்படுத்திக்கொள்ளும் முயற்சியில் அவர்களுக்கு ஊக்கம் உண்டாக்க வேண் டும். பெற்றோர்களும் ஆசிரியர்களும் தங்கள் நல் லொழுக்கத்தைப் பார்த்துப் பிள்ளைகள் திருந்துமாறு நடக்க வேண்டும். தூங்கும் போது குழந்தைகட்கு அருகே சென்று, நல்ல கருத்துகளை மெதுவாக ஒரே மாதிரிக் குரலிற்கூறினால், அவ்வுரை அவர்கள் மனத்தைப் பண்படுத்தும். சுருங்கக் கூறினால்,
“எண்ணிய எண்ணியாங் கெய்துப எண்ணியார்
திண்ணிய ராகப் பெறின்.”
என்னும் திருக்குறளின் பொருளை ஒவ்வொருவரும் தத்தம் மனத்திற்பதிவித்துக்கொண்டு, அதற்கிணங்கி நடந்தால், கூடிய அளவு வெற்றி கிடைக்கும்.
முற்றும்.
★ ★ ★



