வாழ்க்கை இன்பம்
கா. சுப்பிரமணியப் பிள்ளை

21. பொதுவான நோய் நீக்க முறைகள்

சாதாரணமாக வரக்கூடிய நோய்கள், அசீர ணம், அன்னவெறுப்பு, மலச்சிக்கல், மூலவுபத்திரவம் என்பன. விரைவாக உண்பதனாலும், மிகுதியாக உண்பதனாலும், நன்றாகச் சமைக்காத உணவுகளை உண்பதனாலும் தகாதனவற்றை உண்பதனாலும் ஒழுங்கான செரிமானம் தடைபட்டு உணவுவெறுப்பு ஏற்படும். வெறிப்பானங்களும் அந்நோய்க்குக் காரணமாவனவே.

புகையிலையும் அத்தன்மையதே உடற்பயிற்சிக் குறைவும் ஒரு காரணம். எளிதாய்ச் சீரணமாகும் உணவுகளையே உண்ணுதல் வேண்டும். பட்டினியிருத்தல் இதற்கு ஒரு பரிகாரமாகும். இரு பத்து நான்கு மணி நேரம் ஒருவன் உபவாசம் இருக்கலாம். நோவு இருக்குமிடத்தில் சுமார் இருபது நிமிடம் ஒற்றடம் போட வேண்டும். உடற்பயிற்சி அவசியம். கீழே படுத்துக்கொண்டு இரு கால்களை யும் அரைக்கு நேர் உயரமாகத் தூக்கிப் பின் தாழ்த் தலாகிய பயிற்சியை மெதுவாக மூச்சிழுத்து, ஒவ் வொரு நாட்காலையிலும் இருபது அல்லது முப்பது முறை செய்தால், மலச்சிக்கல் நீங்கிவிடும் என்பர். காலையில் எழுந்தவுடன் வெந்நீர் அல்லது தண்ணீர் குடித்தல் ஒரு முறை. மலச்சிக்கல் இல்லையானால் மூலவியாதி ஒழியும். வயிற்றோட்டம், வயிற்று உளைச்சல் என்பன வந்தால், போதுமான ஓய்வும் காரமில்லாத நீர்வடிவான உணவும் வேண்டப்படும். அரிசிக் கஞ்சியும் சுத்தமான பாலும் பயன்படுத்தலாம். காய்கறி, கனிகள் வேண்டப்படுவன அல்ல. வாயை அடிக்கடி சுத்தமாகக் கழுவுதல் நலம். அசுத்த மான் உணவையும் நீரையும் அகற்ற வேண்டும். ஈக்கள்  உணவுகளின்மேல் தங்க இடம் கொடுத்தல் கூடாது. நகங்களை வாயில் வைத்துக் கடித்தல் கூடாது. கடையில் வாங்குகிற பழங்களைத் தோல் சீவிக் கழுவிப் பயன்படுத்த வேண்டும். நோயாளர் உபயோகித்த சாமான்களைச் சுத்தப்படுத்தாமல் தொடுதல் கூடாது.

குடற்சுரம்: இதற்குரிய புழுவால் இந்நோய் உண்டாகிறது. நல்ல பாதுகாப்பு, தகுந்த உணவு என்னும் இரண்டுமே இந்நோய்க்கு முக்கிய மருந்து. நல்ல பாலைக் காய்ச்சிக் கொடுப்பது நல்லது. கஞ்சி முதலியவைகளைக் கொஞ்சமாகப் பயன்படுத்த வேண் டும். கொதித்த நீரை ஆற்றிப் போதுமான அளவு உட்கொள்ளலாம். வாயையும் பல்லையும் நாக்கையும் அடிக்கடி சுத்தப்படுத்த வேண்டும். வயிற்று வலி இருந்தால்,பதினைந்து நிமிடம் ஒற்றடம் போடலாம். மலச்சிக்கல் இருந்தால், வெந்நீர் எனிமா இரண்டு நாளுக்கு ஒரு முறை கொடுக்கலாம். சுரத்திற்குக் கடற்பஞ்சினாற் குளிர்நீர் தோய்த்து உடம்பில் ஒற்ற லாம். விசிறியினால் வீசிறித் தோலின்மேலுள்ள நீரைப் போக்கலாம். தலை வலி போவதற்கு மிகக் குளிர்ந்த நீரிற்பிழிந்த ஈரத்துணியைத் தலைமேற் போடலாம். மலத்தில் இரத்தங் கண்டால், பத்து மணி நேரத்துக்கு உணவு கொடுத்தல் கூடாது.

