
வாழ்க்கை இன்பம்
கா. சுப்பிரமணியப் பிள்ளை
3. பற்கள்
நிலைவரமில்லாத பற்கள் குழந்தைகளுக்கு முதலில் முளைக்கும். அவற்றை அடிக்கடி சுத்தப்படுத்த வேண்டும். அப்படிச் செய்யாவிட்டால், நிலைவரமான பற்கள் உண்டாவதற்கு முன்னே அவை விழுந்துவிடும். அவை விழுந்துவிட்டால், நிலை வரமான பற்கள் தோன்றும் பொழுது சரியான இடத்தில் முளையாமல், முன் நீண்டும், பின் குழிந்தும், நடுவில் வளைந்தும் தெத்துக் குத்தாய் முளைக்கும். நிலைவரமான பற்கள் ஆயுள் முழுதுந் திறமாய் இருக்க வேண்டும். உணவை நன்கு சுவைப்பதற்கும் சொற்களைத் தெளிவாக உச்சரிப்பதற்கும் அவை துணை செய்வன. பற்களில் உண்டாகும் ஊத்தையில் இலட்சக்கணக்கான புழுக் ள் உண்டாகின்றன. அவை உணவோடு கலந்து வயிற்றுக்குட் சென்றால், அவை உணவைப் புளிப் புடையதாக்கிச் சீரணக் குறைவை உண்டாக்கும். பல்லிலுள்ள புழுக்கள் தொண்டையிலுள்ள தசைத் திரள்கள், மூக்கு, காது, சுவாசப்பை என்பவற்றிற் புகுந்து, பல வகையான நோய்களை விளைக்கும். அது கெட்ட நாற்றத்தை உண்டாக்கும். அந்நாற்றத் தோடு கலந்த வாயுக்கள் சுவாசப்பையுட்சென்றால், அவை அதன் வழியாக இரத்தத்திற்கலந்து உடம்பு முழுவதுக்குந் தீமை விளைக்கும்.
உணவின் சிறு துகள்கள் பல்லில் ஒட்டிக்கொண்டிருந்து அழு கிப் போய்ப் பற்களையும் அழுகும்படி செய்யும். ஒரு பல் அழுகத் தொடங்கினால், அதற்கு அடுத்த பல்லும் அழுகும். உணவுத் துகள்கள் பற்களுக்கு இடையிலுள்ள ஈறுகளில் ஒட்டிக்கொள்ளும். அவற் றிற் புழு உண்டானவுடனே ஈறு இளகிப்போய்ப் பற்களின் வேரிலிருந்து விரைந்து விலகும். பற்களுக்குகும் ஈற்றிற்கும் இடையே புழுக்கள் தங்கிச் சலம் வைத்து நோவுண்டாக்கும். அதனால் முடிவாகப் பற் களை எடுக்கவேண்டிய நிலை உண்டாகும். ஆதலால், பற்களை அடிக்கடி சுத்தப்படுத்த வேண்டும். அதாவது, ஏதாவது உணவு உட்கொண்டதும் அதன் துகள்கள் தங்கவொட்டாமல் நன்கு அவற்றை கழுவி விடவேண்டும்.
பொதுவாக ஒவ்வொரு நாட் காலையிலும் இரவில் படுக்கப் போவதற்கு முன் னும் பற்களைச் சுத்தப்படுத்துதல் நலம். பற்குத்தி உபயோகப்படுத்துவதானால், அது மரத்தினால் செய் யப்பட்டிருத்தல் வேண்டும். ஆலங்குச்சி, வேலங்குச்சி முதலியனவும் சிறப்பாகப் பயன்படுவன. பற்களுக்குக் கெடுதி செய்யாத பொடிகளையும் பயன் படுத்தலாம். பற்களுக்கு இடையே நுட்பமாய் இருக் கும் துகள்களை நுண்ணிய நூலினாற்களைதலும் உண்டு.
உப்பும், வெற்றிலைச்சாறும் பற்சுத்திக்குப் பயன்படுவனவே. செயற்கைப் பற்குச்சு (Brush) உப யோகப்படுத்துபவர்கள், அதை உபயோகித்த பின் அதன்மீது உப்புப் பொடியிட்டு வைத்திருந்து சுத் தப்படுத்தினால் அதிலுள்ள புழுக்கள் மாயும். நன்கு காய்ச்சின நீரினைக்கொண்டு பல்லைக் கழுவுதல் சிறந்தது.ஒரு பல் அழுகிவிட்டால், அதை உடனே பல் வயித்தியர் உதவிகொண்டு எடுத்துவிட்டு அதற் குப் பதிலாக வேறு பல் வைத்துக்கொள்ளுதல் நலம்.