பனிக்கட்டி பொதிந்த துணியை வயிற்றின்மேல் வைக்கலாம். நோயாளியுடைகளைப் புழுக்கி வெளுத் தல் வேண்டும். மலசலக் கழிவுகளை எரித்தல் வேண்டும். நோயாளி உண்ட உணவின் மிச்சத்தை ஒருவரும் உண்ணக்கூடாது. நோயாளி உபயோகப் படுத்திய பாத்திரங்களைப் பிறர் உபயோகிக்கு முன் கொதிநீரில் அவற்றைக் காய்ச்ச வேண்டும். பாலினை நன்றாகக் காய்ச்சி உபயோகப்படுத்த வேண்டும். பாலின் வழியாக இந்நோய்ப்புழுப் பரவுதல் கூடும்.

வாந்தி பேதி : இந்நோய்க்கு எலுமிச்சம்பழரசத் தைக் கொதிக்க வைத்து ஆற்றப்பட்ட நீரிற்கலந்து கொடுக்கலாம். அன்னப்பால் தவிர வேறொன்றும் கொடுத்தல் கூடாது. உப்பு நீரை இரத்தக் குழாயுள் செலுத்துவதால் (Injection) இந்நோய் குணப் படும். நூற்றிருபது கிரெயின் உப்பை மும்மாகா ணிப்படிக் கொதிநீரிற் கலந்து கரைத்து, அதைக் காலில் அல்லது கையில் இரத்தக் குழாயிற் செலுத்த வேண்டும். பொட்டாசியம் பெர்மாங்கனேட்டில் ஐந்து அல்லது ஆறு கிரெயினை மும்மாகாணிப்படித் தண்ணீரிற்கரைத்து, இரண்டு அல்லது மூன்று அவுன்சு நீரைக் குடிக்கலாம். சிறுநீர் நிற்பது அபாய நிலைக்கறிகுறி. ஒரு படித் தண்ணீரில் எட்டுத் தேயி லைக்கரண்டியளவு அந்நீரால் உப்பைக்கரைத்து, எனிமாக் கொடுத்தல் நலம். வெறிப்பானங்களை உப யோகப்படுத்துதல் தவறு. மலக் கழிவுகளைத் தொத்து நீக்கும் மருந்தொடு சேர்த்து எரித்துவிடுதல் நலம்.

வாந்திபேதிப்புழு, வாய் வழியாகத்தான் உடம் பினுட்செல்லும். ஆதலால், உணவும் நீரும் கொதிக்க வைக்கப்பட வேண்டும். ஈக்கள் அவற் றில் தங்காமல் அவற்றைப் பாதுகாக்க வேண்டும். யாத்திரையின் போது சொந்தப் பாத்திரத்தில் நீர் பருகுதலும் உணவு கொள்ளுதலும் நன்மையாகும்.

நமது உடம்பிலுள்ள புழுக்களிற்சில, கெடுதி விளைப்பன. சிறுகுடலிலுள்ள வட்டப்புழு, நான்கு அல்லது ஐந்து அங்குல நீளமிருக்கும். சில வேளை அது குரல்வளை வரையில் வயிற்று வழியாக மேலேறி வரும். அது சிற்றாமணக்கு நெய் கொடுத்த பின் ‘சான்டோநின்’ என்னும் மருந்தில் அரைக் கிரெயின் கொடுப்பதால் கழிக்கப்படும். ஒரு வருடத்திற்கு முறை அம்மருந்தைக் குழந்தைகளுக்குக் கொடுப்பது நல்லது. வயிற்றிற் புழு மிகுதியாய் இருக்குமானால், குழந்தைகளுக்குப் பசியிராது; வாந்தியெடுக்கத் தோன்றும்; வயிற்றில் கோவு உண்டாகும், மருந்து நச்சுத் தன்மையுடையதாகலின், அதனை அதிகமாவது அடிக்கடியாவது கொடுத்தல் கூடாது. கொக்கிப்புழு (hookworm) ஓம மருந்தால் (thymol) ஒழிக்கப்படும். அது அரை அங்குலம் அல்லது ஓர் அங்குல நீளமிருக்கும்; நூலிழைத் துண்டு போல மெல்லியதாயிருக்கும். சரியான கக்கூசுகளிருந்தால். இப்புழு அதிகமாக உடம்பிற்புகுதற்கிடமிராது.

நூற்புழு, சிரங்குக்குக் காரணமாவது. நாடாப் புழு, புலாலுணவிற்கலந்து உட்புகுவது. அது பத்து அடி, இருபதடி நீளம் வளரும், பலரும் புலால் புசிப் பவர்கள் உடம்பில் ஒரு வகைப் புழு உண்டாய்த் தசைகளிற்கலந்து நோயுண்டாக்கும். ஆமணக்கு நெய், எனிமா என்பவற்றின்மூலம் அவற்றைக் கழித்தல் கூடும்.

காசநோய் : இருமல் (க்ஷய) நோயால், உலகிற் சாகின்றவர்களுள் ஆறிலொரு பங்கு பேர் மடிகின்றனர். துப்புகின்ற உமிழ்நீர் வழியாக அது பலர்க்கும் பரவுகிறது. உடம்பின் பலத்தை அதிகப்படுத்து வதால், அது குறைகின்றது. தூய காற்று, தூய உணவு, வீட்டுக்கு வெளியே நல்ல இடங்களில் உலா வுதல், ஓய்வு, கவலையின்மை என்பன வேண்டப் படும். நோயாளியின் படுக்கை முதலியவைகளைச் சில மணி நேரம் ஒவ்வொரு நாளும் வெயிலிற்போட வேண்டும். பாலும், கனிகளும், நன்றாய்ச் சமைத்த உணவுகளும் நோயாளிக்குக் கொடுக்கப்பட வேண்டும்.

அடிக்கடி குளித்து உடம்பைப் புனிதமாக வைத்துக்கொள்ள வேண்டும். பற்களைக் காலையிலும் மாலையிலும் விளக்குதல் வேண்டும் மன உற்சாகத் தோடு கடவுளை வழிபட வேண்டும். மலச்சிக்கலை ஒழித்துவிட வேண்டும். சோடாவுடன் சுடுபாற் கலந்து ஒரு கிண்ணம் காலையிற்பருகுதல் வேண்டும். பனிக்கட்டி நீரிற்றோய்த்த ஈரத்துணியை மார் பின் முன் பாகத்திற்போடுதல், இரத்த வாந்தியை நிறுத்தும். பனிக்கட்டி கிடையாவிட்டால் துணியைக் காற்றிலசைத்துக் குளிர்ச்சியாக்கி உபயோகப்படுத்தலாம். க்ஷயநோய் குணமான பின்னும், அது திரும்ப வாராமற் கவனமாய்ப் பாதுகாக்க வேண்டும்.

மலேரியாக் காய்ச்சல்: இது மலேரியா நோயா ளியைக் கடித்த கொசு, பிறரைக் கடிப்பதாற் பரவு கிறது. இரத்தத்தில் வளர்கிற ஒருவகைப் புழுவால் இந்நோய் உண்டாகிறது. எல்லாக் கொசுவும், மலே ரியாவைப் பரப்புவதில்லை. கொசு, கட்டுக்கிடை நீரில் உண்டாவது. ஓடும் நீரில் அது வளர்வதில்லை. வாத்தும் சிறு மீனும் தண்ணீரிலுண்டாகும் கொசு மூலங்களைத் தின்றழிக்கவல்லன. ஒரு பெரிய கரண்டி மண்ணெண்ணெயை ஒரு பீப்பாய்த் தண்ணீரில் தெளித்தால், அதிலுள்ள கொசு மூலங்கள் செத்தொழியும். கொசுவின் தொந்தரவு இரவிலேயே ஏற் படுவதால், கொசு வலைக்குட்படுத்துறங்குதல் நலம். ‘குனைன்’ என்பதுதான் மலேரியாவுக்கு மிகுதியாய் வழங்கும் மருந்தாகும். அது சாப்பிடுமுன், பேதிக் காகச் சிற்றாமணக்கு நெய்யை உபயோகித்தல் நலம். வேம்பு சம்பந்தமான மருந்துகள் நாட்டு மருத்துவ ராற் பயன்படுத்தப்படுகின்றன.

குட்டநோய் : இந்நோய் ஒரு வகை நோய்ப்புழு வால் ஏற்படுவது. இது உணவால் ஏற்படுவதில்லை. இது தொடங்கியவுடன், மருத்துவரைக்கொண்டு கவனிக்கவேண்டும். ஓடுகின்ற ஆற்று நீரில் விடியற் காலம் நாலரை மணிக்கு முழுகினால் இது விரைவிற் குணமாதல் கூடும் என்பர்.

கண்ணிலுள்ள துரும்பு, தூசு முதலியவற்றை எடுக்கப் போரிக்குப் புளினிக் கலவையில் ஒரு துளி விடுதல் நல்லது. சுண்ணாம்பு பட்டால், ஒரு கிண்ணத் தண்ணீரில் ஒரு சிறு கரண்டிக் காடி சேர்த்து, அதனாற் கண்ணைக் கழுவுதல் நலம். காதிலுள்ள அழுக்குகளை எடுப்பதற்குச் சோடா உப்புக் கலந்த வெந்நீரைக் காதில் விட்டு வைத்து வெளியே அதனைக் கவிழ்க்கலாம்.

காயம்: காயம் பட்ட உடற்பகுதியில், முதலில் பனிக்கட்டி அல்லது குளிர்ந்த நீரை வைக்க வேண் டும்; அல்லது வெந்நீரில் நனைத்த துணியை வைக்க லாம். கீறல் ஏற்பட்டால், ‘ஐயோடைன்’ கலந்த நீரால் அதைத் துடைத்துச் சுத்தமான துணியாற் கட்டவேண்டும். போரிக்குப் பொடியையுந் தூவ லாம். கால் கைகளுக்குக் கட்டுந் துணி சுமார் இரண்டு அங்குல அகலம் இருக்க வேண்டும். விரல் களுக்கு அரையங்குல அகலத் துணி போதும். இரத் தம் அதிகமாய் வடிந்தால், இரண்டு பெருவிர லாலும் காயத்திற்கு மேலுள்ள மென்மையான பாகத்தை அழுத்தவேண்டும். கைக்குட்டையை அல் லது வேறு துணியை இலேசாகக் காயத்தின்மீது போட்டு, ஒரு கழியினால் அதனை முறுக்கி, மெல்ல மெல்ல இறுக்குதல் வேண்டும். இரத்தம் வடிகிற இடத்திற்கு நேராகத் துணி மடிப்பில் ஒரு சிறு உருண்டைக் கல்லை வைத்தும் அழுத்தலாம். இரத் தம் வடிகிற உறுப்பை ஒரு வகையான உயரத்தில் வைத்து, அதைத் தாங்கும் ஆதரவு அமைக்க வேண் டும். இரத்தம் நின்றவுடன், துணியை மெதுவாகக் களைதல் வேண்டும். பிற்பாடு, ‘ஐயோடைன்’ நீர் தடவித் தூய நீரிற்காய்ச்சிய பஞ்சு வைத்துக் கட் டுப் போடவேண்டும். தலையிலிருந்து இரத்தம் வடிந் தால் ‘ஐயோடைன் ‘ நீரில் நனைத்த மெல்லிய துணி. யைக் காயத்தின்மேற்போட்டு, அதன்மேல் சுத்த மான துணிகளை மெத்தைபோலடுக்கி அழுத்தவேண் டும். போரிக்குக் கலவையில் நனைத்த துணியைச் சீவந்திருக்கும் காயங்களின்மீது நெருக்கமாகப் போட வேண்டும். போரிக்குப்பொடி கிடையாமற் போனால், அதற்குப் பதிலாக உப்பை உபயோகிக் கலாம்.

புண் : கையிலோ காலிலோ சலம் வடிகிற புண் ணைக் குணப்படுத்த இரண்டு வாளிகள் எடுத்து, ஒன் றில் நன்றாகச் சூடுள்ள நீரும், மற்றொன்றில் மிகக் குளிர்ந்த நீரும் வைத்து, புண்ணுள்ள பாகத்தை முதலில் வெந்நீரிலும், பின்பு தண்ணீரிலுமாக மாற்றி மாற்றி இருபது நிமிடம் வரை வைத்தெடுக்க வேண்டும்.

சுளுக்கு சுளுக்கு ஏற்பட்டால், அரை மணி நேரம் சுடுகிற நீரில் பாதிக்கப்பட்ட பாகத்தை வைத்திருந்து, சுளுக்குக்குக் கீழிருந்து மேலாகவும், மேலிருந்து கீழாகவும் தடவிக் கட்டுப்போட வேண்டும்.

எலும்பு முறிவு : எலும்பு ஒடிந்தால், ஒடிந்த பகுதிகளை அசையா தபடி வைத்து, இரு பக்கத்திலும் மூங்கிற்பட்டை வைத்துக் கட்ட வேண்டும். கை எலும்பு ஒடிந்தால், பட்டை இரண்டங்குல அக லமும் ஓர் அடி நீளமும் இருக்க வேண்டும். கால் எலும்பு ஒடிந்தால், அது இடுப்பு முதற் பாதம்வரை நீளமுள்ள பட்டையாயிருத்தல் வேண்டும். மெதுவாகக் கையை அல்லது காலை நீட்டி ஒடிந்த எலும்புகள் பொருந்தும்படி நேராக வைத்துக் கட்டுப்போட வேண்டும். ஒடிந்த பொருத்துகளைச் சுற்றித் திட்ப மான பஞ்சு மெத்தை வைத்து அதன்மேற் பட் டையை வைக்க வேண்டும். எலும்பு பொருத்தை விட்டு நழுவியிருந்தால், வைத்தியர் உதவியை உடனே நாட வேண்டும்.

தீப்புண் முதலியன: தீப்பட்டபுண்ணில், தேனைத் தடவுவது வழக்கம். புண் பாகத்தைக் குளிர்ந்த நீரில் முழுக்கியெடுத்து, ‘வாசிலைன்’ அல் லது தேங்காய் நெய் தடவலாம். புண்ணைக் குளிர்ந்த நீரில் இருபது நிமிடம்வரை வைத்திருக்கலாம். வெந்நீரால் வெந்து போன இடங்களில், அரைக்காற் பங்கு ‘பிக்ரிக்கு ஆஸிடு’ (Picric acid) கலந்த நீரைத் தெளித்துத் தடவலாம். ஆணி பிடுங்கிய இடங்களில் ஐயோடைன் ‘நீரிற்றோய்த்த பஞ்சை அழுத்தி வைத்தல் வேண்டும்.

விஷக்கடி: நாய், பாம்பு முதலியவை கடித்தால், கடித்த இடத்தைச் சுற்றி ஒரு கயிற்றை நன்றாகக் கட்டி வைக்க வேண்டும். பாம்பின் பல் பட்ட இடத் தில் கத்தி நுனியாற்குத்தி இரத்தத்தை வெளியாக்க வேண்டும். தேள் கொட்டினால், ஊசியாற்குத்தினாற் போதும். ஒரு கரண்டி நீரில் பொட்டாசியம் பெர் மாங்கனேட்டுத் துண்டுகளைக் கரைத்து அதிற் றோய்த்த பஞ்சைத் துவாரங்களில் அழுத்த வேண் டும். இரண்டு பெரிய கரண்டி நீரில் இம்மருந்தில் ஐந்து கிரெயின் கரைத்து உட்செலுத்தலாம் (injection). தேள் கொட்டின இடத்தை நீரில் நனைத்து இம் மருந்துத்தூளை அதன்மேல் தூவுவதும் உண்டு.

பித்த மயக்கம் ஏற்பட்டால், குளிர்ந்த நீரை மார்பிலும் தலையிலும் விட வேண்டும். நஞ்சு உட் புகுந்தால், வாந்தியெடுக்க வழி தேட வேண்டும். கார்பாலிக்குப் புளினி உட்சென்றால், நான்கு அல்லது ஐந்து முட்டைகளை உடைத்துக் குடித்தல் போது மாம்.

பல் வலிக்குக் கிராம்புத் தைலத்தில் நனைத்த பஞ்சை வலியுள்ள இடத்தில் அழுத்த வேண்டும்.

இந்த புத்தகம் பிடித்திருந்தால்....

மதிப்பிட நட்சத்திரத்தைச் சொடுக்கவும்!!!

சராசரி மதிப்பீடு 0 / 5. வாக்கு எண்ணிக்கை: 0

இந்தப் பதிவிற்கு மதிப்பீடு அளிக்கும் முதல் நபராக இருங்கள்!!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *